பொருளடக்கம்

1. எந்தநாள் காண்போம் இனி

நண்பர் மோதி ராஜகோபால் காலமாகிவிட்டார். இந்தச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடையவில்லை; மனம் கலங்கினேன். அந்தக் கலக்கம் நாளுக்கு நாள் அவர் நினைவால் பெருகுவதன்றிக் குறையக் காணோம். என்னால் அழ முடியாது. மரணம் போன்ற துயரங்கள், அழுதால் தீருவதில்லை என்கிற அறிவு இருப்பதால், எந்த மரணத்துக்கும் நான் அழுவதில்லை. சிலரது இழப்புகள் நம்மில் ஒரு பாகத்தை நாம் இழந்தது போன்ற உணர்வைத் தருகின்றன! அவ்வித இழப்புகளில் ஒன்று மோதியின் மரணம்.

அவரை அறிந்தவர்கள் எல்லாம் அவரது சீலங்களையும் பண்புகளையும் அறிவர். நல்ல மகன். நல்ல தந்தை. நல்ல நண்பர். அன்பு நிறைய உடையவர். அன்பர்களைத் தேடி அணைத்துக் கொள்பவர். நல்ல இலக்கியங்களால் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர்!

என் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். சிந்தை குளிரச் சிறித்தொளிறும் உன் முகத்தை எந்த நாள் காண்பேன் இனி… என்று என் மனம் மோதியின் மரணச் செய்தி கேட்டது முதல் கலங்கிப் புலம்பிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆறுதல் ஏது?

என்னிலும் வயது குறைந்த நண்பர்களை இழக்கும்தோறும் எனக்கு ஏனோ ஒரு குற்ற உணர்ச்சி உறுத்துகிறது. “நமக்கும் அதுவழியேநாம் போம் அளவும், எமக்கு என்னஎன்று இட்டு உண்டு இடும்” என்பதும் அவ்வைப் பாட்டி நமக்கெல்லாம் கூறிய அறிவுரை! எதையும் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.

நமது நினைவில் இனி மோதி நிரந்தரமாய் வாழ்வார். அவரது குடும்பத்தினருக்கு நாம் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு ஆறுதல் கூறுவதா, அல்லது அவரது குடும்பத்தினர் அவரை இழந்து வாடும் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதா?

காவிரியும் சீரங்கமும் கொள்ளிடக்கரையும் திருவானைக்காவும் இனி எனக்கு வெறிச்சோடிக் கிடக்கும். இன்னும் ஒருக்கால் அங்கெல்லாம் ஏகிடில் இந்த ஏழை மனம் என்படுமோ?

– திரு. ஜெயகாந்தன்

2. மோத்தி என்கிற முத்து

வெ. இறையன்பு I.A.S

ஒரு நாள் ஜெயகாந்தன் அவர்கள் என்னிடம் பேசும்போது, நான் இங்கர்சாலுடைய புத்தகங்கள் அதிகம் தமிழ்நாட்டில் வாசிக்கக் கிடைப்பதில்லை என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாகவும், அதைக் கேட்டு அவருடைய நண்பர் இங்கர்சாலுடைய புத்தகத்தை அனுப்பி வைக்க விரும்பியதாகவும் தெரிவித்தார். அப்படி இங்கர்சாலின் அரிய நூலின் மூலமாக அறிமுகமானவர்தான் திரு. மோத்தி எஸ். ராஜகோபால்.

மதுரையில் பணியாற்றியபோது திரு.மோத்தி எஸ்.ராஜகோபால் அவர்களை நேரில் சந்திக்க நேர்ந்தது. படிப்பதில் அவருக்கு இருந்த தீராத தாகம் அவர் பேச ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே உணரும்படியாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை வாசிப்பது ஒரு வேள்வி. எந்தப் பிரதிபலனும் இல்லாமல் வாசிக்கிற சுகத்திற்காகவே வாசிப்பவர் அவர். எந்தத் தலைப்பைப் பற்றியும் அவரால் பேச முடியும். ஆனால், தன்னுடைய மேதாவிலாசத்தை வெளிக்காட்ட ஒருபோதும் அவர் முயன்றதில்லை. அதற்காகவே, அவரை எனக்கு அதிகம் பிடித்திருந்தது. அதற்குப் பிறகே அவர் “ஜெய ஜெய சங்கரா” நூலைப் பதிப்பித்தவர் என்கிற விவரமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.

அவர் தனக்கு ஜெயகாந்தன் அவர்களிடம் இருந்த பரிச்சயம் பற்றிக் குறிப்பிடுவார். மற்றவர்களுக்குத் தெரியாத பல பரிமாணங்கள் அவருக்குத் தெரிந்திருந்தது. மதுரையின் ஓய்வு, அவரை நிறைய முறை சந்திக்க என்னை அனுமதித்தது. அவர் செயலராக இருந்த உறுமு தனலட்சுமி கல்லூரிக்குப் பேச என்னை அழைத்திருந்தார். அப்போது அவர் வீட்டில் மதிய உணவு அருந்தினோம். உறுத்தாத உபசரிப்பு. மென்மையான அணுகுமுறை. பருப்பு பொடியை ரசத்தில் கலந்து சாப்பிட அவருடைய வீட்டில்தான் கற்றுக்கொண்டேன். அன்று அவருடைய வாசிப்பு வாழ்வோடு தொடர்புடையது என்பதை நான் உணர்ந்தேன். என்னுடைய புத்தகங்கள் பெரும்பாலும் படித்தவற்றின் அடிப்படையில் இருப்பதாக அவர் கோடிட்டுக் காட்டுவதுண்டு. புனைவியல் படைப்பிலக்கியம் நம் அனுபவங்களை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தும் ஊடகமாகத் திகழும் என்று நான் நினைப்பதுண்டு. ஒரு வகையில் என்னைப் படைப்பிலக்கியங்களை நோக்கித் திருப்பிவிட்ட மாற்றம் திரு. மோத்தி அவர்களால் நிகழ்ந்தது என்றே நான் நினைக்கிறேன்.

திருச்சியில் கூடுதல் பொறுப்பு வகித்த போது, நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு அவர் வருவார். நாங்கள் இருவரும் மதிய உணவைப் பகிர்ந்து கொண்டே பல செய்திகளைப் பரிமாறிக் கொள்வோம். அவருடைய ஆழமான வாசிப்பு திருச்சி மாநகர் முழுமைக்கும் தெரியும். என் சகோதரர் திருப்புகழ் அவரைப் பற்றிச் சிலாகித்துப் பேசியதுண்டு.

சென்னைக்கு வந்த பிறகு ஓரிரு முறைகள்தான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்த உரையாடல். என்னுடைய “வாழ்க்கையே ஒரு வழிபாடு” என்ற நூல் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், பலருக்கு அதை வாங்கிப் பரிசளித்ததாகவும் அவர் கூறியபோது உண்மையிலேயே மகிழ்ந்தேன். அத்தனை சீக்கிரம் எதையும் அவர் பாராட்டிவிடமாட்டார். அவரோடு அதிகம் பழக முடியாத நேர நெருக்கடி எனக்குச் சோர்வையே அளித்தது. வாழ்க்கையின் பரபரப்புகளில் நம் ஜீவ அடிநாதத்தைத் தொலைத்துவிடுகிறோம் என்றே தோன்றுகிறது. திடீரென்று ஒருநாள் தொலைபேசியில் அழைத்து “உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பி வைக்கிறேன்” என்றார். இரண்டு நாட்களில் ஹெச்.ஜி. வெல்ஸ் புத்தகத்தை அனுப்பி வைத்தார். மறுவாரம் அவர் மறைந்த துயரச் செய்தி எனக்குக் கிடைத்தது.

மோத்தியைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புத்தகம் நடந்து வருவது போலத்தான் எனக்குத் தோன்றும். சற்று கனமான கலைக்களஞ்சியம் போல. இப்போதுகூட அவர் இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. பலர் இருக்கின்ற போதே இல்லாத உணர்வு ஏற்படுகிறபோது இல்லாத போதும் இருக்கின்ற உணர்வை உண்டாக்குவது மகத்தான சாதனைதானே!

3. எறிகதீர் நித்திலம்

நாஞ்சில் நாடன்

முத்தொள்ளாயிரத்தில் ஒருவெண்பா.

“இப்பி யீன் றிட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே அல்ல படுவது கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும்”

என்று பேசும். அதாவது சிப்பியின் வயிற்று, நிலாப் போல ஒளி எறியும் முத்துக்கள் கொற்கையில் மாத்திரமே விளையும் எனச் சொல்லல் தகாது. குருதி தோய்ந்த வேலேந்திய கொற்கைப் பாண்டியன் மாறனது குளிர்ந்த சந்தனம் பூசியமார்பைத் தழுவ வேண்டும் என்று காதல் நோயுற்ற பெண்களின் கண்களிலும் விளையும், காதல் நோயுற்ற பெண்களின் கண்ணீர்த் துளிகளுக்கு கொற்கை முத்துக்கள் உவமை.

மூத்த இலக்கியவாதி ஜெயகாந்தனின் நட்பு உள்வட்டத்தைச் சார்ந்தவர்களுக்குத் தெரியும். நன்முத்துக்கள் கொற்கையில் மட்டுமல்ல விளைவது, திருச்சியைச் சார்ந்த மோதி ராஜகோபால் நெஞ்சிலும் விளைந்தது என்று.

மோதி என்ற வடசொல்லின் பொருள் முத்து என்பது. மோதிலால் நேரு என்னும் பெயரை நினைவுக்குக் கொணரலாம். தகவல் அடிப்படையில் ஜெயகாந்தனின் “ஜெயஜெய சங்கர” வெளியிட்ட மோதி பிரசுரம் உரிமையாளர் மோதி ராஜகோபால் என்னும் அறிவே எனக்கு முன்பு இருந்தது.

தந்தை இறந்த பிறகு குடும்பம், வியாபாரம், தொழில் என்று கவலையற்று திரிந்தவரை நங்கூரம் இட்டு ஆற்றுப்படுத்தியது ஜெயகாந்தனின் நட்பு எனச் சொல்லியிருக்கிறார் பலமுறை. எனவே ஜே.கே. மீது அவருக்கு மதிப்பு, மரியாதை மட்டுமல்ல பக்தியும் கூட என்னச் சொல்லலாம்.

தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மோதி, தொழில் வளர்த்து, குடும்பம் பேணி, தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் ஆங்கிலத்தில் எந்த நூல் பற்றியோ, நூலாசிரியர் பற்றியோ அவரிடம் ஐயம் கேட்கலாம். தங்கு தடையற்று மேற்கோள் காட்டுவார். Conversations with God, மூன்று தொகுதிகள் அவர்தான் எனக்கு வாங்கித் தந்தார். Neale Donald Walseh எழுதியது. Eckhart Tolle எனும் ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.

நான் மட்டுமல்ல, எனது மகள், மகன் இருவருமே மோத்திக்கு நண்பர்கள். என் மகன் என்னிடம் இருந்த Carlos Castaneda புத்தகங்கள் ஐந்து வாசித்திருந்தான்.

  1. Journey to Ixtaln: The Lesson of Don Juan
  2. Tales of Power
  3. A Separate reality
  4. The Teaching of Don Juan: A yaqui way of knowledge
  5. The Eagles Gift

மேலும் மூன்றுசொன்னார் மோதி.

  1. The Art of Reaming
  2. The Power of Silence: Further Lessons of don Juan
  3. The Fire from within

சொன்னது மாத்திரமல்ல, வாங்கிப் படித்தாயா என்றும் கேட்டார். உலகப் போர் பற்றிய புத்தகங்கள் அவன் விரும்பி வாசிப்பவை. அவரிடம் Edward Gibbons எழுதிய The Decline and Fall of the Roman Empire, 1962இல் வெளியானது இருக்குமா எனக் கேட்டான். அந்த நூல் மூன்று பாகங்கள். கி.மு. 27 முதல் கி.பி.1453 வரையிலான உரோமப் பேரரசு பற்றிப் பேசுவது, அவன் அப்பொழுது 12ஆவது வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தான். நேரில் வருவதானால் தருவேன் என்று சொன்னார் மோதி. மூன்று நாட்கள் அவருடன் தங்கி இருந்து பெரிய அட்டைப் பெட்டி நிறைய ஐம்பது அறுபது புத்தகங்களுடன் வந்தான்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக அபூர்வமான புத்தகங்கள் இருந்தன அவரிடம். இரவல் தருவார். ஞாபகமாய் கேட்டு வாங்கியும் கொள்வார். வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் திருக்குறள் உரையை அவர் வீட்டில்தான் பார்த்தேன். எனக்குத் தருவதற்காக ஒருமுறை தேடினார், கண்படவில்லை. பலமுறை வெளிநாடு போய் வந்தவர், நல்ல புத்தகங்கள், இசைக் குறுந்தகடுகள் என வாங்கி வருவார். இசையில் நல்ல நாட்டமுண்டு. பலமேனாட்டு இசைமேதைகளின் குறுந்தகடுகள் வைத்திருந்தார். மிகவும் துல்லியமாக இசை கேட்கும் மின் சாதனங்கள் அவரிடம் இருந்தன. பின்னிரவுகளில் ஆழ்ந்த மௌனத்துடன் அவருடன் அமர்ந்து கேட்டதுண்டு. பலநாட்கள் தேடிக் கொண்டிருக்கும் புத்தகங்களை மோதிசாரிடம் குறிப்பிட்டால் போதும் எங்கிருந்தாவது கொண்டு சேர்ப்பார். தமிழ் வளர்ச்சிக் கழகம் 1963ல் முதற் பதிப்பு கொணர்ந்த, நாற்பத்தாறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறுபதிப்புக் காணாத பெரியசாமித் தூரனின் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளில் நான்கு இன்று என் கைவசம் இருப்பது மோதி புண்ணியத்தில்.

திருச்சிக்குவேறு எந்த வேலையும் இல்லாது போய் அவருடன் உரையாடித் திரும்புவது எனது புலவர் தொழில். திரும்பும் போது பெரும்பாலும் இரவு 11.30க்கு மேல் பேருந்து பிடிப்பேன். கோவைக்கு காலை 5 மணிக்கு வரும் தோதில், பேருந்து நிலையத்தில் சேர்ந்த பிறகு நான் இருக்கை பிடித்து அமர்ந்த பின்பும், பேருந்து புறப்படும் வரை நின்று கொண்டிருப்பார். நகரின் பெரிய செல்வந்தர், முக்கியமான கல்லூரியின் செயலாளர், பல சேவை அமைப்புகளில் இயங்குபவர், ஆங்கிலமும் தமிழும் ஆய்ந்து கற்றவர், எளிய எழுத்தாளனுக்கு வேண்டி இரவு பன்னிரண்டு மணிக்கும் காத்துக் கிடப்பதை என்னால் தாங்க முடிந்ததில்லை.

ஜே.கே-யுடன் மோதியின் பல பயண அனுபவங்கள், சபரிமலை ஏறியது முதலானவை கேட்க மிகச் சுவையானவை. ஒருமுறை Angio-plasty செய்து கொண்டதைத் தவிர வேறேதும் உடற்கோளாறுகள் கிடையாது. எதையும் வருகிற விதத்தில் எதிர்கொள்கிறவர். யாரையும் புண்படுத்திப் பேசமாட்டார். ஜே.கே. உண்டை கொடுத்ததைக் கூட நகக்குறி என எண்ணி நாணுகிறவர். ஆம்! மோதி ஒரு அற்புதமான நண்பர்.

‘வார்த்தை’ இதழில் நாஞ்சில் நாடன் எழுதிய
திரு. மோதி எஸ். ராஜகோபால்
குறித்த கட்டுரையின் சில பகுதிகள் மேலே தரப்பட்டுள்ளன.

4. பழகுதற்கு இனிய பண்பாளர் மோத்தி

ஜெயக்குமார். (J.K.) ஓவியர் கலை இயக்குனர்

திரு. “மோத்தி” ராஜகோபால் அவர்களை முதன்முதலில் எழுத்தாளரும், நண்பருமான திரு. ஜெயகாந்தன் அவர்களின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நான் சந்தித்தேன்.

மாலை சுமார் ஐந்து மணி இருக்கும் ஜெயகாந்தன் அவர்களும், மோத்தி அவர்களும் உற்சாகமாய் பேசி கொண்டிருந்தார்கள். ஜே.கே அவர்களுடன் இணக்கமுடனும், புன்சிரிப்புடனும் பேசி கொண்டிருக்க மோத்தி அவர்கள் அன்புடன் ஆமோதித்து அதை ரசித்து கொண்டிருந்த நேரத்தில் அந்த மடத்துக்குள் நான் சென்றேன். மோத்தியும் நானும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானோம்.

சென்னை ஓவியக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரமது. “ஜெயகாந்தன் முன்னுரைகள்” என்னும் புத்தகத்திற்கான முகப்பு மேலட்டைக்கான வடிவமைக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்திருந்தார் திரு. ஜே.கே. அதற்காக. திரு. ஜே.கே அவர்களின் மார்பளவு சிலை ஒன்றை அவரது அலுவலகத்திலேயே செய்து கொண்டிருந்தேன்.

எழுத்தாளரை மாடல் போல pose எதுவும் கொடுக்க நிர்பந்திக்காமல் அவரை எட்ட இருந்தே, நான் கூர்ந்து கவனித்து Creative ஆக உருவாக்கிய சிற்பம் அது.

அடுத்த சில தினங்களில் முடிக்கப்பட்ட “Portraito” சிலையை நண்பர் மோத்தி அவர்களும் மனம் கனிந்து பாராட்டி என்னை உற்சாகப்படுத்தினார். பாராட்டோடு நிறுத்தாமல் அந்தச் சிலையை பிரதியெடுக்க ஆகும் செலவினங்களையும் தான் ஏற்றுக்கொள்ளுவதாகக் கூறினார்.

புகழ்பெற்ற பிரான்ஸ் சிற்பியான “Rodin” பற்றி France தேசத்து சிற்பியான மெக்கெலாஞ்சலோ பற்றியெல்லாம் அவர் பேசியது, என்னை அவரது கலையார்வத்தை பற்றியும்கல்வியறிவு பற்றியும் உணரவைத்தது.

நான் வடித்த ஜே.கே. அவர்களின் சிற்பமானது சிற்பி ரோடின் செதுக்கிய பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் அவர்களைப் போன்ற கலாபூர்வமாக அமைந்திருந்தது என்று வெகுவாக மோத்தி அவர்கள் பாராட்டுரை தந்தது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்றைய மேற்கத்திய சமுதாயத்தில் எழுத்தாளர்களும், ஓவியர்களும், சிற்பிகளும் ஒருவரோடு ஒருவர் கருத்தொருமித்து கலைச் சேவை புரிந்தனர் என்பதைப் பற்றியெல்லாம் திரு. மோத்தி அவர்கள் உதாரணங்களோடு விவரித்தது அவரது பரந்த அறிவுக்கூர்மையை விளக்கியது.

முடிவாக ஜே.கே. அவர்களின் சிற்பத்தைப் பிளாஸ்டரில் பிரதியெடுக்கத் தேவையான மெட்டீரியல்கள் (பொருட்கள்) உதவியாளர்களுக்குத் தரவேண்டிய பண உதவி அனைத்தையும் செய்து தந்தார் நண்பர் மோத்தி. அவரை கவுரவிக்கும் பொருட்டு நானும் அந்த உதவிகளைப் பெற்று கொண்டு மனமார்ந்த நன்றி சொன்னேன். அந்த எனது மாணவப் பருவத்தில் அது மட்டுமின்றி என் உடனிருந்து சிலை வடித்து முடியும் வரை வார்த்தைகளாலும் பண உதவியாலும் உற்சாகப் படுத்தியவரை நான் இன்னும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.

பின்னாட்களில் தமிழ் இலக்கிய உலகில் புதுமை முயற்சியாக மாதம் ஒரு நூல் வெளியிடும் முயற்சியில் நண்பர் திரு.ஜே.கேவினால் எழுதப்பெற்ற “ஜெயஜெய சங்கர” நூலின் முகப்பு ஓவியத்தையும் Illustrationகளையும் செய்யும் இனிய சந்தர்ப்பம் எனக்குத் தரப்பட்டது.

அந்தப் புத்தகத்தை வெளியிடவேண்டி நண்பர் திரு. மோத்தி எஸ்.ராஜகோபால் அவர்கள் தமது சொந்த பணத்திலும் முயற்சியிலும் தோற்றுவித்ததே, “மோத்தி பிரசுரம்” எனும் நிறுவனமாகும்.

ஒருமுறை திரு. ஜெயகாந்தன் அவர்களுடன் தென்தமிழ் நாட்டுக்குப் பிரசங்கப் பயணமாக செல்லும் அரிய வாய்ப்புக் கிட்டியது.

அப்போது திருச்சிக்கு சென்று மோத்தி அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்தது.

செல்வச்சீமானாக இருந்த அவர் பணப்பெட்டி, நகைப் பெட்டிகளை விடவும் பொக்கிஷமாகக் கருத்துக் கருவூலமாக எண்ணற்ற புத்தகங்களை செல்வத்திற்கும் மேலாக வீட்டிலே பேணிக் காத்ததைக் கண்ட எனக்கு அவர் மீது அளவில்லாத மரியாதை உண்டானது. அப்படிப்பட்ட உயர்ந்த கல்வியாளர் அவர்.

எப்போதும் புன்சிரிப்பு இணக்கமாக சம்பாதிக்கும் இயல்பு பெருந்தன்மையான நடத்தை செல்வந்தர் எனும் கர்வமில்லாத பெரும் போக்கு, கனிவு, அன்பு, விருந்தோம்பல் போன்ற எண்ணரிய குணாம்சங்களை ஒன்றாகப் பெற்ற என் இனிய நண்பர் “திரு. மோத்தி” அவர்களை என் கண்கள் பனிக்க நினைத்துப் பார்க்கிறேன்.

வாழ்க அவரது பெயர்!
வளர்க அன்னாரது புகழ்!!

5. மோத்தி – தமிழ் பிரசுர உலகில் ஒரு சகாப்தம்

நர்மதா ராமலிங்கம், சென்னை.

இலக்கிய ரசிகமணியாக விளங்கிய திரு.ராஜகோபால் அவர்களை நாங்கள் எல்லாரும் “மோத்தி ராஜகோபால்” என்றும், “மோத்தி வந்தாரா” என்றும் குறிப்பிட்டு பேசிக் கொள்வோம். மோத்தி என்றால் முத்து. மனிதர்களில் முத்தாக விளங்கியவர் திரு.ராஜகோபால் அவர்கள்.

பொதுவாக சமூக அக்கறையும், இலக்கியத்தில் சிறப்பான அக்கறையும் கொண்டவராக இருந்தார். எழுத்தாளர்களை மிகவும் மதிப்பவர். அதிலும் திரு.ஜெயகாந்தனிடம் “அணுக்கத் தொண்டராகவே” இருந்தார். ஒரு சமயம் திரு.ஜெயகாந்தனுக்கும் அவர்கள் எழுதி வந்த பத்திரிகைகளுக்குமிடையே பேச்சு நிகழ்ந்த போது, பத்திரிகைகள் இல்லாவிட்டால் என்ன நாம் நேரடியாக மக்களைச் சென்றடைய முடியாதா? மலிவு விலையில் நூல்களை பிரசுரிக்கலாமே என்று திரு.கலைஞன் (பதிப்பக) மாசிலாமணி, எழுத்தாளர் தேவபாரதி, மோத்தி ராஜகோபால் மற்றும் நண்பர்கள் அபிப்ராயப்பட்டனர். பண முதலீட்டை செய்ய முன்வந்தது திரு.மோத்தி அவர்கள் தான். திரு.கலைஞன் பதிப்பக மாசிலாமணி அவர்கள் “தனியாக அலுவலகம், தொலைபேசி, நிர்வாகிகள் என்று செலவு செய்ய வேண்டாம், எனது பதிப்பகத்திலேயே செயல்படுவோம்” என்று மனமுவந்து சொல்லி, என்னையும் அவ்வாறே பணித்தார். நான் அப்போது கல்லூரி படிப்பு முடிந்து கலைஞன் பதிப்பகத்தில் பணிபுரிந்து வந்தேன். திரு.மோத்தி ரூ.30,000 முதலீடு செய்தார். அப்போது அது மிகப்பெரிய தொகை. அந்த தொகையினால் என்னவெல்லாம் செய்ய முடிந்தது. அப்போதைய மாஸ் கம்யூனிகேஷன் விழித் பாரதியின் “வர்த்தக ஒலிபரப்பு” தான். தொலைக்காட்சிப் பிசாசு அப்போது பிறந்திருக்கவில்லை. முதன்முறையாக வானொலியில் “ஜெய ஜெய சங்கர”வுக்கு ப்ரைம் டைம் ஸ்பாட் எனப்படும் இரவு 8 மணிக்கு விளம்பரம். இன்று வரையும் ஒரு தமிழ் நாவலுக்கு வானொலியில் அப்படி விளம்பரம் வரவில்லை என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்குமான செலவைப் பற்றி திரு.மோத்தி கவலைப்படவில்லை. நாவலின் விலையையும் ரூ 1 என்று நிர்ணயம் செய்தபோது, லாபம் பற்றி கவலைப்படாமல் திரு.மோத்தி அதை ஆமோதித்தார்.

தமிழ்ச் சஞ்சிகை ஒன்று விடாமல் எல்லாவற்றிலும் விளம்பரம் செய்தோம். “கல்கி” பத்திரிகை ஜெயகாந்தன் “ஜெய ஜெய சங்கரா” என்று எழுதுகிறாரா… என்ன எழுதுவாரோ தெரியவில்லையே என்று விளம்பரம் வெளியிட மறுத்து செக்கை திருப்பி அனுப்பிவிட்டது. நான் நேரே கல்கி காரியாலயம் போனேன். “இத்தனை நாளும் நீங்கள் மட்டுமே ‘ஜெய ஜெய சங்கரா’ என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்போது ஜே.கேவும் சொல்கிறார். உங்கள் நோக்கம் அதன் இலக்கை அடைந்திருக்கிறது என்று தானே அர்த்தம். கல்கி காம்பவுண்டைத் தாண்டி அது எதிரொலிக்கும் போது நீங்களே அதைக் கேட்க மறுக்கலாமா?” என்று வாதாடி விளம்பரம் வெளியிட சம்மதம் பெற்று வந்தேன். திரு.மோத்தி என்னை பாராட்டி சொன்னது முதிர்வு பெறாத இளைஞனான எனக்குப் பெரிய உரமாக, வாழ்த்தாக மனதில் பதிந்தது. பல நேரங்களில் தோழமையுடன் உற்சாகப் படுத்தினார். எந்த மனிதனுக்கும் வாழ்வில் தொய்வான ஒரு நேரம் வரும். ஆனால் திரு.மோத்தி போன்ற மனிதனின் நட்பிருந்தால் கவலையே பட வேண்டாம். சிலர் எதிர்பார்த்த படியும், பலர் எதிர்பார்க்காத விதமாக மலிவு விலை நாவல் “ஜெய ஜெய சங்கரா” பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. புத்தக விற்பனையாளர்களிடமிருந்து தந்திகள் வரும். மறுபதிப்புகள் அச்சாகின்றன. விற்பனை தந்த உற்சாகத்தில் ஜே.கே. அதைத் தொடர்ந்து நாவலாக்கி இன்னும் மூன்று நூல்களைத் தந்தார். மோதியின் முயற்சியும் ஆர்வமும் தமிழுக்கு ஒரு நல்ல வரவைத் தந்தது.

இந்த நாவல்களை அச்சிட்டு தந்த மோதியின் நண்பர் நாதன் கம்பெனி திரு.பாண்டுரங்கம், கவிஞர் கண்ணதாசனுடன் சேர்ந்து “கீதா சமாஜம்” என்று ஆரம்பித்து கவிஞரின் மலிவு விலை நூல்களை வெளியிட்டார்.

நான் மோதியுடன் பழக நேர்ந்த காலவெளி குறுகியதுதான். ஒரு ஐந்தாண்டு இருக்கலாம். ஆனால் தன்னுடைய சிறந்த மானுடப் பண்புகளால் மறக்க முடியாத குணச்சித்திரமாகிவிட்டார். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. “டிரெயினில் ஒரு வாசகர் மோத்தி பிரசுரம் நூலைப் படித்துக் கொண்டிருந்தார். நான் மோத்தி என்று தெரிந்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சி!” என்று சொல்லிவிட்டு குழந்தை போல் அவர் சிரித்ததை மறக்க முடியவில்லை.

சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் அவர் மெம்பர். நண்பர்களை அங்கு அழைத்துச் சென்று உபசரிப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவரில்லாவிட்டால் மோத்தி பிரசுரம் பிறந்திருக்காது. அதற்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பல மலிவு விலை நாவல் பிரசுரங்களுக்கு அதுதான் முன்னோடி. அந்த வகையில் அது ஒரு சகாப்தம்.

திரு மோத்தி இன்று அமரராகிவிட்டார். எனினும் அவரது நண்பர்கள் அவரது நினைவேந்தி, இந்த புகழஞ்சலி மலரை வெளியிடுவதே அவர் எத்தகைய மனிதராக வாழ்ந்தார் என்பதைச் சொல்லுகிறது. அவரது நண்பர்கள் நட்பென்னும் அருங்கொடைக்கு ஆற்றல் சேர்க்கிறார்கள். இவர்கள் வாழ்க.

6. மோத்தி ராஜகோபால் – நெஞ்சில் நீங்கா நினைவுகள்

தவத்திரு. ஊரன் அடிகளார், வடலூர்

1965 நான் திருச்சிராப்பள்ளி நகராட்சியில் நகரமைப்புக் கட்டிட இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டிருந்த காலம். ஒருநாள் மாலை, இளைஞர் ஒருவர் எம்மைக் காண அலுவலகத்திற்கு வந்தார். அவரது வீட்டு கட்டிட வரைபட அங்கீகாரத்திற்காக வந்திருப்பதாக கூறினார். சம்பந்தப்பட்ட கோப்பை எடுத்து பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோம். பார்ப்பதற்கு அறிவார்ந்த இளைஞராக தோன்றிய அவரது பேச்சில் ஒரு கனிவு. அறிவுடைமை, ஆர்வமுடைமை, இனிமை முதலிய பலநற்குணங்கள் வெளிப்பட்டன. அவரது தாயார் பெயரில் மனு இருந்தது. அவரது பேச்சில் “அம்மா அம்மா” என்று அடிக்கடி வந்தது. அப்பாவைப் பற்றிய பேச்சே இல்லை. சரி, அம்மா வளர்ப்பு “அம்மா பிள்ளை” போல இருக்கிறது என்று எண்ணிக் கொண்டோம். தந்தையார் உளரா? என்று கேட்டோம். இல்லை என்றார். நடந்தவற்றைக் கூறினார். ஒரு நிமிடம் கண்களை மூடித்திறந்து கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டோம். சரி நீங்கள் சென்று வாருங்கள், நாளை 10 மணிக்கு உங்கள் வீட்டுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வருகிறோம் என்று சொல்லி அனுப்பினோம். இப்படித்தான் மோத்தி ராஜகோபாலுக்கும் எமக்கும் முதல் சந்திப்பு ஏற்பட்டது.

மறுநாள் காலை 10 மணிக்கு, திருச்சிராப்பள்ளி பெரியக்கடை வீதி 176ஆம் எண்ணுள்ள வீட்டுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு சென்றோம். எமக்கு முன் சேவகர் ஒண்டிமுத்து வாசலில் சென்று இறங்கினார். மோதி ராஜகோபால் வீட்டு வாசலில் நின்று வரவேற்றார். நகைக்கடையும் வீடுமாக அது இருந்தது. உள்ளே சென்று வீடு முழுவதையும் நன்கு பார்வையிட்டு இன்ஸ்பெக்ஷனை முடித்துக்கொண்டோம். குறையொன்றுமில்லை. வரைபடத்தை அங்கீகாரம் செய்து விடுவோம் என்று சொல்லிப் புறப்பட்டோம்.

காபி அருந்த வேண்டும் என்பதை நினைவுறுத்தினார். அதற்குரிய இசைவை முதல்நாளே அவர் எம்மிடம் பெற்றிருந்தார். உத்தியோக விஷயத்தில் நாம் நெருப்பு, வெளியே தண்ணீர் கூட அருந்துவதில்லை. தாகம் ஏற்பட்டால் நகராட்சிக் குடிதண்ணீர்க் குழாயில் தண்ணீர் பிடித்து அருந்த ஒரு காலி சோடா பாட்டிலை சேவகர் ஒண்டிமுத்து எப்போதும் கையில் வைத்திருப்பார். அப்போர்ப்பட்ட நாட்கள் அன்று காலை மோதி ராஜகோபால் வீட்டில் உள் ஹாலில் அமர்ந்து காபி அருந்தினோம். மோதியின் அன்னையார் மிகச்சிறந்த குணவதியாராகத் தென்பட்டார். மோதியின் வீட்டில் இருந்த புத்தகக் குவியல்களும் (அடுக்கு) கண்ணில் தென்பட்டன. எண்ணத்தைக் கவர்ந்தன.

தோற்றம், நடை, உடை, பாவனைகளில் நாம் வித்தியாசமாக விளங்குவதைப் பற்றிக் கேட்டார். நாம் நைட்டிக பிரம்மச்சாரி என்றும், படிப்பே நம் முதற்பணி (உத்தியோகம் இரண்டாவது) என்றும் நம் வீட்டில் சொந்த நூலகத்தில் இரண்டாயிரம் நூல்கள் உள்ளன என்றும் கூறினோம். வீட்டுக்கு வந்து சந்திக்கலாமா? என்று கேட்டார். தாராளமாக என்று கூறியதோடு, வருகையை விரும்புவதாகவும் கூறினோம். அவரை ஊக்குவிக்க விரும்பியே அவ்வாறு கூறினோம்.

அடுத்த சில நாட்களுக்குள்ளேயே, சமயபுரத்திற்கு எமது வீட்டுக்கு வந்து விட்டார். காலில் வந்து இறங்கினார். அப்போதே எமது தந்தையாரும் இருந்தார். ராஜகோபாலும், நாமும் இரண்டு மணிநேரம் பேசி கொண்டிருந்த பின் அவர் புறப்பட்டுச் சென்றார். வயதில் உன்னை விட இளையவராக இருப்பார். ஆனாலும் அதிக புத்திசாலியாக இருக்காரே, நல்லவராகவும் இருப்பார் போல தெரிகிறது. என்று எம் தந்தையார் பாராட்டிக் கூறினார். கற்றாரைக் கற்றோரே காமுறுவர் என்பது போல எங்கள் பழக்கம் நட்பாயிற்று. அதன்பின் அடிக்கடி சந்திப்பு நேரும். சந்திப்பு எல்லாம் சிந்திப்பாகவே இருக்கும். அன்றைய திருச்சிராப்பள்ளியில் அறிவுலகில் அவர் வளர்ந்து வரும் ஒரு அறிஞர் பெருஞ்சுடர் .

தந்தையாடு கல்விப்போம் என்ற பழமொழி இவருக்கு பொருந்தாது. பெரியார் முதலாக ஜெயகாந்தன் உட்பட பெரியவர்கள், அறிஞர் பெருமக்கள், நேரில் சென்று பார்த்துப் பழகி அறிவை அகலப்படுத்திக் கொண்டே (விரிவுபடுத்திக் கொண்டே) ஒரு இளம்பருவ மேதையாக ராஜகோபால் அந்நாளில் (1960-களில்) திகழ்ந்தார்.

திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி முதல்வர் எம்.ஸ்.சீனிவாச சர்மா, எம் நண்பர் ஜி.வி.பிள்ளை (வன்மிகநாத பிள்ளை) முதலிய பலர் ராஜகோபாலுக்கும் நட்பாயினர்.

அக்காலத்தில் நான் உத்தியோகம் பார்த்ததோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் தலைவராகவும் இருந்தோம். வள்ளலார் வடலூரில் நிறுவிய சத்திய ஞானசாலையின் நூற்றாண்டு விழா நாளும், எமது 35-ஆம் அகவை தொடக்க நாளுமாகிய 23.05.1967-ல் நாம் உத்தியோக விடுப்புத் துறவு பூண்டோம். அந்த விழாவுக்கு எம் நண்பர் பொள்ளாச்சி அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம் அவர்களும் வந்திருந்தார். நாம் துறவு பூண்ட நாளில் (23.05.1967) அன்றைய பகல்; உணவு விருந்து எமக்கும் மகாலிங்கம் அவர்களுக்கும் மோதி வீட்டில் தான் படைக்கப்பட்டது.

புத்தர் ஞானம் பெறுவதற்கு முன் அளிக்கப்பட்ட விருந்து சுஜாதையின் பால் பாயாசம், நாம் துறவு பூண்ட பின் அளிக்கப்பட்ட முதல் விருந்து மோத்தி ராஜகோபால் வீட்டில் தான். அதுவும் அன்று எம்மோடு உடனிருந்து விருந்திருந்தியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள். எங்கள் இருவருக்கும் விருந்து அளித்தவர் திருச்சிராப்பள்ளி மோத்தி ராஜகோபால்.

1969-ல் நாம் திருச்சிராப்பள்ளி சமயபுரத்தை விட்டு, வடலூர் வாசியாகி விட்டோம். அன்பினும் அவ்வப்போது எங்கள் பழக்கமும் நட்பும் தொடர்ந்தது. மாதம் ஒருமுறை திருச்சிராப்பள்ளிக்கு வருவோம். அப்போதெல்லாம் தவறாது சந்திப்பும், சிந்திப்பும் நடைபெறும்.

2003 மே 22-ல் சென்னையிலும், 26-ல் வடலூரிலும், 29-ல் திருச்சிராப்பள்ளியிலும் எமது 70-ஆம் அகவை நிறைவு விழாக்கள் நிகழ்ந்தன. திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மோத்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். வாழ்த்துப் பெற்றார். அன்றே அவரை யாம் கடைசியாகக் கண்டது (என்று நினைவு). எங்கள் தொடர்பை விரித்து ஒரு சிறு புத்தகமே எழுதலாம். அவ்வாறு செய்திகள் உள. யாம் எழுதவிருக்கும் திருச்சிராப்பள்ளி வரலாற்றில் சில செய்திகள் சேரும். எமது சுயசரிதத்திலும் சேரும்.

மோத்தி ராஜகோபால் எம் நெஞ்சில் என்றும் நீங்காத ஒருவர். அவரது மகனார் மோத்தி இராச.சீனிவாசன் அவர்கள் தந்தையார் பணிகளைத் தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மேலும் மேலும் வளர, வளர்ந்து ஓங்க வாழ்த்துகிறோம்.

வாழ்க! வாழ்க!

7. மோத்தி இராஜகோபால் என்ற பண்பாளர்

சக்திக்கனல்

நம்மிடையே பல மகாத்மாக்கள் இருக்கின்றனர். அவர்களைத் தேடித்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும். விளம்பர வெளிச்சத்தை விரும்பாமல் நாட்டின் எங்காவது ஒரு மூலையில் தங்கள் சேவையைச் செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். அன்புடையர் என்றும், பிறருக்காக வழங்குபவர் என்னும் வள்ளுவர் குறள் இவருக்குப் பொருந்தும். அத்தகையவர்களுள் ஒருவர் மோத்தி இராஜகோபால் என்றால் மிகையில்லை.

என் இனிய நண்பர் சிவகாமி புத்தக பூங்கா மணி அவர்கள் எழுத்துலகச் சிற்பி ஜெயகாந்தனின் நண்பர். அடிக்கடி அவர் ஜே.கே.வைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அமரர் மோத்தி அவர்களின் பண்பு நலன்களை மகிழ்ச்சி பொங்க விவரிப்பார். சந்தைக்குப் போனால் தன் குழந்தைகளுக்கு வேண்டும் என்று தின்பண்டம் வாங்கி வரும் ஒரு தாயைப் போல, தமது நண்பர்களுக்கும் சேர்த்து நல்ல நல்ல நூல்களை விலைகொடுத்து வாங்கி அவர்களிடம் சேர்ப்பித்து, அவர்கள் படித்து மகிழ்வதை அறிந்து ரசிக்கும் குணம் எத்தனை பேருக்கு இருக்கிறது. இரவல் வாங்கிச் செல்லும் புத்தகங்களைத் திருப்பியே தராமல் மறந்துவிடும் இன்றைய சராசரி மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு ஆபூர்வ மனிதரும் வாழ்ந்து சென்றார் என்பதை நம்ப முடிகிறதா?

மோத்தி அவர்கள் ஜெயகாந்தன், திருலோக சீதாராம் போன்ற பிரபல எழுத்தாளர்கள் முதல் இன்றைய இளைய தலைமுறையினர் வரை அத்தனை பேரையும் அன்பால் ஈர்த்தவர். ஒரு ரூபாய் விலையில் லட்சம் பிரதிகளை மாதாமாதம் அச்சிட்டு அறிவுப்பசி தீர்க்கும் அமுதசுரபியாய் விளங்கியவர் என்பதையெல்லாம் அறியும்போது வியப்பு மேலிடுகிறது. எப்படி இவரைச் சந்திக்காமல் போனோம் என்ற வியப்பும் ஏற்படுகிறது. எப்படியோ அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படாமல் போனது எனக்கு ஒரு இழப்பாகும்.

இவர் மலிரினும் மெல்லியவர் என்பதற்கான அடையாளம் இவர் அணியும் பனியனில் தையல் பகுதி கழுத்தையும், தோல் பகுதியையும் வருத்தாமலிருக்க அதைத் திருப்பிப் போட்டுக் கொள்வதாகும். “கூப்பிட்ட குரலுக்கு வரும் கண்ணன்” போல நண்பர்களுக்கு ஓடி ஓடி உதவியவர். தான் பொறுப்பேற்ற அத்தனை நிறுவனங்களையும் பலப்படுத்தியவர். கலீல் ஜீப்ரானில் தன்னை கரைத்துக் கொண்டவர். கல்லூரி செல்லாமல் பேராசிரியர்களெல்லாம் போற்றும் பேராசிரியராகத் திகழ்ந்தவர் மோத்தி அவர்கள். கண்ணதாசன் பாடல் ஒன்று இப்படி பேசும்.

“விட்டாலும் விடமாட்டேன் வீடுவரை தேர்ஏறி விரைந்து வந்த கெட்டாரைக் கீழோரைக் கெட்டதனால் அழுவோரைக் கேள்வி கேட்டு தட்டாரைப் போல் பலம்கொள்ள வைப்பான் உன் பரமன் தானே” மோத்தி இராஜகோபால் அவர்களை நினைக்கும் போது எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது! வாழ்க அவர் புகழ்!

8. வானொலியின் நண்பராக மோதி

T. கணேசன், I.B.S
இயக்குநர் (ஓய்வு) All India Radio
103, முதல் தெரு, அகமது காலனி,
உறையூர், திருச்சி-620 003,
போன்: 0431-2773881
செல்: 9443035755

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நான் இயக்குநராக பணியாற்றிய காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று மனதில் நிலைத்து நிற்கிறது. மோத்தி ராஜகோபால் தொலைபேசியில் ஒரு தகவல் தந்தார். திரு.ஜெயகாந்தன் திருச்சிக்கு வருகிறார். வானொலியில் அவரது சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். மிக்க மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்வோம் என்று மோதியிடம் சொன்னேன்.

திரு. ஜே.கே-யுடன் வித்தியாசமான நிகழ்ச்சியினை செய்ய வேண்டும் என்று யோசித்தேன். வழக்கமான நேர்முகமும், கலந்துரையாடலும் என்று அல்லாது. வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணம் கொண்டேன். அவரது வாசகர்கள், தொலைபேசியில் நேரடியாக பேசும் உரையில் அந்த நிகழ்ச்சியினை அமைத்தோம். அந்த காலகட்டத்தில் அதுமாதிரி முயற்சி புதுமையானது. இன்றைய தினம் தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சிகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. அதன் முன்னரே நிகழ்ச்சி 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியே நிச்சயமாகும். முதல் நிகழ்ச்சியும் அதுவே ஆகும்.

முக்கிய விஷயத்திற்கு வருவோம் ஜே.கேவுடன் நேர்முக நிகழ்ச்சி. ஜே.கேயின் வருகை குறித்து எதிர்பார்த்துக் காத்திருந்தோம். மோத்திக்கும் தகவல் இல்லை. மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் காலை 6 மணிக்கு வருவதாக தகவல். மணி 7-னையும் தாண்டி விட்டது. மோத்திக்கோ எனக்கோ தகவல் ஏதும் இல்லை. அப்போது செல்போன் வசதி கிடையாது. எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். நேரம் கடந்து கொண்டிருந்தது.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? ஜே.கே வந்த மலைக்கோட்டை புகைவண்டி திருவரங்கம் நிலையத்தில் பழுதடைந்து நின்றுவிட்டது. புறப்பட தாமதமாகும் சூழ்நிலை.  நிலவரத்தைப் புரிந்து கொண்ட ஜே.கே அவர் உடன் பயணித்த, வாகன வழிக் கொண்டவரின் உதவியால், திருவரங்கத்திலிருந்து கார் நேராக நிலையத்திற்கு உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார். எனக்கும் மோத்திக்கும் மிக்க மகிழ்ச்சி. அப்போதே எங்களுடன் கோவை சிவகாமி பதிப்பகத்தின் திரு. பாலசுப்பிரமணியமும் உடன் இருந்தார்.

முன்னொரு காலத்தில் எழிசை மன்னர் திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர் திருச்சி வானொலி நிலையத்தில் இசைக்கச்சேரி செய்வது வழக்கம். எத்தனை பணிகள் இருந்தாலும், வானொலி நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து, கச்சேரி பாடி தனது ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துவாராம். ஒரு சமயம் அவ்வாறு வானொலி நிலையத்திற்கு வரும் நேரத்தில், அவர் வந்த கார், சில மைல்கள் தூரத்தில் பழுதாகி மேலே ஓட்டமுடியாமல் இருந்ததாம். நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாகவதர், அருகே இருந்த ஒருவரிடம் மிதிவண்டியை வாங்கிக்கொண்டு வானொலி நிலையத்திற்கு வந்து சேர்ந்தாராம்.

பாகவதரும் ஜே.கேயும் “எந்தரோ மகானுபாவுலு” வானொலியின் நண்பராக விளங்கிய மோத்தி என்ற ராஜகோபாலும், அவ்வாறு போற்றத்தக்கவர்கள்தான்.

9. என் நெஞ்சில் நிற்கும் மோதி இராஜகோபால்

C.I. ரகுநாதன்,
பூபாலம் CPL ஜூவல்லரி,
119, கச்சேரி தெரு, திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் – 635601.
மின்னஞ்சல்: kowshik@live.in
செல்: 04179 – 223725.

எனக்கும் அமரர் மோதி S. ராஜகோபாலுக்குமான தொடர்பு அவர் பங்குதாரராக இருந்த யுனைடெட் கெமிக்கல் டைமண்ட்ஸ் கம்பெனி என்னும் வியாபார நிறுவனத்தின் மூலமாகத்தான். ஒருமுறை திருச்சி சென்றிருந்த போது அவரைச் சந்தித்து மேசை வாய்ப்புக் கிடைத்தது. அவர் வெளிப்படுத்திய கருத்துக்களால் கவரப்பட்டு அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டேன். ஒருமுறை அவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் பங்குகொண்டிருந்த உருமு தனலட்சுமிக் கல்லூரியைப் குறித்து பேச வேண்டியிருந்தது. அந்த கல்லூரியில் MCA படிப்பு இருந்தது. தனக்கு அறிமுகமான நண்பர்கள் வீட்டுக் குழந்தைகள் MCA படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அவர்களுக்கு கல்லூரியில் இடம் தருவதாகக் கூறியவர். என்னிடமும் அவ்வாறு எனக்குத் தெரிந்த வீட்டுக்குழந்தைகள் யாருக்காவது MCA படிப்பதற்கு தேவை என்றால் சிபாரிசு செய்தால் இடம் தருவதாகக் கூறினார். சமூகத்தின் மீதும் அவருக்கு இருந்த அக்கறையை அது எனக்குப் புரிய வைத்தது. ஒருமுறை திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவரும் நானும் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்னதாக எனக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அந்த நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு வரும் சமயம் அவருடைய இல்லத்திற்கு மதிய உணவிற்காக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனக்கும் அவருக்கும் இருந்த வயது இடைவெளி சிறு அதிகம் இருந்தாலும், நட்பிற்கு உரிய இடத்தைக் கொடுத்து அவர் அமைத விதத்தினால் மறுக்காமல் அவர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அதுசமயம் அவர் ஆன்மிகம் குறித்தும் இலக்கியம் குறித்தும் பேசிய கருத்துகள் இன்னும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது. அவர் மறைந்த செய்தி எனக்குத் தெரிந்த போது என்னால் உரிய நேரத்திற்குச் சென்று இறுதியாக காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகமாக இருந்தாலும், ஆன்மிக சிந்தனைக் கொண்ட, நட்பிற்கு மிகவு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கவழக்கு இனிமையான இப்படிப்பட்ட மனிதருடன் எனக்குத் தொடர்பு இருந்திருக்கிறது என்ற நினைப்பு என்னுள் எப்பொழுதும் பசுமையாகவே இருக்கும்.

10. மோத்தி என்ற முத்து

சேக்கிழார் அடிப்பொடி
முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன்
தஞ்சாவூர்

கொன்றிடும் என இனிதாய், இன்பக்கொடு நெருப்பாய் இருப்பது காதல் என்று பாரதியார் அறிவித்திருக்கிறார். ஒன்றுறப் பழகுதற்கே அறிவுடையது நட்பு என்று அறிவித்திருக்கிறார். ஒன்றுற பழகுதலை மட்டுமே நட்பு அறியும். பிறிதொன்றை அறியாது. நட்பு என்பது ஓர் இனிமையான பொறுப்பு. இதில் சுயலாபத்திற்கு இடமில்லை. ஆகவே நட்பின் செவ்வியைச் சிலரே அறிவர். அவருள் ஒருவர் மோதி ராஜகோபால்.

இவ்வன்பர், பெரியவர் திருலோக சீதாராம், பேராசிரியர் நாடார் மூலம் எனக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். எங்கள் நட்பு, அன்பர் ஜெயகாந்தன் மூலம் விரிவும் அழுத்தமும் பெற்றது. நாங்கள் கூடினால் உரையாடல் உன்னதம் பெறும். உன்னதத்திற்குத் தூண்டுதலாக இருந்தவர் மோதி ராஜகோபால். மோதி என்ற சொல்லுக்கு முத்து என்று பொருள். இவ்வன்பர் ஓர் முத்து. ஆம், ஆனிமுத்து, சகஹ்ருதயர்களைக் கண்டு கொள்வதிலும், இணைத்து வைப்பதிலும் மோதி குறிப்பாக இருந்து வந்தார். இணைப்பு வேலைகளை இயல்பாகவே இவர் இயற்றி வந்தார்.

பிள்ளைப் பிராயத்திலிருந்தே நூல்களை – அவை எம்மொழியில் இருப்பினும் – பயிலும் ஆர்வமுடையவராக இவர் இருந்து வந்தார். இவரும் நானும் செறிவாக இணைவதற்குக் காரணமாக இருந்தவர், கலீல் ஜிப்ரான் என்ற லெபனான் தேச தீர்க்கதரிசி. ஜிப்ரான் புத்தகங்களை நான் கவனமாகப் பயின்றேன். திருலோகமும் அவருடைய வசனங்களைத் தமிழில் தந்திருக்கிறார். மோதியும் எடுத்ததெற்கெல்லாம் ஜிப்ரானை மேற்கோள் காட்டுவார். ஜிப்ரானின் உன்னத சிந்தனை எங்களது வாசஸ்தலமாக அமைந்தது. ஹீனிமன் கம்பெனியார் அந்நாளில் வெளியிட்ட 19 நூல்களில் 17 நூல்கள் என்னிடம் இருந்தன. இரண்டு நூல்கள் எனக்கு கிடைக்கவில்லை. அவை, “”ட்வென்டி ட்ராயிங்ஸ்”, “”திஸ்மேன் ஃப்ரம் லெபனான்” என்பன. என்ன ஆச்சர்யம். மோதியிடம் நான் வைத்திருந்த 17 நூல்களும் இருந்தன. எனக்குக் கிடைக்காத இரு நூல்களும் இருந்தன. யாருக்கு இந்நூல்கள் கிடைத்தாலும் அவை இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். அந்நாளில் ஜெராக்ஸ் வசதி இல்லை.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து அவர் உறவினர் “”திஸ்மேன் ஃப்ரம் லெபனான்” என்ற நூலை மோதிக்கும் பெற்று தந்தார். ஒரே நாளில் அதைப் படித்துவிட்டு, அடுத்த நாளே அதை எனக்குக் கூரியர் மூலம் அனுப்பி வைத்தார். அதைப் படித்துப் புளகாங்கிதம் உற்றேன். ஒரு ஜெராக்ஸ் படி எடுத்துக் கொண்டு மீளவும் அதை அவருக்கு அனுப்பிவிட்டேன்.

திருலோக சீதாராம் தேவசபை என்ற ஒனறைத் தோற்றுவித்தார். வருடாந்திர கூட்டத்திற்குத் தேவசபை என்றுபெயர். இக்கூட்டங்களுக்கு அமரர் சபை என்று பெயர். இக்கூட்டங்களில் உபநிடதங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. உபநிடத வாசகங்களுக்குப் பொருள் கூறுவதற்காக தஞ்சை கரிச்சான் குஞ்சு, பண்டிட்ஜி நரசிம்மராகவன் ஆகியோர் ஆத்திரேயனுடன் இணைந்தனர். ஒவ்வொரு கூட்டத்திற்கும்தங்கும் வசதி, உணவு வசதி ஆகியவற்றை ஒருவர் ஏற்பார்.
கூட்டங்கள் திருநெய்த்தானம், திருப்பராய்த்துறை (இராமகிருஷ்ண குடில் வளாகம்) மன்னார்குடி பெருமாள் மலை அடிவாரம், திருவானைக்கா சத்திரம் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடந்து வந்தன. கூட்டங்களில் பங்கு கொண்டவர் ஆத்திரேயர் கரிச்சான் குஞ்சு, பண்டிட் நரசிம்மராகவன், எம்.எஸ் நாடார், பேராசிரியர் கே.ஜி.எஸ், பள்ளியகரம் கந்தசாமி பிள்ளை, கோவை அசோகா செட்டியார், ஜி.சி.பட்டாபிராமன், மோதி ராஜகோபால், சிரஸ்தார் சோமசுந்தரம் பிள்ளை, டாக்டர் சிவராஜ், தி.வே.கோபாலய்யர், ஏ.எஸ்.ராகவன் வழக்கறிஞர் ஜெயராமன் முதலியோர்.

மோதி அவர்கள் ஒரு கூட்டம் முக்கொம்பில் நிகழப் பொறுப்பேற்றார். திருச்சியிலிருந்தே சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை வரவழைத்தார். மிகச்சிறப்பாக அன்று கூட்டம் நடந்தது. அதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், நல்ல காரியம் எது நடந்தாலும், உவந்து அதற்குத் தோள் கொடுக்க முன்வருபவர் மோதி. பின்புலத்தில் இருந்தே செயல்படுவார். விளம்பரத்தை வெறுப்பவர் அப்பண்பாளர்.

மோதி சிறந்த ரசிகர். ஆழ்ந்திருக்கும் கவி உளம் காணவல்லவர். சிறுகதை, நாவல், நாடகம் என்றுள்ள அனைத்திலும் ஈடுபடுபவர். ரஸத்திலே தேர்ச்சி கொள் என்றார் பாரதியார். ரஸத்தேர்ச்சி பெற்றவர் மோதி. வைணவ உரைகளையும் சுவைத்துப் படிப்பவர் அவர்.

பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்களுக்குப் பெரிய வாச்சான் பிள்ளை வரைந்த மணிப்பிரவாள உரைக்குத் தமிழாக்கம் வரைந்தவர். பெரிய திருமொழிக்கான ஐயரின் தமிழாக்கம் இரண்டு தொகுதிகளாக வெளிவர என் மகன் டாக்டர் சுரேஷ் பொருளளித்தான். எஞ்சியுள்ள ஐந்து நூல்களுக்கான தமிழாக்கத்தை வெளியிட வேண்டிய நிலையில் நான் இருந்ததை அறிந்து என் இல்லத்திற்கு வந்து ரூ.25,000 என்னிடம் வழங்கியவர் மோதி. அத்தொகுதியும் வெளிவந்தது.

முடிவிலே ஒரு செய்தி, மோதியின் அருமை பெருமைகளை உணர்ந்து அவர் காரியம் யாவிலும் கைகொடுத்த அவருடைய மனைவியாரையும், மக்களையும் நாம் என்றுமே மறத்தல் கூடாது. அவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ இறைவனைப் பிராத்திப்போமாக.

11. மறக்கவொண்ணா மனிதர் மோதி

ஜி.மாசிலாமணி,
கலைஞன் பதிப்பகம், சென்னை

அமரர் மோதி ராஜகோபால் எழுபதுகளில் தமிழ்ப்பதிப்புத் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த “”மோதி பிரசுத்தின் உரிமையாளர்”. ஜெயகாந்தன் அவர்களின் பிரியமான நண்பர். அவரால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்.

ஜெயகாந்தன் எழுத்துக்களை மட்டுமே வெளியிடுவதற்கு எனத் தொடங்கப் பெற்றதுதான் “மோதி பிரசுரம்” அதன் முதல் வெளியீடான “ஜெயஜெய சங்கர” என்ற ஒரு ரூபாய் நாவல் ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைத் தொட்டது. அந்த நாவலை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர். பிரபல பத்திரிக்கைகள் மலிவு விலை நாவல்களை பிரசுரிக்கத் தொடங்கின. மோதி ராஜகோபால் அவர்கள் முதலீடு செய்து தொடங்கிய “மோதி பிரசுரம்” கலைஞன் பதிப்பக அலுவலகத்திலேயே செயல்பட்டது. அப்போது என்னுடனிருந்த நர்மதா ராமலிங்கம், இந்தத் தொழில் முயற்சிக்குப் பெரும்பாடுபட்டார். மோதி ராஜகோபால் அவர்கள் பழகுதற்கு இனிய நண்பர். எப்போதும் அவர் முகத்தில் புன்னகை ததும்பிக் கொண்டிருக்கும். திருச்சியில் “அரிமா சங்கம்” சுழற்சங்கங்களில்” தலைமைப் பொறுப்பினை அலங்கரித்தவர்.

அவரோடு சபரிமலை செல்லும் போது நவீன இலக்கியப் போக்கு குறித்து பேசிய பேச்சுக்கள் என் நெஞ்சில் இன்னமும் நிழலாடுகின்றன. குற்றால அருவியில் நாங்கள் குளித்ததும் அப்போது நிகழ்ந்த இலக்கிய விவாதங்களும் மறக்கமுடியாதவை. நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய அக்கறை மிகக் கொண்டிருந்தார். நல்ல நூல்களின் ரசிகர். ஓஷோவின் கருத்துகளில் கவனம் கொண்டிருந்தார். அவர் இருந்த போதே பூனா சொற்பொழிவு கேட்டு வருவார். சென்னைக்கு வரும் போதெல்லாம் “காஸ்மோ பாலிட்டன் கிளப்”பில் ஜெயகாந்தனுடன் எனக்கும் அவர் விருந்தளித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

உடல்நலம் குன்றிய நிலையில் கோவை மருத்துவமனையில் மோதி ராஜகோபால் அவர்கள் இருப்பதாக நாஞ்சில்நாடன் அவர்கள் எனக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்தார். அடுத்த முறை செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னேன்.

அடுத்து அவர் காலமானார் என்ற அவலச் செய்திதான் என் காதில் விழுந்தது. அவருடன் பழகிய நாட்களெல்லாம் அலைபுரண்டன. கொஞ்சி சிரிக்கும் அவரது குதூகலமான முகம் என் நெஞ்சில் இன்றும் நிறைந்திருக்கிறது.

என் வாழ்வில் மறக்கவொண்ணா மனிதர் மோதி ராஜகோபால் அவர்கள். அன்னாருக்கு என் இதயஅஞ்சலியை உங்களுடன் சேர்ந்து சமர்ப்பிக்கிறேன்.

12. கல்வி + ஞானம் ஸ்ரீ மோதி

S.S. துரைராஜ்
தலைவர்,
கவிஞர் கண்ணதாசன் தமிழ் இலக்கிய மன்றம்,
பட்டுக்கோட்டை

நண்பர் மோதி செல்வச் செழிப்புமிக்கக் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்தவர். தன் பதினேழு வயதில், கார் விபத்தில் தந்தையை இழந்தவர். வணிகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, ஏகபுத்திரன் என்பதால் அவர் ஏற்க வேண்டியதாயிற்று. அவர் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு இல்லை. ஆர்வமிகுதியாலும் விடாமுயற்சியாலும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். உன்னதமான மேனாட்டு இலக்கியங்களைத் தேடித்தேடி படித்து, தன்னை வளர்த்துக் கொண்டார். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் ரசனையும் கொண்டிருந்ததை அறியும்போது, அவர்பால் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

 

அவரது முன்னோர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தவர்கள். தந்தை செய்த தான தருமங்கள் அறக்கட்டளைகள் ஏராளம். அந்த நற்காரியங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். பல பள்ளிகளுக்குச் செயலாளராகவும் இருந்து உள்ளார். தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாதவர். அன்பானவர். எளிமையானவர்.

 

ஜெயகாந்தன் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். ஜெயகாந்தன் பத்திரிக்கையாளர்களுக்கு எழுதாதிருந்த சமயம். மோதி பிரசுரம் ஒன்றைத் தொடங்கி, அவருடைய ஜெய ஜெய சங்கராவையும், மற்ற மூன்று பகுதிகளையும் வெளியிட்டவர் என்ற பெருமை அவரைச் சேரும்.

 

ஜெயகாந்தன் உன்னைப்போல் ஒருவன் படத்தை தயாரித்த சமயம் பணம் அவருக்கு தேவைப்பட்டது. அதை அறிந்த மோதி அவரை வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து தட்டில் பழம், வெற்றிலை பாக்குடன் ரூபாய் 10,000-ஐ மகிழ்ச்சியோடு கொடுத்தார். மேலும் தேவைப்பட்டால் கொஞ்சம் அவகாசம் தாருங்கள் என்று சொன்னவர் மோதி. உருமு தனலெட்சுமி கல்லூரியில் செயலராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவருடைய காலத்தில் கல்லூரியின் தரம் உயர்ந்தது.

மிகக் குறைந்த கல்விக் கட்டணம், திறமை அடிப்படையில் மாணவர் சேர்க்கை, நன்கொடை வசூலிப்பதில்லை என்ற பெருமையும் அக்கல்லூரிக்கு இருந்தது. இவையாவும் மோதியின் முயற்சியினால் கண்ட வளர்ச்சி. அவர் இலக்கிய புத்தகம் இரண்டாக வாங்குவார். ஒன்று அவருக்கு. மற்றொன்று கல்லூரி நூலகத்துக்குப் போகும். ஜெயகாந்தன் நண்பர்கள் எல்லோரும், அவருக்கு நண்பர்களாகி விடுவார்கள். அத்தகைய குணம் உடையவர்கள். ஜே.கே.வோடு சபரி யாத்திரை ரயிலில் சென்றோம். மோதி அவர்கள் திருச்சி ஜங்­னில் காத்துக் கொண்டிருந்தார். ஜே.கே.வும் குப்புசாமியும் அவரோடு காரில் யாத்திரை மேற்கொள்வார்கள். நாங்கள் ரயிலில் தொடருவோம். ஒவ்வொரு ஜங்­னிலும் ரயில் வருவதற்கு முன்பே அவர்கள் வந்து விடுவார்கள். எங்களை பாரத்துப் பேசிவிட்டு, அவர்கள் காரிலும் நாங்கள் ரயிலிலும் புனலூர் வரை தொடரும்.

 

ஐயப்பனை தரிசனம் செய்த பிறகு புனலூரிலிருந்து, திருச்சி வரை பயணம் அவ்வாறே. அவருடைய மகள் திருமணத்திலும், மகன் சீனிவாசன் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடைய மகள்கள் திருமணத்தில் கலந்து கொண்டு என்னை பெருமைப்படுத்தியவர். அன்பு நிறைந்த பெருமகன், அடக்கம் நிறைந்தவர். எளிமையானவர். என்றும் நம் நினைவில் இருப்பார்.

13. என்றும் வாழும் மோதி

V.S.V. தண்டபாணி

நண்பர் மோதி செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்தவர். தன் பதினேழு வயதில், கார் விபத்தில் தந்தையை இழந்தவர். வணிகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, ஏழுபத்தின் என்பதால் அவர் ஏற்க வேண்டியாயிற்று. அவர் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு இல்லை. ஆன்மீகத்தையும் விடாமுயற்சியையும் ஆர்வமுடன் அறிய வளர்த்துக் கொண்டார். உன்னதமான மேலாண்மை இலக்கியங்களைத் தேடித்தேடி படித்து, தன்னை வளர்த்துக் கொண்டார். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் ரசனையும் கொண்டிருந்ததை அறியும்போது, அவரால் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அவரது முன்னோர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பு குழுவாய்ந்தவர்கள். தந்தை செய்த தான தருமங்கள் அறக்கட்டளைகளை ஏராளம். அந்த நற்காரியங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். பல பள்ளிகளுக்குச் செயலாளராகவும் இருந்து உள்ளார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர். அன்பானவர். எளிமையானவர்.

ஜெயகாந்தன் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். ஜெயகாந்தன் பத்திரிகையாளர்களுக்கு எழுதியிருந்த சமயம். மோதி பிரசுரம் ஒன்றைத் தொடங்கி, அவருடைய ஜெய ஜெய சங்கராவையும், மற்ற மூன்று புத்தகங்களையும் வெளியிட்டவர் என்ற பெருமை அவரைச் சேரும்.

ஜெயகாந்தன் உன்னைப்போல் ஒருவன் படத்தை தயாரித்த சமயம் பணம் அவருக்கு தேவையப்பட்டது. அதை அறிந்த மோதி அவரை வீட்டிற்கு வருந்திர அழைத்து தன்னிடம் பழம், வெற்றிலை பாக்குடன் ரூபாய் 10,000-ஐ மகிழ்ச்சியோடு கொடுத்தார். மேலும் தேவையப்பட்டால் கொஞ்சம் அவகாசம் தருங்கள் என்று சொன்னவர் மோதி.

உரமு தனலெட்சுமி கல்லூரியில் செயலராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவருடைய காலத்தில் கல்லூரியின் தரம் உயர்ந்தது. மிகக் குறைந்த கல்விக் கட்டணம், திறமை அடிப்படையில் மாணவர் சேர்க்கை, நன்கொடை வசூலிப்பதில்லை என்ற பெருமையும் அக்கல்லூரிக்கு இருந்தது. இவையாவும் மோதியின் முயற்சியினால் கண்ட வளர்ச்சி. அவர் இலக்கிய புத்தகம் இரண்டாக வாங்குவார். ஒன்று அவருக்கு. மற்றொன்று கல்லூரி நூலகத்துக்கு போகும். ஜெயகாந்தன் நண்பர்கள் எல்லோரும், அவருக்கு நண்பர்களாகி விடுவார்கள். அத்தகைய குணம் உடையவர்கள். ஜே.கே.வோடு சரி யாத்திரை ரயிலில் சென்றோம். மோதி அவர்கள் திருச்சி ஜங்ஷனில் காத்துக் கொண்டிருந்தார். ஜே.கே.வும் குப்புசாமியும் அவரோடு காலம் யாத்திரை மேற்கொள்ளவார்கள். நாங்கள் ரயிலில் தொடர்வோம். ஒவ்வொரு ஜங்ஷனிலும் ரயில் வருவதற்கு முன்பே அவர்கள் வந்து விடுவார்கள். எங்களை பார்த்துப் பேசிவிட்டு, அவர்கள் காரிலும் நாங்கள் ரயிலிலும் புனலூர் வரை தொடர்ந்தோம்.

ஜெய்ப்பனை தாயகம் செய்த பிறகு புனலூரிலிருந்து, திருச்சி வரை பயணம் அவரோடு. அவருடைய மகன் திருமணத்திலும், மகன் சீனிவாசன் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடைய மகள் திருமணத்தில் கலந்து கொண்டு என்னை பெருமைப்படுத்தியவர். அன்புநிறைந்த பெருமகன், அடக்கம் நிறைந்தவர். எளிமையானவர். என்றும் நம் நினைவில் இருப்பார்.

14. சமத்துவ சன்மார்க்கர் மோதி

A. பாலன், ஈரோடு

ஒரு உண்மையான போலித்தனம் இல்லாத business man. மனம் வைத்தால் எந்தவொரு programme-க்கும் நேரம் இல்லை என்று சொல்லாமல் கலந்து கொள்ள இயலும் என்பதை இவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்.

ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஜே.கே.வின் “”ஜெய ஜெய சங்கரா” – “”யாருக்காக அழுதான்”, “”ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” போன்ற நூல்களைக் குறித்து Recollect பண்ணி எங்களையும் வாசிக்கத் தூண்டுவார். அப்படி தூண்டப்பட்டதுதான் “”ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”, அது ஜே.கே.வின் master piece.

திருச்சியில் அவருடைய மூத்த மகள் திருமணத்திற்கு ஜே.கே.வின் தலைமையில் நானும், கோவை மணி உட்பட மற்ற தோழர்களும் கலந்து கொண்டது ஒரு மறக்கமுடியாத அனுபவம். Royal Hospitality உறவினர்களை விட்டு சற்று விலகி எங்களிடமே முழுவதும் உறவாடியதை இன்னும் நினைத்துப் பார்க்கிறேன்.

கார்ல் மார்க்ஸ் மீது எங்கெல்ஸ் வைத்திருந்த அன்பிற்கும் மரியாதைக்கும் நிகரானது ஜே.கே.வின் மீது அவர் கொண்டிருந்த உறவு. சில நிகழ்வுகள் அனுபவித்தால் தான் புரியும். விளக்க முடியாது.

மூன்று வருஷத்திற்கு முன்பு அமர்நாத் யாத்திரைக்குச் செல்ல ஆசிர்வாதம் பெற ஜே.கே.விற்கு போன் செய்தேன். அப்போது ஜே.கே. “மோத்தியும் அமர்நாத் வருகிறார்” என்றார். அப்போது நான் சந்திக்க முடியுமா? என்று தெரியவில்லை என்றேன். மோதி ஒரு தத்துவ தரிசனம். 1974-இல் நான் திருச்சி நேரு நினைவுக் கல்லூரியில் படித்த காலத்தில் மாபெரும் எழுத்தாளர் தோழர் ஜெயகாந்தன் மூலம் பரிச்சயமானவர். மோதி ஜே.கேவை எங்களுடைய கல்லூரி விழாவிற்கு அழைத்த போது மோதியை தொடர்பு கொள்ளச் சொன்னார். நான் அப்போது கம்யூனிஸ்ட் உணர்வில் மிகுதியாக ஆட்பட்டிருந்த காலம். மோதியை ஒரு பூர்ஷ்வா என்று மனதில் ஏற்படுத்திக் கொண்டு சந்திக்க போனேன். பார்த்தவுடன் பழகத்தோன்றும் முகம் படைத்தவர். ஏதோ நீண்ட நாள் பழகியதைப் போல் என்னை அன்பால் ஆட்கொண்டார். ஜே.கேவின் நூல்களையும், ஆங்கில ரஷ்ய இலக்கியங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டது எனக்கு அவர்மீது தோழமையுணர்வை அதிகரித்தது. லெனின் – பி.சி.ஜோக்ஷி தோழர் டாங்கே சொன்ன தேசிய பூர்க்­வாவாக எனக்குத் தெரிந்தார்.

அதன்பிறகு 1985-இல் ஈரோட்டில் என்னுடைய சாந்தினி வெட்கிரைண்டர்ஸ் 1986-இல் ஈரோட்டில் நடந்த National Fedaration of Progressive Writters Conference 1990-இல் பெங்களுரில் நடந்த என் கடைத்திறப்பு விழா, 1994-இல் கடைத்திறப்பு விழா என ஜே.கே.வுடன் தொடர்ந்து கலந்து கொண்டார். அதற்கு ஜே.கே. “நீங்கள் அவசியம் அமர்நாத்தில் சந்திப்பீர்கள் என்றார்”. என்ன ஆச்சர்யம் அமர்நாத் அடிவாரத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென நிமிர்ந்தால் மோத்தி நிற்கிறார். அந்த கணத்தில் ஜே.கே எனக்கு ஒரு அதிசய Miracle.

பஹவான் சத்யசாய் பாபாவின் தெய்வீக அருளால் ஜே.கே. அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குணமடைந்ததைப் பற்றி நான் எழுதியிருந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு எப்படி கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட் ஆக நீங்கள் மாறினீர்கள்? என்றார். அதற்கு நான் என்னை மாற்றியது ஜே.கே.வின் ஆன்மீகப் பார்வை, பாபாவின் Service to the humanity போற்றுதலுக்குரியது என்றார். என் மகனும் பாபாவின் மீது அளவிலா காதல் கொண்டவர் என்றும் சொன்னார். மோத்தி ஓர் ஆனந்த ஸ்வருபம் தத்துவ தரிசனம் மரங்களைப் பார்க்காமல் மனிதர்களைப் பார்த்தவர். அன்பிற்கும் ஞானத்திற்கும் அடிமையாகி வாழ்ந்தவர். ஜாதி, மத, பேதமற்ற சன்மார்க்க மோத்தி இல்லாத திருச்சியை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. வாழ்க அவரது கல்வி – ஆன்மீகம் – சமூகப்பணி !

15. வைத்த தொழில் வளர்த்த வைரம் மோதி எஸ்.இராஜகோபால்

யுனைடெட் டிரேடர்ஸ்,
167, பெரியகடை வீதி,
திருச்சிராப்பள்ளி – 620 008

திறன்மிக்கவர்கள் மிக அரிதாக இருக்கும் காலகட்டம் இது. இச்சூழலில் பன்முக திறன் கொண்ட திரு M.S.R. மக்கள் மனதில் நீங்காது நிற்பார். M.S.R. அவர்களின் திறன்களையும், பங்களிப்பையும் பதிவுசெய்வது அவரது நினைவுகளை போற்றுவதற்கு மட்டுமல்ல, அது வளருகின்ற தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும்.

 

அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நாங்கள் பெற்ற வரம், பல நிகழ்வுகள் நினைவில் எழுகின்றன. இடத்தின் அருமை கருதி அன்னாரின் செயற்கை வைர தயாரிப்பாளர்களின் வணிகர்கள் சங்கத் தலைவராக செயல்பாட்டில் தலையாய இரண்டினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

 

நல்ல தலைவனுக்கு வீரம் வேண்டும். எதிர்ப்புகளைக் கண்டு கலங்காத நெஞ்சம் வேண்டும். திறனோடு இவைகளை எதிர்கொள்ள வேண்டும். இவைகளைக் காட்டிலும் யாவரையும் அரவணைத்து இணைத்துச் செயல்படும் தகுதி இன்றியமையாதது.

 

இவ்வளவையும் ஒருங்கே பெற்றவர் திரு. M.S.R. அவர்கள். தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என நீண்ட வரிசையில் ஒருங்கிணைப்பதற்கு அவர் கொண்ட முயற்சி ஒப்பற்றது. இடையறாது இலக்கினை அடைய அவர் ஆற்றிய செயல்கள் மகத்தானது. எல்லா தரப்பினரிடமும் அவர் பெற்றிருந்த செல்வாக்கு இணையற்றது. இவற்றின் பயனாக செயற்கை வைரத் தொழிலுக்கு வரிவிலக்கு என்ற வெற்றிக் கனி கிடைத்தது. இன்றைய அளவிலான சூழ்நிலையிலும் தொழில் செயல்படுகிறது எனில் திரு. M.S.R. அவர்களின் இந்த பங்களிப்பு தான் அடித்தளம் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

 

நகர்புற உற்பத்தியாளர்கள், வணிகர்கள், விற்பனையாளர்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருக்கும் இலட்சக் கணக்கான செயற்கை வைரத் தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்ற தொலைநோக்கு அவருக்கு இருந்தது.

 

இவர்கள் பயன்பெற வேண்டும் என்று, அவர் கதவைத் தட்டிய துறைகள் அதிகம். சென்னை மட்டுமின்றி டில்லி வரைச் சென்று சரியானவர்களைச் சந்தித்து, தொழிலின் நிலையை எடுத்து சொல்லி கிராமப்புறத்தில் பல லட்சக்கணக்காண மக்களின் வாழ்வாரதாரமாக செயற்கை வைரத் தொழில் விளங்குகிறது என்கிற உண்மை நிலையை விளக்கிட இடையறாது பாடுபட்டத் திறன் வியக்கத்தக்கது.

 

இவற்றின் பயனாகத் தான் செயற்கை வைரத் தொழிலைச் சார்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் பல துறைக்கான தலைவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் உருவானது. இதன் பயனாக இத்தொழில் இலவச மின்சாரத்தைப் பெற்றதைக் கிராமப்புறங்களில் செயற்கை வைரத் தொழில் புரிவோர் மின்சாரக் கட்டணத்தில் இருந்து முழு விலக்குப் பெற்றனர். திரு. M.S.R. பெற்ற இந்த வெற்றி தான் இன்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ, வளம்பெற, உயர, அடித்தளமானது என்பது யாவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

 

அவர்தம் பணிகளைப் போற்றுவோம். அவரின் சிறப்பினை நினைவில் நிறுத்துவோம். அதனால் நாம் மட்டுமல்ல வருகின்ற தலைமுறையும் உயரும், வளம் பெறும்.

16. திரு M.S.R ஒரு தலைவராக

அகில இந்திய செயற்கை வைர உற்பத்தியாளர்கள் & வணிகர் சங்கம்
புதிய எண்: 401, ப. எண்: 200, பெரியகடை வீதி,
திருச்சிராப்பள்ளி – 620 008.

திறன்மிக்கவர்கள் மிக அரிதாக இருக்கும் காலகட்டம் இது. இச்சமயில் பன்முக திறன் கொண்ட திரு M.S.R. மக்கள் மனதில் நீங்காது நிற்கிறார். M.S.R. அவர்களின் திறன்களையும், பங்களிப்பையும் பதிவுசெய்வது அவரது நினைவுகளைப் போற்றுவதற்கு மட்டுமல்ல, அது வருங்கால தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும்.

அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நாங்கள் பெற்ற வரம், பல நிகழ்வுகள் நினைவில் எழுகின்றன. இதத்தின் அருமை கருதி அன்னாரின் செயற்கை வைர தயாரிப்பாளர்களின் வணிகர் சங்கத் தலைவராக செயல்பாட்டில் தலைமையாக இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

நல்ல தலைவனுக்கு வீரம் வேண்டும். எதிர்ப்புகளை கண்டு கலங்காத நெஞ்சம் வேண்டும். திறனோடு இலக்கை எதிர்கொள்ள வேண்டும். இலக்கைக் காட்டியும் யாவரையும் அரவணைத்து இணைத்து செயல்படும்தகுதி இன்றியமையாதது.

இவ்வனையையும் ஒருங்கே பெற்றவர் திரு M.S.R. அவர்கள். தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என நீண்ட வரிசையில் ஒருங்கிணைப்பதற்கு அவர் கொண்ட முயற்சி ஒப்பற்றது. இதயார்த்த இலக்கினை அடைய அவர் ஆற்றிய செயல்கள் மகத்தானது. எல்லா தரப்பினரிடமும் அவர் பெற்றிருந்த செல்வாக்கு இணையற்றது. இவரின் பயனாக செயற்கை வைரத் தொழிலுக்கு வலிவளிக்கு என்ற வெற்றிக் கனி கிடைத்தது. இன்றைய அளவிலான தொழில்நிலையிலும் தொழில் செயல்பாட்டிலும் திரு M.S.R. அவர்களின் இந்த பங்களிப்பு தான் ஆதாரம் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

நகரில் உற்பத்தியாளர்கள், வணிகர்கள், விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இருக்கும் இலட்சக்கணக்கான செயற்கை வைரத் தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என்ற தொலைநோக்கு அவருக்கிருந்தது.

இவர்கள் பயனடைய வேண்டும் என்று, அவர் கடந்த தடைய துறைகள் அதிகம். சென்னை மட்டுமன்றி டெல்லி வரைச் சென்று சரியானவர்களைச் சந்தித்து, தொழிலின் நிலையை எடுத்துச் சொல்லி கிராமப்புறத்தில் பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக செயற்கை வைரத் தொழில் விளங்குகிறது என்ற உண்மை நிலையை விளக்கி இடையறாது பாடுபட்டதின் விளக்கத்திற்காகும்.

இவற்றின் பயனாகத் தான் செயற்கை வைரத் தொழிலைச் சார்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் பல துறைக்கான தலைவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் உருவானது. இதன் பயனாக இத்தொழில் இலவச மின்சாரத்தைப் பெறுவதற்கான கிராமப்புறங்களில் செயற்கை வைரத் தொழில் புரிவோர் மின்சார கட்டணத்தில் இருந்து முழு விலக்கு பெற்றனர். திரு. M.S.R. பெற்ற இந்த வெற்றி தான் இன்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ, வளம்பெற, உயர, அடித்தளமானது என்பது யாவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

அவர்தம் பணிகளைப் போற்றுவோம். அவரின் சிறப்பினை நினைவில் நிறுத்துவோம். அதனால் நாம் மட்டுமல்ல வருங்கால தலைமுறையும் உயரும், வளம் பெறும்.

17. மோதி எஸ்.இராஜகோபால் நினைவு அழியாது

சா. கந்தசாமி
சென்னை

மோதி ராஜகோபால் நல்ல மனிதர். சிறந்த படிப்பாளி அவர் வீட்டில் தெலுங்கு பேசுவார். ஆனால் அவர் படிப்பு தமிழ். ஆங்கிலம், தமிழ் உரைநடை இலக்கியத்தில் பெரும் பகுதியை அவர் படித்து இருந்தார். அதுபற்றி பேசுவதிலும் அவருக்கு பிரியம் இருந்தது. அவர் தனக்கென்று ஒரு தரத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். அதன் வழியாகவே அவர் பல சிறந்த நூல்களைப் படித்து நினைவில் வைத்துக் கொண்டிருந்தார். சிறுகதை, நாவல் படிப்பது போல அவருக்கு தத்துவத்திலும் ஈடுபாடு இருந்தது. தத்துவம் என்பது வாழ்க்கை சார்ந்தது. வாழ்க்கையில் தத்துவம் இடம் பெற்றுள்ளதை எளிய முறையில் கண்டு உணர்ந்து அதனை எடுத்துச் சொல்லும் விதத்தை அறிந்து இருந்தார்.

தத்துவத்தை கவிதையாகச் சொல்லும் லெபனான் கவிஞர் கலீல் ஜிப்ரான் மீது அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது. கலீல் ஜிப்ரானை அவர் ஆங்கிலத்தில் நன்கு படித்து உள்வாங்கியிருந்தார். அவர் படிப்பு என்பது அவராக உருவாக்கிக் கொண்டது. படிப்பு என்பது சந்தோஷம் கொடுக்கக் கூடியது என்பதனை மோதியின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கேட்கின்றவர்கள் சந்தோஷம் அடையும் விதமாக அவர் பேசுவார். அவரைச் சென்னையிலும், திருச்சியிலும் பல முறைகள் சந்தித்து இருக்கிறேன். அடிப்படையில் அவர் வணிகர். அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் முக்கியம் பேசுவதிலும், இலக்கிய நண்பர்களை சந்திப்பதிலும். அதிகமான நேரம் செலவிட்டார். அது அவருக்கு சந்தோஷமாக இருந்தது போலவே உடன் இருந்தவர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

மோதி ராஜகோபால் தான் படித்த புத்தகங்கள், கேட்ட இசை, பார்த்த சினிமா பற்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வார். விசாலமான மனம் கொண்டிருந்தார்.

ரவீந்திரநாத் தாகூர் சிறுகதை தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம். த.நா.குமாரசாமி வங்கமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த கதைகள். அதில் காடும் கதிரும், மனைவியின் கடிதம் உட்பட தாகூரின் நோபல் பரிசு ஏற்புரை கிழக்கிந்திய சிந்தனை மரபில் இருக்கிறது. அவர் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எதைச் சொல்கிறதோ அதனையே நோபல் ஏற்புரையில் சொல்கிறார். நான் ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்து இருக்கிறேன். தற்போது தமிழில் படிக்க சந்தோ­மாக இருக்கிறது என்றார்.

மோதி ராஜகோபால் ஒரு சர்வதேச படிப்பாளி. உலகத்தில் முக்கியமான புத்தகம் எல்லாம் அவர் படித்து இருந்தார். இலக்கியம் போலவே அவருக்கு சரித்திரம், தத்துவம், உளவியல் நூல்களில் அதிகமான அக்கறையும், ஈடுபாடும் இருந்தது. அவர் படிப்பு அர்ப்பணிப்பானது. அவர் தனக்காகவே படித்தார். அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு சந்தோஷப்பட்டார். திருச்சியில் அவரை சந்தித்த போது “மோதி உங்கள் படிப்பை, நீங்கள் அனுபவித்த புத்தகங்கள் பற்றி எழுதுங்கள். அது பலருக்குப் பயன்படும்” என்றேன்.

“இல்லை, நான் எனக்காக தான் படிக்கிறேன். எனக்காக தான் பேசுகிறேன், எழுதுவதாக நான் நினைக்கவே இல்லை” என்றார்.

அவர் பேசியது எழுதியது மாதிரியே படுகிறது. அவர் நினைவும் பேச்சும் அப்படியே இருக்கிறது. நற்பண்புகள் நிறைந்த பெரிய கனவான். அவர் அடிக்கடி போன் செய்து பேசுவார். அவர் பேச்சு எப்போதும் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும். இருமுறை அவரிடம் இருந்து போன் வந்தது. குரலில் மாற்றம் இருந்தது.

“என்ன மோதி உடல்நிலை சரியில்லையா?” என்று கேட்டேன்.

“கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. கோயம்புத்தூருக்கு சென்று வைத்தியம் செய்து கொண்டு வந்திருக்கிறேன். நாம் விரைவில் சந்திப்போம்” என்றார்.

அந்தச் சந்திப்பு நிகழவே இல்லை.

நல்ல புத்தகத்தின் முதல் வாசகர் அவர். படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் பண்பாளர். பல புத்தகங்களை நான் அவர் மூலமாகத் தெரிந்து படித்தேன். அவை ஒருபொழுதும் ஏமாற்றவில்லை.

18. என் இனிய நண்பர்

செ. முருகப்பன்,
மீனாட்சி புத்தக நிலையம்,
மதுரை.

மோதி ராஜகோபால் அவர்களை நான் முதன்முதலில் கோவையில் ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். அவரும் நானும் எனது மகன் செல்லப்பனும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்பொழுது அவர் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின் உங்களை இதுவரை சந்தித்ததில்லை. உங்களைப் பற்றி அறிந்துள்ளேன் என்று கூறியதோடு எனது தந்தையாரைப் பற்றி மிகவும் பாராட்டிச் சொன்னார்கள். அவர்களும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறினார்கள்.

அவரோடு பலமுறை கலந்துரையாடிய அனுபவங்களைக் கூறினார்கள். என் மகன் பெயரைக் கேட்டதும் தாத்தாவின் பெயரில் இருக்கிறாய் தாத்தாவை போலவே இருக்கின்றாய். தாத்தாவை போன்றே கனிவும், இனிமையும் உன் பேச்சில் உள்ளது. என்று அவனை உற்சாகப் படுத்தியதோடு தாத்தாவைப் போன்று நல்ல பெயரோடும் புகழோடும் நீடூழி வாழ வேண்டும் என்று ஆசிர்வதித்தார்.

புதுதில்லி விமான பவனில் நடைபெற்ற 36-வது ஞானபீட பரிசளிப்பு விழாவில் அன்றைய குடியரசு தலைவர் திரு. அ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களிடம் 29.09.2005 அன்று ஞானபீட விருதினைப் பெற்றுக் கொண்ட திரு.ஜெயகாந்தன் அவர்களோடு நானும் நண்பர் மோதி S.ராஜகோபால் அவர்களும் நேரில் கலந்து கொண்ட இனிய அனுபவங்கள் என் நெஞ்சை விட்டு அகலா இடம் பிடித்துள்ளது. அன்றைய நிகழ்வில் திரு.ஜே.கே.வுடன் நானும் நண்பர் மோதி S.ராஜகோபால்
அவர்களும் மற்றும் நண்பர்கள் திரு. K . S.சொக்கலிங்கம், திரு. K.வேலாயுதம் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தையும் எங்களது 50-ஆம் ஆண்டு பொன்விழா மலரில் வெளியிட்டு பெருமைச் சேர்த்துக் கொண்டோம்.

அமரர் மோதி அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர் திரு.ஜெயகாந்தன் எழுத்துக்களை, ஒரு ரூபாய் விலையில் தன் உலகம் முழுவதும் பரப்புவதற்காகவே “”மோதி பிரசுரத்தை” நிறுவியவர் மோதி
அவர்கள்.

ஜெயகாந்தன் அவர்களின் ஆசிர்வாதத்தை 1977-ஆம் ஆண்டே பெற்றவர் மோதி S. ராஜகோபால் அவர்கள். ஜே.கே அவர்கள் தமது “”ஜெய ஜெய சங்கரா” என்ற நூலின் பின்னுரையில் பின்வருமாறு வாழ்த்துகிறார். இலக்கியத்தின் மீது இவர் நிறை அன்பு கொண்டவர். அதனால்தான் பெரும் லாபம் கருதாமல் இப்பெரும் பணியினை ஓர் நற்கைங்கரியமாக ஆற்றி வருகிறார்கள். அவர்களே இதனை பிரசுரமாக்கித் தமிழ் பெருமக்களுக்கு விநியோகம் செய்தார்.

வாசகர்களுக்கும், எழுதுபவனுக்கும் ஏற்பட்டுள்ள உறுதியான ஒரு பாலத்தின் மறுபெயரே “”மோதி பிரசுரம்” நான் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் தமிழ்த்தாய் அவளது சிரசில் மலர் பொழிந்து ஆசிர்வதிக்கிறாள்.

19. நினைத்தாலே இனிப்பவர் மோத்தி

தேவபாரதி,
சென்னை

“மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய் பிறந்தவர் மடிவது திண்ணம்”
— மகாகவி பாரதியார்.

மனிதன் பிறந்த கணத்தினின்று மரணதேவதை தன் ஆலிங்கனத்தைத் தொடர்ந்து விடுகிறாள். ஆகவே மரணம் தவிர்க்க முடியாததும் இயல்பானதும் ஆகும்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை மரணத்தினின்று உணர முடியாது. அவன் வாழ்ந்த வாழ்க்கையை கொண்டே அறியலாம். எங்கள் சகஹிருதயரான மோதி ராஜகோபால் உன்னத வாழ்க்கை வாழ்ந்தவர். அன்பு, எளிமை, நட்பு, தயை, கொடை முதலிய அருங்குணங்கள் கொண்டவர்.

1965-ஆம் ஆண்டு நான் அவரைப் பார்த்ததாக நினைவு. எங்கள் “ஆசிய ஜோதி பிலிம்ஸ்” நிறுவனம் மயிலாப்பூரில் இருந்தது. 1964-ல் நாங்கள் தயாரித்த “உன்னைப் போல் ஒருவன்” படம் வெளிவந்தது.

தமிழ்நாடு முழுவதும் அநேக கலைக்குழுவினரால் அப்படம் திரையிடப்பட்டது. மோதி எங்களை சந்தித்த போது அப்படத்தைக் கண்டு ரசித்திருக்கிறார். முதன்முதலில் அவர் இலக்கிய மாமேதையும், அப்படத்தின் இயக்குனருமான ஜெயகாந்தனை சந்திக்க வந்திருந்தார். அப்போதுதான் நானும் அவரைச் சந்தித்தேன். அந்நாள் முதற்கொண்டு எனக்கு அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் ஆனார்.

அதற்குப் பிறகு அவர் சென்னை வருகிற போது எங்களுடன் தங்கி இன்புற்று மனம் நெகிழ்ந்து போகாமல் போகமாட்டார். அவர் அனேகமாக எப்போதும் “காஸ்மோ பாலிட்டன் கிளப்பில்” தான் தங்குவார்.

ஆழ்வார்பேட்டையில் இருந்த எங்கள் மடத்துக்கு வருவார். ஜெயகாந்தனின் ஆத்மார்த்தமான நண்பர்கள் அனைவரும் அவரது நண்பர்களே.

அவர் குறைவாகவே பேசுவார். அதிலே அவரது அன்பும், நட்பும் வெளிப்படும்.

எப்போதும் அவரது புன்னகை மாறாத முகமே என் கண்களிலும், மனதிலும் பதிந்திருக்கிறது. ஜெயகாந்தனின் ஒரு நெருக்கடியான காலத்தில் அவருக்காக “மோதி பிரசுரம்” என்ற நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார்.

அதன்மூலம் “ஜெய ஜெய சங்கரா”, “எந்தையும் தாயும்”, “மனவெளி மனிதர்கள்” போன்ற குறுநாவல்களை வெளியிட்டார். மற்றும் “இமயத்துக்கு அப்பால்”, ”சுதந்திரச் சிந்தனை”, “யோசிக்கும் வேளையில் பாரதி பாடம்” போன்ற அனேக நூல்களை வெளியிட்டார். அக்காரியம் அவரது ஆருயிர் நண்பரான ஜே.கே.வுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய அரும்பணியாகும்.

ஒரு சமயம் நான் கலீல் ஜிப்ரானைப் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்தமுறை சென்னை வந்த போது கலீல் ஜிப்ரானைப் பற்றிய ஒரு புத்தகத்தை எனக்கு ஞாபகமாய் கொண்டு வந்து கொடுத்தார். அந்த நிகழ்வு அவரது அன்பையும், இலக்கிய ஆர்வத்தையும் எனக்குப் புலப்படுத்தியது. அதுபோலவே கம்பராமயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்தமுறை வந்தபோது கம்பராமாயணம் பால காண்டத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்.

நண்பர்களின் ரசனைகளின் பேரிலும் அதில் காட்டும் அவரது சிரத்தையும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மேலும் அவர்பால் எனக்கு அன்பையும், நட்பையும் கொள்ள உதவியன.

எனது வாழ்க்கையில் அநேக மகிழ்ச்சியான தருணங்களிலும், இடர்பாடான தருணத்திலும் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். இதெல்லாம் நண்பர்களின் பால் அவர் கொண்ட கரிசனத்தையே காட்டுகிறது.

அவர் பெருந்தனவந்தர் மட்டுமல்ல பெருந்தகையாளர். பெரும் கல்வியாளர், இலக்கிய ஆர்வலர், நல்ரசனையுடையவர், எப்போதும் அவரது நினைவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே தருகிறது.

நாங்கள் நண்பர்கள் சிலர் சிலதடவை சபரிமலைக்குப் போயிருந்தோம். ஒரு சமயம் ஒரு பெரிய மூட்டையை அதாவது பெரிய பையில் அவரது உடை மற்றும் சில பொருட்களை கொண்டுவந்தார். Less Luggage more comfort என்ற கருத்தை கொண்டவர்.

அதனால் ஒரு சிரிப்புடன் “என்ன சார் பொதி சுமப்பது போல் கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று ஒரு புன்னைகையுடன் வினவினேன்.

அடுத்த முறை ஊரில் இருந்து எங்கள் மடத்துக்கு வந்திருந்தார். அப்போது வழக்கமாய் கொண்டு வருவது போல் அல்லாமல் – ஒரு சிறிய லக்கேஜ் கொண்டு வந்திருந்தார். பேச்சு வழக்கில் நான் சென்ற முறை சொன்னதை ஞாபகப்படுத்துவது போல. “என்ன பாரதி பொதி சிறியதாக இருக்கிறதா” என்று அவர் வழக்கமான புன்னகையுடன் கேட்டார்.

எனக்கு அவரது பண்பு மிகவும் பிடித்திருந்தது.

“நாவல்தோறும் நாவல்தோறும் இனிக்கும் நூல்நலம் போல்” – அவரது நட்பும் பண்பும் நினைக்க நினைக்க எனக்கு நன்மையையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.

20. பாரதி பார்வை உடையவர் மோதி ராஜகோபால்

பரிணாமன்

மோதி ராஜகோபால் இனிய பண்புகள் நிறைந்த இலக்கிய ஆர்வலர். தனது இல்லத்தை நூலகமாகக் கொண்ட மாபெரும் வாசகர்.

தமிழ்மொழி இலக்கியங்களையும் – அதாவது பழைய இலக்கியங்களையும் – புதிய இலக்கியங்களையும் பயின்றவர். ஆங்கில இலக்கியங்களைப் பற்றியும், அவர் ஆழ்ந்து உணர்ந்து பயின்று ரசித்திருப்பதை அவருடன் நீண்ட காலம் பழகிய என்னைப் போன்றவர்கள் அறிந்திருக்க முடியும்.

எப்போதும் மலர்ந்த முகத்துடன் விளங்கியவர். புன்னகைக்கும் குறுநகைக்கும் இடைப்பட்ட நகை அவருடையது.

தோழர் ஜெயகாந்தனின் நீண்டகால சபை உறுப்பினர்.

சென்னை ஆழ்வார்பேட்டை ராமசாமி நாயக்கன் தெருவில் ஜே.கே. சபை முப்பதாண்டுகளுக்கும் மேல் கொலுவீற்றிருந்தது.

1980-களில் நான் அவரை சபையில் சந்திக்கிறேன். ஒவ்வொரு ஏப்ரல் மாத இறுதியிலும் ஜே.கே.வின் பிறந்த நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சபை உறுப்பினர்கள் சென்னையில் கூடிக் குலாவுவது வழக்கமானது.

தோழர் ஜெயகாந்தன் மூலமாகவும் அவர் சபை மூலமாகவும் நான் அறிந்த இலக்கியவாதிகள், இலக்கிய அன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனேகம் பேர் உண்டு. அதில் முதல் தரமான இலக்கிய அபிமானி அருமை நண்பர் மோதி ராஜகோபால் அவர்கள்.

ஜெயகாந்தன் சபை விவாதங்களை அமைதியோடு ஆழமாக உள்வாங்கிக் கொண்டு தேவையான போது மட்டும் தனது கருத்துக்களை கூறி அமர்பவர் மோதி ராஜகோபால். ஜெயகாந்தன வட்டத்தில் அவரது படைப்புகள் முழுவதும் கற்றுணர்ந்தோரும் உண்டு. ஏன்? அவரைப் படிக்காமலேயே அவரது மனதில் இடம் பிடித்தோரும் உண்டு.

ஜெயகாந்தனைச் சூழ்ந்த நட்பு வட்டத்தில் பலதிறப்பட்டவர்கள். அவரது ஆளுமையை வேடிக்கை பார்க்கும் சாதாரணத் தொழிலாளர்களும் உண்டு.

ஆனால் மோதி ராஜகோபால் அவர்கள். ஜெயகாந்தனை முழுமையாகக் கற்றவர் உய்த்து உணர்ந்தவர். எனவே தான் “மோதி மோதி” என்று ஜெயகாந்தன் அவரை அழைக்கும் தொனியில் நட்பின் உன்னதம் விளங்கும்.

சமூக நல்உபகாரப் பாரம்பரியமிக்கக் குடும்பத்தில் உதித்த மோதி ராஜகோபால் இளமை முதலே ஜெயகாந்தன், திருலோக சீதாராம் போன்ற எண்ணற்ற சமூக அக்கறையும், இலக்கிய நேர்மையும் பெற்ற ஆத்மாக்களைத் தேடிச் சென்று கண்டு கொண்டவர் என்பது சிலகாலம் அவரோடு பழகியவர்களுக்கும் விளங்கும். திருச்சிக்காரரான அவர் மதுரையில் சம்பந்தம் செய்து கொண்டவர். எனது ஊரோ மதுரை. 1988-இல் சென்னை வந்து குடியேறியவன். நான் மதுரையில் வசித்த காலத்தில் அவர் அடிக்கடி என்னைத் தொடர்பு கொண்டு சிலமணி நேரமாவது அரசியல், இலக்கியம், கலை என்று ஆத்மார்த்தமாக விவாதித்து மகிழாமல் சென்றதில்லை.

ஆன்மீகமோ, இலக்கியமோ, அரசியலோ, கல்வியோ, கலாச்சாரமோ, வாழ்வியல் முன்னேற்றமோ எது குறித்தும் தெளிவான தீர்க்க தரிசனமான பாரதிப் பார்வை இயல்பாகப் பெற்றவர் மோதி ராஜகோபால்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே – நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

எனும் வெண்பா நினைவுக்கு வருகிறது. இந்த வரிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் திரு.மோதி எஸ்.ராஜகோபால் அவர்கள். அவர்களின் நினைவுகளோடு நடைபோடுவோம்.

21. அவர் ஒரு காவியம்

கலைமாமணி, முனைவர் நாவுக்கரசர், சோ.சத்தியசீலன்
55, சேதுராம் பிள்ளைக்காலனி,
திருச்சி.

அமரர் மோதி ராஜகோபால் அவர்களைப் பற்றி எண்ணும் போததெல்லாம் நினைவுக்கு வரும் சொற்றொடர்கள் இவை தான்.

“His life was gentle and the elements
so mixed in hibe might start up
And say to all the world, This was a man”

“அவருடைய வாழ்க்கை உத்தமமான ஒன்று. அவரோடு கலந்து நிறைந்த பூதங்கள் ஐந்தும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) எழுந்து நின்று இவர்தான் முழுமனிதர் என்று கூறும்.

இது ஷேக்ஸ்பியர் வாக்கு. இப்படி அமைந்தது தான் அமரர் மோதி ராஜகோபால் அவர்களுடைய வாழ்வும் வாக்கும்.

அய்யன் திருவள்ளுவர் கூறும்,

“அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பூன்றிய தூண்”

என்னும் குறளுக்கு ஓர் ஒப்பற்ற விளக்கமாய் அமைந்தது தான்அவருடைய வாழ்க்கை. “ஒவ்வொரு மனிதனும் ஒரு காவியம், உனக்கு மட்டும் அவரை படிக்கத் தெரிந்தால்.” every man is a volume, only thing you should know how to read him என்று ஓர் ஆங்கில அறிஞன் கூறுவான்.

அமரர் மோதி ராஜகோபால் என்னும் காவியத்தை நாம் கற்றால் அவருடைய உன்னதமான வாழ்க்கை எனும் நூலை ஊன்றிப் படித்தால்,

அன்பு என்றால் என்ன?
தீய செயலுக்கு நாணுவதும் ஒதுங்குவதும் எப்படி?
உலக மக்களுக்கு நம் கடமை என்ன?
இரக்கம் என்பது யாது?
வாய்மை, நேர்மை ஆகியவற்றின் விளக்கம் என்ன?

ஆகிய அனைத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அறிவிலே தெளிவு
நெஞ்சிலே துணிவு
செயலிலே கனிவு
ஓயாத உழைப்பு
தளராத தன்னம்பிக்கை
மங்காத மனிதநேயம்

ஆகியவற்றின் கூட்டுக் கலவை தான் அமரர் மோதி ராஜகோபால் அவர்கள்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

என்னும் அய்யன் திருவள்ளுவர் வாக்கு சாத்தியமானால் அமரர் மோதி ராஜகோபால் இறைவனுடைய திருவடியில் ஒன்று கலந்திருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

22. ரசிக்கத்தக்க சுகவாசி ரசனையாளர்களின் சகவாசி

கலைமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா,
92-C, முதல் தளம்,
B.K. ரங்கநாதன் வீதி,
புது சித்தாபுதூர்,
கோவை – 641 004
போன்: 0422 – 4379502

பொருள்மிக்கதாய் ஒருநாள் கழிந்தாலே பெருமிதமாய் இருக்கிறது. பொருள்மிக்கதாய் ஒரு பிறவியைக் கழித்திருக்கும் மோதி சார் எவ்வளவு பெருமையாக உணர்ந்திருப்பார்.

பெயரளவில் அறிமுகமானவர்கள் தொடங்கி, உயிரளவில் நெருக்கமானவர்கள் வரை, “அற்புதமான மனுஷன் சார்” என்று சொல்லும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் திரு. மோதி ராஜகோபால் அவர்கள். பலமுறை நடந்த தொலைபேசி உரையாடல் ஓரிரு முறை நடந்த நேரடி சந்திப்பு என்கிற குறைந்தபட்ச தொடர்பிலேயே அழுத்தமாக மனதில் பதிந்த அதிசய மனிதர் அவர்.

என் செல்லிடப்பேசி எண் அவருக்கு தெரியும். ஆனால் அழைக்க மாட்டார். அலுவலக எண்ணுக்கு அழைப்பார். உதவியாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவ்வளவு பெரிய மனிதர் இணைப்பில் காத்திருக்கிறாரே என்ற பதட்டத்தில் “செல்போனிலேயே கூப்பிட்டிருக்கலாமே” என்பேன். “நீங்கெல்லாம் இரண்டு பத்திரிக்கை நடத்தறவங்க சார்! அப்படியெல்லாம் நினைச்ச நேரத்துக்கு தொந்தரவு பண்ணக் கூடாதுங்க சார்” என்பார்.

மோதி ராஜகோபால் அவர்களின் தீராக்காதலராகிய திரு.நாஞ்சில் நாடன் தங்கள் இருவரிடையிலான நட்புக் குறித்து பேசும்போதெல்லாம் உணர்ச்சிவயப்படுவார். ஒருமுறை சென்னையில் இருந்த போது நாஞ்சில் அழைத்தார். “மோதி சாருடைய விருந்தினராக காஸ்மாபாலிட்டன் கிளப்பில் இருக்கிறேன், வாங்களேன்” என்றார். கைவைத்த பனியனுடன் மேல் வயிறு வரை ஏற்றிக் கட்டப்பட்ட எட்டுமுழ வேட்டியுமாய், “வாங்க சார், வாங்க சார்”
என்று வாய் நிறைந்த சிரிப்போடு வரவேற்றார் மோதி சார்.

சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ஆர்.அவர்களும், மோதி சாரும் பனியன் மடிப்பு உறுத்தக் கூடாது என்பதற்காக பனியனைத் திருப்பிப் போடுவார்கள் என்று நாஞ்சில் சொல்வார்.

நாவுக்கரசர், சோ.சத்திய சீலன் அய்யா அவர்களை எப்போது சந்தித்தாலும் “”எங்க செக்ரட்டரி சார் உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா சொல்வார்” என்பார். நல்ல நூல்களைத் தேடிப்பிடித்து தானிருக்கும் இடமே தெரியாமல் – அதே நேரம், “”நானிருக்கிறேன் உங்களுக்கு” என்று சொல்லாமல் சொல்லும் நிறைய நேசராக விளங்கினார் அவர்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் சகஹிருதயராய் சிறந்த மனிதர்களின் சகவாசியாய், தன் செளகரியங்களை பிறருடன் பகிர்ந்து கொண்ட சுகவாசியாய் விளங்கியவர் மோதி ராஜகோபால் அவர்கள்.

அவரது கனிந்த முகமும், கலையாத நினைவுகளும் நம்முடன் துணையாய் எப்போதும்…

23. ராஜா என்றால் ராஜாதான்

மோதி எஸ் பட்டாபிராமன் B.Com
192, பெரியகடை வீதி, திருச்சி – 8,
போன்: 2700880

நான் மோதி ராஜகோபால் நினைவாகவே என் வாழ்க்கையை இனிது கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய இனிய தகப்பனார் என்னிடம் பழகுவதற்கு உரிமை கொடுத்தார். ஆனால் அந்த பாசப் பிணைப்பு வெற்றிகரமாக உள்ளது. எங்கள் இருவரின் தகப்பனார்களின் பெயர் மோதி ஸ்ரீராமுலு செட்டியார் என்று வைத்தார்கள். என் தந்தை வயதில் மூத்தவராக இருந்ததால் மோதி ராஜகோபால் தகப்பனாரை ஊரில் யாவரும் சின்ன-ஸ்ரீராமுலு என்று அன்போடு அழைப்பார்கள். மோதி குடும்பத்திற்கு ஒரு விழி வெளிச்சமாக நம் தகப்பனார்கள் திகழ்ந்தனர். நாங்கள் இருவரும் நகரம் சதையும் போல இணைப்பிரியா நண்பர்களாக இணைந்திருப்போம். நான் என் தகப்பனாருக்கு 11 குழந்தைகளில் ஒருவன். 10-வது குழந்தை என்றதால் எனக்கு பட்டாபிராமன் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் இல்லமும் அவருடைய வீடும் அடுத்தடுத்து இருந்ததால் நாங்கள் பழகுவதற்கு மிகவும் எளுவாக இருந்தது. என்னுடைய பழைய நினைவுகளின் வாயிலாக மோதி ராஜகோபாலை காண்கிறேன்.

மோதி குடும்பம் திருச்சியில் பழமையான பெரிய குடும்பமாகத் திகழ்ந்து வந்தது. இதில் வியப்பு என்னவென்றால் இந்த கதாநாயகன் குடும்பத்தில் இன்று வரை ஒரே ஆண்வாரிசு என இறைவன் வரம் அளித்தார். இவருடைய பள்ளிப்பருவம் இழை ஆண்டு ஒரு கார் விபத்தில் கொடை வள்ளல் என அத்தப்பாவை மற்றும் காலன் பறித்துக் கொண்டான். அதில் பயணம் செய்த என் சகோதரர் மோதி ராஜகோபால் பல காயங்களுடன் உயிர் பிழைத்தார். அவரை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து மிகவும் கவனத்துடன் சிகிச்சை அளித்தோம். சமார் ஒரு மாதம் ஆயிற்று. அதுவரை காலமான செய்தி டாக்டர் ஆலோசனைப்படி கூறாமல் இருந்தார்கள். அவரிடம் இந்த செய்தியை சொல்ல வேண்டாமென்று எனக்கு உத்தரவிட்டார்கள். அவர் குணமடைந்த பின் ரூபோடு அமைதியாக இருந்ததால் மனமுவந்து என் தகப்பனார் காரியங்களை செவ்வனே செய்து முடித்தார்.

நல்லவிதமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து ஆண்டவன் அருளாசியால் இல்லத்திற்கு திரும்பினார். மோதி ராஜகோபால் தன்னுடைய விதியை நினைத்து மிகவும் வருத்தமடைந்தார். இல்லத்திற்கு அழைத்து வந்த காட்சி என் மனதை விட்டு அகலாமல் பதிந்து விட்டது. குடும்பத்தில் அனைவரும் கண்ணீர் மல்க அவருக்கு சமாதானம் செய்து தைரியம் சொன்னோம். பிறகு அவருடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது. மோதி ராஜகோபால் குடும்பத்தில் பெரியவர்களின் அரவணைப்பிலும் அன்னையின் ஆசையிலும் நண்பர்களின் அனுசரிப்பிலும் அடுத்தகட்ட வாழ்க்கையை ஆரம்பித்தார்.

உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை வீட்டிலேயே சிறந்த ஆசிரியர்கள் உதவியில் செவ்வனே கற்றுவந்தார். ஆங்கிலம் நன்கு கற்றுத் தேர்ந்த ஒரு முதலமை மாணவனுக்கு ஒப்பாக சிறந்து விளங்கினார் என்று சொன்னால் மிகையாகாது. முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் திரு.ராமானுஜம் என்ற சிறந்த ஆசிரியரை ஆண்டவனும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக மோதி குடும்பத்தார்கள் ஆசியுடன் ஊரே மெச்சும்படி வாழ்க்கையில் முன்னேற்றமடைந்தார். பிறகு எங்கள் மோதியின் குடும்பத்தில் ஒரு துருவ நட்சத்திரமாக ஒளிவீசினார். வாழ்க்கையில் திருப்புமுனையாக வரதராஜலு அவர்கள் என்ற சித்தப்பாவின் குடும்பத்திற்கு எடில்லா மருமகனாக வர இறைவன் வழிவகுத்தான். ஊரே மெச்சும்படி அந்த குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

மோதி ராஜகோபால் இல்லத்திற்கு உகந்தவர்களான அரிய பொக்கிஷமாக எல்லாவித புத்தகங்களும் அவரை வந்தடைந்தன. ஒரு நாள் நிலையம் போல் அவருடைய இல்லம் மாறியது. புத்தகங்களை தான் மட்டும் படித்து பயனடையாமல் நண்பர்களுடன் இணைந்து உலக அறிவை விருத்தி செய்து கொண்டார். அத்துடன் இல்லாமல் தன் தகப்பனார் ஆரம்பித்த செயற்கை வரை வியாபாரத்திலும் வெற்றி கண்டு வெகுகாலம் இருந்து வந்த பாசங்களை அரவணைத்துக் கொண்டார். இவருடைய திறமையினால் செயற்கை வரைவியாபாரிகள் சங்கத்தின் தலைமை பதவி இவரை வந்தடைந்தது. சங்கத்தின் தலைவராக எண்ணற்ற முன்னேற்றங்களையும், சாதனைகளையும் செய்து காட்டினார். மோதி ராஜகோபால் சங்கத்தின் தலைவராக பணியாற்றிய காலத்தில் நான் திருச்சி வியாபார சங்கத்தில் தலைவராக பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் அவருடைய தகப்பனார் செய்து வந்த தானதர்மங்களையும் கோயில் கைங்கர்யங்களையும் செவ்வனே செய்து வந்தார். ஏழைகளுக்கு கல்வி உதவித் தொகைகளை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார். குறிப்பாக கல்லூரிக்கு ஆறுசேர்மோர் கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில், பெரியகடை வீதி அங்காளம்மன் கோயில்,

எல்லையம்மன் கோயில், ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், இதய தெய்வமாகிய திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் மற்றும் எண்ணற்ற ஆலயங்களுக்கு மோதி ராஜகோபால் தன் பொன்னான கரங்களால் ஆலய மேம்பாட்டிற்கு வழிவகுத்தார்கள். கல்வி நிலையங்களுக்கு அள்ளிக் கொடுத்தார். இதோடு நில்லாமல் எங்கள் குடும்ப தாரங்கள் (Mothi Family Trust, Mothi Trust) அவருடைய திறமையால் வெற்றிக் கரைபாயப் பாடுபட்டார். இதோடு சேவை மனப்பான்மையுடன் Rotary Club, Charities, Urumu Dhanalakshmi Vidyalaya H.S.S, Urumu Dhanalakshmi College எனத் திறமையுடன் நிர்வாகத்தில் பங்குபெற்று சமூகத்தில் நல்ல பெயர் எடுத்தார்.

நண்பர்களுடன் பழகுவதில் அவருக்கு நிகர் அவரே. குறிப்பறிந்து எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டுவதில் வல்லவர். அவருடைய விருந்தோம்பல், அறிவுத்திறன், வியாபாரத்திறமை பெற்ற பண்பாளர் நமது மோதி ராஜகோபால். எங்கள் ஆர்ய வைஸ்ய சமூகத்திற்கு ஒரு கல்வரை விளக்கம்போல் திகழ்ந்து வந்தார். எல்லோரும் மெச்சும்படி வாழ்க்கையை நடத்திக் காட்டியுள்ளார் என்று எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.

அவருடைய மூன்றாம் மகன் குடும்பத்தார் அனைவருக்கும் ஒரே வாசி மோதி சீனிவாசன் தந்தை வழியே வெற்றிகரமாக எல்லோரும் மெச்சும்படி வாழ்க்கை சிறக்க வேண்டுகிறேன். நல்லவராக குடும்ப பல்கலைக்கழகம் என்று வாழ்ந்த என் அன்பு சகோதரர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

24. அபூர்வ மனிதர்

சீனி. விசுவநாதன்,
2 மாடல் ஹவுஸ்லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 600 035.
தொலைபேசி: 044 – 24315757.

2004 ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் தேதி நினைவில் இல்லை. காலை சுமார் 9 மணி இருக்கும். நான் படைப்புகளின் தொகுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். அப்போது என் வீட்டு வாசலில் வந்து நின்றவர் சீனி.விஸ்வநாதன் வீடு இது தானே… அவர் இருக்கிறாரா? என்று கேட்டார்.

வந்தவரைப் பார்த்து “ஆம். நான் தான் சீனி.விஸ்வநாதன். உள்ளே வாருங்கள்” என்று சொல்ல அவரை வீட்டிற்குள் அழைத்தேன்.

உள்ளே வந்தவர் “நான் தான் மோதி ராஜகோபால். திருச்சியிலிருந்து வந்திருக்கிறேன். தங்களை சந்திக்க” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

முதன் முதலாக நான் அன்றைய தினம் தான் மோதி ராஜகோபாலைப் பார்க்கிறேன். ஆனால் அவரைப்பற்றி நீண்டகாலமாக நான் புத்தகப் பதிப்பு துறையில் ஈடுபட்டுள்ள காரணத்தால் ஓரளவு அறிந்திருந்தேன்.

அவர் தம்மை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் நான் அவரை நோக்கி “மோதி பிரசுரத்தின் மூலம் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய “ஜெய ஜெய சங்கரா” நூலை வெளியிட்ட ராஜகோபால் தானே நீங்கள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எதிர்பாராத விதமாகத் தாங்களே என்னைச் சந்திக்க வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது.” என்றேன்.

பதிலுக்கு அவர் “உங்களுக்கு வேண்டுமானால் ஆச்சர்யமாக இருக்கலாம். எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்றார்.

“என்னைப் பார்ப்பதில் உங்களுக்கு என்ன பெருமை?” என்று பதிலுக்கு நான் கேட்டேன்.

தங்களைப் பற்றி என் இலக்கிய நண்பர்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள். தாங்கள் பாரதி நூல்கனை மட்டுமே திருத்தப்பதிப்புகளாக வெளியிட்டு வருவதை என் நண்பர்கள் சொல்லியதுடன், தங்களை
அவசியம் என்னைச் சந்திக்கவும் சொன்னார்கள். நான் அவர்களிடம் அவசியம் சந்திக்கிறேன் என்று சொன்னபோது, தாங்கள் தான் கவிஞர் திருலோகம் அவர்கள் பாரதி பற்றி “ஆனந்த விகடனில் தொடராக எழுதிய “புதுயுகக்கவிஞர்” கட்டுரைகளை நூலாக வெளியிட்டிருக்கும் அரிய தகவலையும் தெரிவித்தார்கள். கவிஞர் திருலோகத்தின் பேரில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. கவிஞரின் நூலை வெளியிட்டவர் என்று அறிந்தவுடன் என் மகிழ்ச்சி இரட்டிப்பானது. சென்னைக்கு ஒரு அவசர வேலையாக வர வேண்டி வந்தது. தகவல் கூட தெரிவிக்காமல் வந்து விட்டேன் – தங்களைச் சந்திக்க. நல்லவேளை நீங்களும் வீட்டில் இருக்கிறீர்கள். கவிஞர் நூலும், தாங்கள் பதிப்பித்த நூல்களும் எனக்குத்
தேவை” என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார்.

அவர் கேட்டுக் கொண்ட படி நூல்களை அவரிடம் தந்தேன். நான் நூல்களுக்கான தொகையை தெரிவிப்பதற்கு முன்னதாகவே தம்முடைய கையில் வைத்திருந்த தொகையை என்னிடம் தந்தார். நான் புத்தகங்களுக்கான பட்டியலை சரிபார்த்து தொகையைப் பெற்றுக் கொள்ள முற்பட்டேன். பட்டியல் தொகை ரூ.1000-ஐ கூட எட்டவில்லை.

அவர் தந்தத் தொகையை எல்லாம் நூறு ரூபாய் நோட்டுகள். எண்ணிப்பார்த்ததில் ரூ.2000 ஆக இருந்தது. பட்டியலைப் பார்க்காத காரணத்தால் அதிகமானத் தொகையை தந்துவிட்டார். என்று நினைத்து நான் “நீங்கள் பட்டியல் தொகையை விட ரூ.1000 அதிகமாகக் கொடுத்து விட்டீர்கள். அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லி ரூ.1000-ஐக் கொடுக்க முற்பட்டேன்.

ஆனால் அவரோ “நான் ஒன்றும் அதிகமான தொகையைத் தரவில்லை. இருபெரும் கவிஞர்களின் நூல்களுக்கு விலைமதிப்பு கிடையாது. எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தரலாம். வந்த இடத்தில் நான் எதிர்பார்த்ததை விடச் சற்று அதிகமாகச் செலவாகிவிட்டது. கையில் இருந்ததைத் தங்களிடம் தந்தேன். அவ்வளவு தான். தாங்கள் செய்கிற பணிக்கு நான் தந்த தொகை ஈடாகாது” என்றார்.

நான் எவ்வளவோ மறுத்தும் அவர் தொகையைப் பெற்றுக் கொள்ளவில்லை. அடுத்தடுத்த பதிப்புகளுக்கு வேண்டுமானால் முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டார்.

மோதி ராஜகோபாலின் இந்தப் பெருந்தன்மையான போக்கு எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. பொதுவாக புத்தகங்கள் வாங்க வருபவர்களில் பெரும்பாலோர், கூடுதலான கழிவைக் கேட்டுப் பேரம் பேசும் இக்காலத்தில், கழிவும் கேட்காமல், பில் தொகையை இன்னது என்றும் பாரக்காமல், கையில் இருந்த கூடுதலானத் தொகையைக் கொடுத்துவிட்டு, இன்னும் எவ்வளவுத் தொகை வேண்டுமானாலும் தரலாம் என்று சொன்ன மோதி ராஜகோபால் அவர்களை நான் ஓர் அபூர்வ மனிதராகக் கண்டேன்.

இதன்பின் எங்கள் உரையாடல் தற்கால இலக்கிய உலகின் போக்கு பற்றியும், எழுத்தாளர் உலகம் தொடர்பாகவும் இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. இதனிடையில் என் பூர்வீகம் பற்றி விசாரித்தார். அவருடனான உரையாடலின் போது, அவர் உருமு தனலெட்சுமி கல்லூரியின் செயலாளர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

கல்லூரியாக படிப்படியாக வளர்ச்சி பெற்ற ஆரம்பகட்ட தனலெட்சுமி வித்யாலாயா பள்ளியின் பழைய மாணவன் நான். ஐந்தாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி முடிய அந்தப் பள்ளியில் தான் படித்தேன். இந்த சேதியை அவரிடம் தெரிவித்தபோது, அவர் ஆச்சர்யபட்டார்.

ஆச்சர்யபட்ட அவர் “”உருமு தனலெட்சுமியின் பழைய மாணவரா நீங்கள்? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. உருமுவில் படித்த மாணவர் ஒருவர் பாரதிப் பணியில் ஈடுபட்டு, பெரும் சாதனை புரிந்து வருவதும், பேரோடும் புகழோடும் விளங்குவதைக் கண்டும் பெருமையாக உள்ளது” என்றார்.

“நான் மட்டுமில்லை நம் பள்ளியில், கல்லூரியில் படித்த பழைய மாணவர்களில் பலர் சமூகத்தில் நல்ல செல்வாக்கோடு விளங்கி” வருகிறார்கள் என்று நான் சொன்னேன்.

எனக்கு தெரிந்த வரையில் இந்திய தேர்தல் கமிஷனராகப் பணிபுரிந்த திரு.டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி “”ராணி”யின் ஆசிரியராக இருந்த திரு.அ.மா.சாமி பிரபல அச்சகமான நான் கம்பெனியின் ராஜரத்தினம் என்று ஒரு சிலரின் பெயர்களைச் சொன்னேன்.

“அப்படியா?” என்று பூரிப்படைந்தார்.

“இன்னுமொரு நலமான சேதியைச் சொல்கிறேன். கேளுங்கள்” என்பதற்காக தெரிவித்து, ரஷ்யநாட்டிற்கு விஜயம் செய்து திரும்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் திருச்சி நகருக்கு வருகை புரிந்த போது பள்ளியில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றதையும், அதுசமயம் டி.ஏ.மதுரம் “”நல்ல பெண்மணி” என்ற பாடலைப் பாடியதையும் குறிப்பிட்டேன்.

திருலோகம் அவர்களும் பள்ளி இலக்கியச் சங்கத்தில் பேசியதையும் நினைவு கூர்ந்தேன். அப்போது அவரடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. இந்தவிதமாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் உரையாடல் நீடித்தது. என்னிடம் அவர் விடைபெற்றுச் செல்லும் போது “”நான் சென்னை வரும்போதெல்லாம் தங்களைச் சந்திப்பேன். நீங்களும் திருச்சி பக்கம் வரும்போது தகவல் தந்தால், நானே சந்திக்க வருகிறேன்” என்றார்.

“அந்த சிரமம் தங்களுக்கு நான் தர விரும்பவில்லை” என்று சொல்ல வரும் போது, “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று இடைமறித்துக் கேட்டார்.

“நான் சொல்லவந்த விஷயம் என்னவென்றால், என் மூத்த மகளை ஸ்ரீரங்கத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறேன். மகள் இருப்பதால் திருச்சிக்கு வருவேன். வரும்போது தங்களைச் சந்திக்காமல் சென்னை திரும்ப
மாட்டேன்” என்று சொன்னதும் அவருடைய அகமும் முகமும் மலர்ந்ததை நான் கண்டேன்.

காலப்போக்கில், அவர் சென்னைக்கு வந்த போதெல்லாம் என்னைச் சந்தித்தார். நானும் திருச்சி சென்ற சமயங்களில் அவரைச் சந்திக்காமல் சென்னைத் திரும்பியதில்லை. சகோதர பாவத்தோடும், பாசத்தோடும் நாங்கள் பாரதி இலக்கியத்தால் ஒன்றுபட்டோம். அவ்வப்போது என் நூல்களை அதிக விலைக் கொடுத்து வாங்கி நண்பர்களுக்குத் தருவதை வாடிக்கையாகவும் கொண்டிருந்தார்.

முக்கிய இலக்கிய நிகழ்ச்சிகள் குறிப்பாக, ஜெயகாந்தன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால், எந்த ஊரில் நடந்தாலும், அங்கே மோதி ராஜகோபாலைக் காணலாம். “காலச்சுவடு பதிப்பகம்” கோவையில் 2006 டிசம்பர் 18-ஆம் தேதி பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75 ஆகிய முப்பெரும் விழாவிற்கு மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

விழாவை அப்போதைய இந்தியக் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார். ஜெயகாந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். விழாவில் பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி ஆகியோர்களின் புகழ்பரப்பிய சான்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர். குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார். பாரதிக்குத் தொண்டு செய்து வருகிறவன் என்ற வகையில் நானும் விருதுபெற்றேன். இந்த விழாவிற்கு மோதி ராஜகோபால் வந்திருந்தார். விழா முடிந்ததும் என்னைத் தேடி வந்து பாராட்டுத் தெரிவித்தார்.

உங்கள் பணிக்கு உரிய கெளரவம் உயரிய பதவியில் இருப்பவரால் கிடைத்து இருக்கிறது. பாரதி புகழ் பரப்பி வரும் ஜெயகாந்தன் அவர்களையும், பாரதி பணியில் ஈடுபட்டுள்ள தங்களையும் ஒருசேர பார்த்ததில் பரவசம் கொள்கிறேன் என்று நெஞ்சு நெகிழ்ந்தார்.

எத்தனை பெரிய உள்ளம். கோவை சந்திப்புக்குப் பிறகு திருச்சியில் இரண்டு முறைகள் சந்தித்தேன். அவர் மரணமடைவதற்கு சுமார் 10-15 நாட்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்
உடல்நலம் பற்றியும், பணியின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். “கூடிய சீக்கிரம் சென்னை வர உள்ளேன். தகவல் தந்துவிட்டு வருகிறேன்” என்றார்.

அவர் சென்னை வரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். விதியின் விளையாட்டு வேறுவிதமாக அமைந்து விட்டது. அவர் மரணமடைந்தார் என்ற தகவல் தான் வந்தது.

அன்போடும் பண்போடும் பழகிய மோதி இறந்துவிட்டார் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

இளசையில் கலை விளக்கமான சுப்பராம தீட்சிதர் மறைந்த போது மகாகவி பாரதி புனைந்த,
“”என்னோ நம்மவர் இயற்றிய பாவம்
இனி இவன் அனையரை எந்தநாள் காண்போம்
அந்தோ, மறதிநம் அமுதினைக் கவர்ந்தான்
நொந்தோ பயனில்லை நுவல யாதுளதோ?”

என்கிற பாடல் அடிகள் என்னை அறியாமல் என் உதடுகள் முணுமுணுத்தன. என் செய்ய? மோதி பழகிய – பேசிய நினைவுகளை மறக்க முடியவில்லை. நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில், நினைவு முகத்தையும் மறக்க முடியுமோ?

மோதியின் பூத உடல் மறைந்தது உண்மை தான். ஆனால், அவர் நம்மோடு உள்ளத்தால் உறவாடிக் கொண்டிருக்கிறார்.

25. மோதி M.S.R

— ம. குமாரலிங்கம்

திருச்சிராப்பள்ளி மாநகரில் ஆர்ய வைஷ்ய குலத்தில்தோன்றிய நல்முத்து அன்பிற்கினிய நண்பர் மோதி S.ராஜகோபால் அவர்கள்.

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற திருக்குறளுக்கு ஏற்ற நல்மனிதர்.

தன் இளவயதில் தந்தையைப் பறிகொடுத்தார். கல்வியை பள்ளியில் தொடர முடியாத நிலையில், தனியாக இல்லத்திலேயே தக்க ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப் பெற்று தமிழ், ஆங்கிலம் இவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களைக் காட்டிலும் மேன்மையாக கல்வியில் தேர்ச்சி பெற்றவர். கல்வியின் பால் ஏற்பட்ட வேட்கையின் காரணமாக, சமுதாயத்தில் கல்வி கற்க இயலாதவர்களுக்குத் தக்க உதவி செய்து அவர்களுக்கு கல்விச் செல்வம் வழங்கியவர்.

தன் வாழ்நாளில் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அவர் எவ்வாறு விளங்கினார். என்பதற்குச் சான்றாக அவர் தாளாளராக பொறுப்பேற்ற உருமு தனலெட்சுமி கல்லூரியின் வளர்ச்சியை எண்ணுபவர்களுக்கு நன்கு விளங்கும். கல்லூரியில் பல புதிய துறைகளை, பல்கலைக்கழகத்தில் முயற்சி செய்து பெற்றவர். மேலும் கல்லூரிக் கட்டிடம் எல்லா வகையிலும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் அமையத் தக்கவர்களின் துணை கொண்டு கல்லூரிக்கு மிக பாதுகாப்பான அரண் அமைத்த பெருமை அவரையே சேரும்.

ஆசிரியர்கள் தேர்வுக் குழுவில் எந்த வித சார்புமின்றி, பரிந்துரைப் பற்றி சிந்திக்காமல் திறமையைப் பற்றி சிந்தித்து நல்லாசிரியர்களை தேர்வு செய்து இன்று திருச்சிராப்பள்ளியில் பெயர் சொல்லும் அளவுக்கு கல்லூரிக்கு மதிப்பை ஏற்படுத்தியவர். மேலும், அவர் பல நூல்களைக் கற்கவேண்டும் என்ற அவாவினால், அவர் இல்ல மாடியில் நூலகம் போன்று அளவிலா நூல்களைச் சேகரித்து உறக்கத்தைப் பாராட்டாமல், நூல்கள் மேல் கொண்ட காதலினால் பல நூல்கள் ஓதியவர். வீட்டில் நூல்களின்மேற்கோள்களை எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவர்.

குடும்பத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து நன்மக்களுடன் மகிழ்வுடன் வாழ்ந்தவர். தனக்கு ஏற்பட்ட எத்தகைய அசெளகரியங்களையும் வெளிக்காட்டாமல், பிறர் நலம் பேணியவர்.

தொழிலில் அவர் மிக சிரத்தையுடன் தன் முயற்சியால் “யுனைடெட் கெமிக்கல் டைமண்ட் ஒர்க்ஸ்” என்ற வணிக ஸ்தாபனத்தை மற்ற பாகஸ்தர்களுடன் இன்முகத்துடன் யாவற்றையும் கலந்தாலோசித்து திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் கீர்த்தி பெற்ற ஸ்தாபனமாக திகழத் துணை புரிந்தவர்.

அவர் சார்ந்த செயற்கை வைர வணிகத்தில், பல சிக்கல்கள், வரி விதிப்பு, போராட்டம் இவைகளில், தான் தலைவராயிருந்து அயராமல் இரவு, பகல் பாராமல், வெளியூர் செல்வதானாலும் சென்று, தகுந்த அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்து தான் ஈடுபட்ட காரியத்தை வெற்றிகரமாக முடித்து, வணிகர்களுக்கும், தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் தொண்டு புரிந்தவர். நாம் ஈடுபட்ட தொழிலுக்கு ஏதாவது நன்மை செய்தாக வேண்டும் என்று எண்ணி எல்லா நேரங்களிலும் மற்றவர்களுக்கு விளங்குமாறு எடுத்துக் கூறியவர். இதற்காக மிகவும் சிறப்பான கருத்தரங்கு நடத்தி மாவட்ட ஆட்சியரைப் பங்குபெற வைத்து வெற்றி கண்டவர்.

“ஈதல் இசைப்பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”

என்று வாழ்ந்து காட்டியவர். மிகப்புண்ணியம் செய்த பெற்றோருக்கு மைந்தராக விளங்கி தன் குடும்பத்திற்கும், தனது சமுதாயத்தில் துணைத்தலைவர் பொறுப்பேற்று சமுதாய சங்கத்திலும் நற்பேறு பெற்றவர்.

நல்ல அறிஞர்கள், சான்றோர்களின் தொடர்பு இவருக்கு இருந்தது. குறிப்பாக இவ்வூரில் G.V. பிள்ளை சென்னையில் புகழ்பெற்ற ஜே.கே. என்றழைக்கப்படும் ஜெயகாந்தன் போன்றோர்களுடன் இலக்கியத்தில் தனக்குள்ள ஈடுபாட்டை நமக்கு தெரியாமலிருந்ததை தெரிவித்தவர்.

தனது தோற்றத்தினாலும், இன்முகத்தினாலும் எல்லோரையும் ஈரத்தவர், சினம் தவிர்த்தவர், பாரதியாரை உள்வாங்கியவர், கம்பனின் கவியையும், அருட்பாவையும், கீதையையும் நன்கு உணர்ந்தவர். இறைவேட்கையில் அசாதரணமானவர்கள். தங்கள் குடும்ப கோவில் அறக்கட்டளைகளை முறையாக ஏற்றுப் போற்றியவர்.

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்”

என்பதற்கேற்ப வாழ்ந்தவர்.

அவர் ஸ்தூலம் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது சூக்குமம், குடும்பத்தார்க்கும், தொழிலுக்கும், நண்பர்களுக்கும் உறுதுணையாக அமையும் என்பது திண்ணம்.

26. கனிந்த நெஞ்சர் மோத்தி ராஜகோபால்

— மு. வேலாயுதம், விஜயா பதிப்பகம், கோவை.

மோத்தி ராஜகோபால் இனியவர். பண்பாளர், எப்போதும் மறக்க முடியாத கனிந்த நெஞ்சர்.

ஜெயகாந்தனைக் கொண்டாடி மகிழ்ந்தவர். கொண்டாடிய நண்பர்களோடெல்லாம் எப்போதும் இணைந்திருந்தவர். ஜெயகாந்தனின்
சபையை அலங்கரித்தவர்களில் முதன்மையானவர். ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது புதுடெல்லியில் வழங்கிய போது நாங்கள் கோவையில் இருந்து புதுடெல்லி சென்றோம். அவர் திருச்சியிலிருந்து புதுடெல்லி வந்து எங்களோடு இணைந்து கொண்டு செயல்பட்டதை எப்பொழுதும் மறக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயகாந்தனின் நாவல்களை மாதாந்திர நாவல்களாக வெளியிட்டு தமிழ்ச் சமூகத்தோடு இலக்கிய உறவு கொண்டிருந்தவர். நிண்பர் திரு. நிர்மதா இராமலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் “”மோத்தி பிரசுரத்தின்” மூலம் மாதாந்திர நாவலாக வெளிவந்த, ஜெயகாந்தனின் “”ஜெய ஜெய சங்கர வை” எப்படி மறக்க முடியும்? “”மோத்தி பிரசுர நாவல்களுக்கு” கோவை முகவர்களாக எங்கள் விஜயா பதிப்பகம் இயங்கியதை இப்போதும் நான் நினைத்துப் பார்த்துப் பெருமிதம் கொள்வேன்.

வாழ்வு சார்ந்து நிகழ்வதும், வாழ்வை விளக்குவதும் வாழ்விலிருந்து உயிர்ப்பதும் இலக்கியம் என்று நம்பிக்கை கொண்டிருந்தவராக விளங்கிய மோத்தி ராஜகோபால் தீவிர வாசகர்.

நல்ல புத்தகங்களைப் படித்தால் அதை உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் திரு. மோத்தி இராஜகோபால் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.

தமிழ்ப் புத்தகங்களை எந்த அளவுக்கு நேசத்தோடு வாசித்தாரோ அந்த அளவுக்கும் தரமான ஆங்கிலப் புத்தகங்களையும் வாசிப்பவராக விளங்கி ஒரு வாசிப்பு அணியையே உருவாக்கி கருத்துக்களைப் பகிர்ந்தும் புரிந்தும் கொள்பவராக அவர் விளங்கினார் என்பதே அவரை மறக்க முடியாத மனிதராக ஆக்கியிருக்கிறது என்று சொல்லுவேன்.

படைப்பும் வாசிப்பும்தான் உள்ளிறங்கும் மனங்களில் தொடர்ந்து செயல் புரிந்து கொண்டே உயிர்க்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த மோத்தி வெறும் வாசிப்பாளராக மட்டுமில்லாமல் நண்பர்களுக்கெல்லாம் உதவும் நன்மனம் கொண்டிருந்தவராக விளங்கிளார் என்பதே பெருஞ்சிறப்பு.

விஜயா பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி திருச்சி தமிழ்ச் சங்கத்தில் ஒரு மாத காலம் நிடந்த போது, தினமும் வருகை தரக்கூடிய உற்சாகமான வாசகராக மோத்தி ராஜகோபால் இருந்தார் என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் என்றென்றும் நம் நெஞ்சங்கில் நிலைத்திருப்பார். அவரின் நினைவுகள் வாழ்க.

27. மோதி என்ற ஒரு பண்பாளர்

— டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்

நண்பர் ஜெயகாந்தன் மூலமாக நான் பெற்ற நண்பர்களில் முதல் வரிசையில் இருந்தவர் மோதி ராஜகோபால். மோதி என்றவுடன் நினைவுக்கு வருவது அவரது பிரசன்னம் தான். எப்பொழுதும் புன்முருவல் பூத்த முகம், பிறரை மதிக்கும் பண்பு, உரத்த குரல் தவிர்த்த எண்ணப்பகிர்தல், பிறர் கருத்தை மதிக்கும் சால்பு, புதுப்புலங்கள், சார்ந்த அறிவு வேட்கை, ஆரவாரமின்றி பிறருக்கு உதவும் பாங்கு, தன் செல்வ நிலையின் நிழலும் தன்மேல் படியாத எளிமை, ஆழ்ந்த இலக்கிய தாகம், தற்சார்பு என்பதைப் பின்னுக்குத் தள்ளும் உண்மையான நட்புணர்வு.

நண்பர் மோதியின் வாழ்வின் முக்கியமான ஓர் அம்சம் பண்பட்ட இலக்கிய ஈடுபாடு. இந்த ஈடுபாட்டின் சிறப்பை உணர்ந்து கொள்ள அவரது வாழ்க்கை பின்புலம் பற்றிய அறிதல் உதவும். அவரது தந்தையார் ஒரு விபத்தில் இறந்தபிறகு வியாபாரம் மற்றும் குடும்பப் பொறுப்புகளை ஏக புத்திரனான மோதி தன் 17-வது வயதிலேயே சுமக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். எனவே முறையான மேற்கல்வி வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. ஆனால் இது அவரது அறிவு தாகத்திற்கு தடையாக விளங்க அவர் அனுமதிக்கவில்லை. தன் சுய முயற்சியினாலும், உள் உந்துதலாலும் தன் இலக்கிய ரசனைப் பயணத்தைச் சிறிதும் தொய்வின்றி, தன் அந்தி காலம் வரை இடையூறு இன்றி தொடர்ந்தார்.
இந்தப் பயணம் அர்த்தமுள்ளதாக, தமிழ் – ஆங்கில நவீன இலக்கியக் கருவூலங்களைத் தழுவியதாகப் பரிணமித்தது. இந்த அரிய சாதனை, அவரைப் பொறுத்த வரை, ஓர் ஆத்மார்த்தமான அழகியல் ரசனை அனுபவமாகவே இருந்தது. அவருடைய பல நண்பர்களுக்கு அவரது இலக்கிய வாசிப்பின் வீச்சு ஆழம் பற்றிய அறிதல் இருக்க அவரது அடக்கம் இடமளித்ததில்லை.

என் சொந்த அனுபவத்திலிருந்து ஒரு வள்ளல் நான் எழுதும் கட்டுரைகளின் படிகளையும், நான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த ஜெயகாந்தன் நூல்களையும் சேர்ந்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்த நண்பர்களுள் முக்கியமானவர் மோதி. இவற்றைப் படித்துவிட்டு, பொருளார்ந்த ரசனை சார்ந்த எண்ணங்களைக் பகிர்ந்து கொள்வதில் முதன்மை ஸ்தானம் நண்பர் மோதிக்கு தான். இந்த பகிர்தலின் போது அவரது இலக்கிய வாசிப்பின் ரசனையின் பல பரிணாமங்கள் பளீரிடும். மனநிறைவை அளிக்கும். அவரது இறுதி நாட்களில் ஜெயகாந்தனின் விழுது குறுநாவலின் எனது ஆங்கில மொழியாக்க நூலை மோதி வாசித்துக் கொண்டிருந்தார் என்றதும் மிகவும் மனம் நெகிழ்ந்து போனேன். நண்பர் மோதி மறைந்து விட்டார். ஆனால் அவரது ஆளுமையின் பரிமளம் நம்மை விட்டு அகலாது.

28. மோதி–FRIEND–PHILOSOPHER–GUIDE

M. லெட்சுமணன்
வழக்கறிஞர், திருச்சி.
போன்: 9443327609

நானும் நண்பர் மோதியும் சுமார் 25 வருடகால நண்பர்கள். என்னை விட 25 வயது மூத்தவர். அவர் வயதிற்கும், குணத்திற்கும், மோதி என்ற நபர் எல்லோருக்கும் என்பதில் FRIEND–PHILOSOPHER–GUIDE எவ்வித ஆச்சர்யமும் இருக்க வாய்ப்பில்லை.

எனது தகப்பனார் வழக்கறிஞர் மு.முத்துச்சாமியும், மோதியும் நண்பர்கள். நானும் மோதியும் நண்பர்கள். மோதியும் நானும் மணிக்கணக்கில் பேசிவிட்டு செல்லும் போதும் எங்களுக்குள்ள வயது வித்தியாச நட்பைப் பார்த்து என் தாய் கேலி செய்வார்கள். என் மனைவியும் அப்படி என்ன உங்களுக்கு அவரிடம் ஒரு ஈர்ப்பு என்று நகைப்பது வாடிக்கையான செயல். அப்பா உங்களுக்கு வயதாகிவிட்டதா, அல்லது அவருக்கு வயது குறைந்து விட்டதா? என்று வம்படிப்பார்கள் என் மகள்கள்.

அவர் இழப்பை நினைத்தால் என்னுடைய இதயம் கனத்து கண்களில் நீர்த்துளிகள் சிதறுகின்றன. ஏன் இப்படி ஒரு கனம் என் இதயத்தில்? நான் இழந்தது தந்தையையா, நண்பரையா? சகோதரரையா என்று தொடர் கேள்வி நம்மில் பலருக்கு உள்ளது. அவருடன் பழகிய நாட்கள் இனிமையாகவும், சிந்திக்க வைப்பதாகவுமே உள்ளது. ஏன் மோதி ஒரு நல்ல என்பதால் மட்டும் தான் என்றால் Friend, Philosopher, Guide இல்லை. அப்படி இருந்தால் நம்மை போல் ஒரு கூட்டம் அவர் இழப்பை பேரிழப்பாக நினைக்கமாட்டோம். ஆழ்ந்து சிந்தித்ததில் எனக்கு விடை கிடைத்தது. நாம் அவரை என்று எண்ணிதான் பழகினோம். ஆனால் அவர் நம்மில் ஒவ்வொருவரையும், என்று Friend, Philosopher & Guide உயர்வாக எண்ணிப் பழகியதால் தான் நம்மால் அவரை மறக்க முடியவில்லை. அவர் நம்மோடு உரையாடும் போது நம்மை ஒரு Friend ஆகவும், நம் வேதாந்த சித்தாந்த கருத்துகளை ஏற்கும் போது நம்மை ஒரு Philosopher ஆகவும், நம் கருத்தை அவர் ஏற்கும் போது நம்மை ஒரு Guide ஆகவும் அவர் நினைத்துப் பழகினார் என்பது தான் உண்மை. நாம் அவர்களை உயர்வாக நினைத்தோம். மாறாக அவர் நம்மை மிக உயர்ந்தவராக நினைத்துப் பழகினார் என்பது தான் நிதர்சனம்.

மோதி! நாங்கள் வாழ்கிறோம். ஆனால் நீங்கள் மட்டும் எப்படி மகனாய், தந்தையாய், கணவனாய், மருமகனாய், மாமனாய், நண்பனாய், நிர்வாகியாய், தொழில் அதிபராய், ஏன்? ஒரு மனிதனாய் அதற்குரிய இலக்கணமாக வாழ்ந்தீர்கள்.

29. எனக்கு தெரிந்த மோதி என்னும் நல்லமுத்து

— பாரதிமணி

அமரர் திரு.மோதி ராஜகோபாலின் பரந்த நண்பர்கள் வட்டத்தில் ஒரே முறை மட்டுமே… அதுவும் ஓரிரு நிமிடங்கள் பார்த்து, அறிமுகமான என்னையும் ஒரு நண்பராக ஏற்றுக்கொண்ட பெருந்தன்மை அவருக்கே உரியது. என் நண்பர்கள் வ.ஸ்ரீநிவாசனும், நாஞ்சில் நாடனும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார்கள். இப்படியும் ஒரு மனிதரா? என்று ஆச்சர்யபட்ட நான் வ.ஸ்ரீ-யிடம் அடுத்தமுறை நீங்கள் ஸ்ரீரங்கம் போகும் போது நானும் வருகிறேன். இரு நாட்கள் தங்கியிருந்து, அவரிடம் நிறைய பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். நல்ல விஷயங்கள் நடப்பதில்லை.

சென்னையில் நடந்த வார்த்தை வெளியீட்டு விழாவுக்கு பிறகு வெளியில் வந்த என்னிடம் நாஞ்சில் மோதி ராஜகோபாலை அறிமுகப்படுத்தி வைத்தார். உயிர்மையில் தொடராக வந்து கொண்டிருந்த என் கட்டுரைகளைப் பற்றி உயர்வாகப் பேசினார். அங்கிருந்து இரவே நேராக ஒரு படப்பிடிப்புக்காக வெளியூர் போக வேண்டியிருந்ததால், நின்று பேச நேரமில்லை. போய் விட்டேன். அடுத்தவாரம் திருச்சியிலிருந்து சுப்ரமணியம் என்ற வாசக நண்பர் சார் இப்பதான் உங்க பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகம் படித்தேன். சென்னையிலிருந்து மோதி சார் அதில் 30 பிரதிகள் வாங்கி வந்து என்னைப் போன்ற நண்பர்களுக்குக் கொடுத்து வாங்கச் சொன்னார் என்றதும் எனக்கு ஆச்சர்யம் நல்ல புத்தகங்களை
படிக்க நேர்ந்தால், அதை நண்பர்களுக்கும் கொடுத்துப் படிக்கச் சொல்வோம். சொந்த செலவில் 30 புத்தகங்கள் வாங்கி வந்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அந்தப் புரவலத் தன்மை எனக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு மோதி சார் அடிக்கடி என்னுடன் பேசுவார். பெரும்பாலும் என் புத்தகங்களைப் பற்றி தான். ஒவ்வொரு கட்டுரைகளையும் நுட்பமாகப் படித்து, அணு அணுவாகப் பாராட்டுவார். பலர் கவனிக்காமல் விட்ட சின்னச்சின்ன Nuances அவர் கண்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது. என்று வியந்து போவேன். இதிலுள்ள தவறுகளைச் சொல்லுங்கள்… என்னைத் திருத்திக் கொள்ள உதவும் என்பேன். நண்பர்களின் தவறுகள் அவர் கண்களில் பட்டதேயில்லை, என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து அவர் தரும் மரியாதை என்னைக் கூசச்செய்யும்.

நண்பர் வ.ஸ்ரீநிவாசன் அவருக்கிருந்த நோயின் ஆரம்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஆனால் மோதி சார் ஒரு தடவை கூட தன் வியாதியைப் பற்றிப் பேசியதில்லை. ஒருநாள் அவர் மகள் என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு மணி சார் இன்னிக்கு அப்பாவின் தமிழ்ப் பிறந்தநாள், டாக்டர்கள் அவரை அதிகம் பேசவேண்டாமென்று சொல்லியிருக்கிறார்கள். உங்களிடம் ஆசி பெறவேண்டுமென்று நினைக்கிறார். படுக்கையருகே உங்கள் புத்தகத்தை வைத்துக் கொண்டு திரும்பத்திரும்ப படித்துக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு நிம்மதியைக் கொடுக்கிறது. கொஞ்ச நேரம் அவருடன் பேசுங்கள் என்றார். அப்போது கூட அவரது நோயின் தீவிரம் எனக்குத் தெரியவில்லை. கடைசி நொடி
வரை அவருக்கு மரண பயம் இருந்ததில்லை. வாழ்க்கையைத் தன் நியதிப்படி வாழ்ந்தவர்.

நாஞ்சில்நாடன் திரு.ராஜகோபாலை மருத்துவமனையில் அனுமதித்ததையும் அவரது நிலைமைப் பற்றியும் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புவார். முந்தையதினம் இரவு நிலைமை கவலைக்கிடம். இன்னும் சில மணிநேரங்களில் தான் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள். இப்போது தான் பார்த்துவிட்டு வீட்டுக்கு போகிறேன் என்று செய்தியனுப்பி இருந்தார். அடுத்தநாள் அதிகாலை அவரிடமிருந்து இன்னொரு மின்செய்தி அது என்னவாக இருக்குமென்று எனக்கு தெரிந்தாலும், அதைத்திறந்து வாசிப்பதை தவிர்த்தேன். சமீபத்தில் இந்த அளவு என்னை பாதித்தது திரு.ராஜகோபாலின் மரணம் தான். அந்தக் காலனை மன்னிக்கவே மாட்டேன். நெருங்கிய உறவினர்களின் மரணத்தின் போதும், அதை இயல்பாக எடுத்துக் கொள்ளும் எனக்கு, இவரது மரணம் ஏனோ ஒரு வெறுமையைத் தந்தது. எங்கள் தொலைபேசி சிநேகிதம் ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. இவரது அறிமுகம் நாற்பது வருடங்களுக்கு முன் ஏன் கிடைக்கவில்லை என்பது தான் என் வருத்தம். அதனாலேயே மோதியின் அத்யந்த நண்பர்களான வ.ஸ்ரீ., நாஞ்சில் பாலசுப்ரமணியன், பி.ச.குப்புசாமி போன்றோரைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. காதிலிருந்து புகை கூட வருகிறது. இவரது புகைப்படம் என்னிடம் கிடையாது. வார்த்தை வெளியிட்ட மோத்தி அஞ்சலி மலரிடமிருந்த இவர் புகைப்படத்தை பெரிது பண்ணி என் ஆல்பத்தில் வைத்திருக்கிறேன். யாரிடமும் மோதத் தெரியாத இந்தப் பண்பாளரை மோதி என்றழைக்காமல் மோதி ராஜகோபால் என்று அழுத்தமாக சொல்லுவோம் என் நண்பர்களில் இவர் ஒரு நல்லமுத்து மேலே போய், இந்த நல்ல நண்பரின் நட்பைத் தொடர வேண்டும்.

அமரர் திரு.மோத்தி ராஜகோபால் நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்… அதை விடவும் மேலாக நேசிக்கத் தெரிந்தவர்!

30. மோதி நினைவுகள்

— தே.ப.பாலசுப்ரமணியம்

முதன்முதலில் மோதி அவர்களை, திரு. ஜெயகாந்தன் அவர்களின் அலுவலகத்தில் தான் சந்தித்தேன்! பார்த்த உடனேயே ஒரு கண்ணியம் மிக்க கனவானாகத் தெரிந்தார்.

அதற்கப்புறம் எத்தனையோ முறை ஜே.கே. உடனிருக்க அவரைக் காண நேர்ந்தது. ஜே.கே.நண்பர்களாகிய நாங்களும், மோதி அவர்களும் நாளடைவில் நன்கு பரிச்சயம் ஆகிவிட்டோம். ஒரு நாள் பழகினும் மேலோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும் அன்றோ!

அவரைக் காண நேர்ந்த காட்சிகளைக் கவனம் கூர்கிறேன். ஒருமுறை ஜே.கே.வும் நண்பர்களுமாக சபரிமலை யாத்திரைச் சென்று, பம்பா நதியில் நீராடிக் கொண்டிருந்த போது நாங்களெல்லாரும் ஆராவாரித்து வரவேற்க, ஓர் அதிசயம் போல் மோதி எங்கிருந்தோ வந்து நின்றார். அந்தமுறை தரிசனம் முடிந்து திரும்புகிற வரைக்கும், மோதி எங்களுடனேயே இருந்தார். நெட்டுக்குத்தான நீலிமலை ஏற்றத்தை, அவர் தனக்கேயுரிய நிதானத்தோடும் உற்சாகத்தோடும் ஏறி வந்த கண்கொள்ளா காட்சி இன்னும் நினைவில் நின்று கொண்டிருக்கிறது.

ஒருமுறை ஜே.கே.வை பார்க்க வந்த மோதி அவர்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் தங்கியிருந்த காஸ்மாபாலிட்டன் கிளப்புக்கு புறப்படும் போது, என்னையும் தன்னுடன் அனுப்புமாறு ஜே.கே. அவர்களைக் கேட்டுக் கொண்டார். மகிழ்ச்சியுடன் ஜே.கே. “போய் வாங்க மணி” என்று அனுப்பி வைத்தார். அன்று இரவு தூங்குகிற வரைக்கும் ஜெயகாந்தன் கதைகளில் ரசம் மிக்க இடங்களை எல்லாம் எனக்குச் சொல்லிக் காண்பித்தார் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் இந்த மாதிரி அவருடன் மூன்று நான்கு முறைகள் தங்கியதில் அவரது விருந்தோம்பும் பண்பை வெகுவாக அனுபவித்தேன்.

ஜெயகாந்தன் அவர்களின் “”ஜெய ஜெய சங்கரா” வெளியிடுவதற் கென்றே மோதி பிரசுரம் தொடங்கினார். தமிழ்நாட்டின் பதிப்புலகில் அது ஒரு புதிய நோக்கு. மாதம் ஒரு நாவல் ஒரு ரூபாய் விலை. இதற்கென வானொலியில் விளம்பரம் செய்யப்பட்டது. லட்சம் பிரதிகள் விற்றன. பிரசுர கர்த்தர் என்கிற முறையில் மோதி அவர்களின் சென்னை விஜயங்கள் அதிகரித்த சந்தோஷமான காலம் அது!

“சில நேரங்களில் சில மனிதர்கள்” சினிமா வெற்றி மோதி அவர்களை மிகவும் சந்தோ­ப்படுத்திற்று. “சி.நே.சி.ம… சி.நே.சி.ம” என்று இதைக் குறிப்பிடுவார். அப்புறம், “புதுச்செருப்பு கடிக்கும்” படம் எடுக்கப்பட்ட காலத்தில், அவரோடு இன்னும் நெருங்கிப்பழகி அவரது சீலங்களையெல்லாம் மிகவும் சிலாகிக்கலானோம். சரியான நபர்களையும் தவறான நபர்களையும் அவர் சரியாகப் புரிந்துக் கொள்கிறார் என்று நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.

தேர்தலில் ஜெயகாந்தன் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட போது, போஸ்டர்கள் ஒட்டுகிற வேலையைச் சினிமா தியேட்டர்களுக்குப் போஸ்டர் ஒட்டுகிறவர்களிடம் ஒப்படைத்து விடலாம் என்று நான் யோசனை கூறினேன். ஜே.கே. அவர்கள், “”வேண்டாம் வேண்டாம்! நாமே ஒட்டுவோம்! நாமே பசைக் காய்ச்சுவோம்!” என்று சொல்லி விட்டார். அதன்படி பசை காய்ச்சுயாயிற்று இரவு பத்து மணிக்கு மேல் போஸ்டர் ஒட்ட ஜே.கே. உட்பட எல்லோரும் கிளம்புவோம், அந்த குழுவிலேயே மோதியும் இடம்பெற்றது எங்களுக்கெல்லாம் ஒரு கும்மாளத்தை தந்தது. ஜே.கே. பசையை ஒரு கையில் அள்ளிப் போஸ்டரின் பின்புறம் தடவுவார். நான் கார் பானெட்டில் ஏறி நின்று ஒட்டுவேன். போஸ்டர்களை எடுத்து எடுத்து தருவது மோதியின் வேலை. தேநீர் கொண்டும் இனிய சம்பா­னைகள் கொண்டும் எங்கள் சோர்வகற்றுவதும் அவர் வேலை தான். அந்தஸ்து பிசாசு அவரை அண்டவே இல்லை என்பதை அன்று உணர்ந்தேன்.

எனக்குத் தெரிந்தவரை அவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு எனும் மும்மொழிகளில் தேர்ச்சி இருந்தது. என் தந்தையார் ஒருமுறை தெலுங்கு கவிவேமன்னாவின் நூல் ஒன்று வேண்டுமென்று கேட்டிருந்தார். அதை நான் பேச்சுவாக்கில் மோதி அவர்களிடம் சொன்னேன். அடுத்த முறை நான் திருச்சி சென்ற போது மோதி அந்த புத்தகத்தைத் தயாராக வைத்திருந்து எடுத்து நீட்டினார். வாசிக்கும் தாகம் கொண்டவர்களுக்கு அதைப் பருக தருகிற பழக்கமுள்ளவர் அவர். என் தந்தையாருக்கு பரம சந்தோஷம்.

மோதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னை அறிவார்கள். மோதியும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அறிவார். தொழில் சம்பந்தமாக நான் எப்போது திருச்சி சென்றாலும்,
உச்சிப்பிள்ளையார் தரிசனமும் மோதி தரிசனமும் இல்லாமல் திரும்பியதில்லை.

அவரது கடையில் வைத்துச் சிலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். வெல்வெட் பதித்த ஒரு பலகையில் வைரங்கள் பரப்பி வைத்து ஒவ்வொன்றாய் ஆராயும் அவரது அந்தத் தோற்றம் எனக்குப் புதுமையானதாகவும் வசீகரமானதாகவும் இருந்தது. கடை ஊழியர்களிடம் பேசும் கனிவு அவ்வபோது உதிரும் சுந்தர தெலுங்குச் சொற்கள் இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்.

அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர் அவர். எதிர்பாரா வைத்திய செலவுகள் பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றில் பெரிதும் உதவுபவர். முப்பது நூற்றாண்டுகளாகப் பணிபுரியும் வித்தியாசமான ஊழியர்கள் பலருண்டு அவருக்கு.

கடந்த ஜனவரி மாதம் கோவை வந்து ஒரு பெரிய ஆபரேஷன் செய்து கொண்டு தனது கொடிய நோயைப் பற்றித் தெரிந்து கொண்டு திரும்பிய அவர் அதைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் போல நோயுற்றப் பிறருக்கெல்லாம் ஆலோசனைகளும், உதவிகளும் நல்கிக்கொண்டிருந்தார். என் மகன் சரசகாந்தனுக்கு தோல் சம்பந்தமான தொந்தரவு ஒன்றுக்கு அருகினில் அழைத்து தைரியம் கூறி, மதுரையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் சென்று வருமாறு செய்தார். அவன் குணமாகி இன்று அவர் நினைவு கொண்டு நிற்கிறான். குணப்படுத்திய அந்தக் குணசாலியைக் காலம் கொண்டு சென்று விட்டது.

மிகப்பெரிய தமிழறிஞர்கள், பாரதி ஆராய்ச்சியில் ஈடுபட்டோர். கல்வி புலங்களின் ஆளுமைகள் என்று பல தொடர்புகள் அவருக்கு உண்டு. கலீல் ஜிப்ரானை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஐம்பதாண்டுகளாக அவருக்கு “பத்து அண்ணாவாக” விளங்கிய திரு.பத்மநாபன், எம்.எஸ்.நாடார் திருலோக சீதாராம், கனரா வங்கி வ.ஸ்ரீநிவாசன், இறையன்பு, திருவாரூர் டாடா என்கிற கணேசன் என்று எண்ணிலடங்கா நண்பர்களைப் பெற்றவர் அவர். பெரும்பாலும் அவர்கள் இலக்கியம், கலை மற்றும் கல்வித் துறைகளைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர்.

எனது “சிவகாமி புத்தகப் பூங்காவை” அவர் தான் திறந்து வைத்தார். திருவேறு தெள்ளியராதல் வேறு என்பர். இரண்டும் பொருந்தியதோர் இடமாக மோதி இருந்தார்.

31. மோதி என்றொரு மாமனிதர்

— பாலசுப்ரமணியன்

அன்புடையீர்,
வணக்கம்.

அமரர் மோதி திரு.எஸ்இராஜகோபால் அவர்களின் நினைவு அஞ்சலி மலர் ஒன்றினை சமர்ப்பிக்கவிருக்கும் செய்தியினை அறிந்து மகிழ்ந்தேன். எனது 40 வருடப் பழக்கத்தின் சில நினைவுகளை மலருக்காக எழுதுகிறேன்.

மோதி ராஜகோபால் அறிமுகமான எந்தவொரு வாசக நண்பரைப் பார்த்தாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி என்ன புத்தகம் தற்போது படிக்கிறீர்கள்? அடுத்த ஒரு எழுத்தாள நண்பரைப் பார்த்தால் இப்போது என்ன புத்தகம் எழுதுகிறீர்கள்?
இந்த அன்பான இரு ஆர்வமான கேள்விகளை என்னிடம் கேட்டுள்ளார். அது ஒரு அற்புதமான கலையுள்ளம் கொண்ட படைப்பாளியிடமிருந்து தான் இத்தகைய வினாக்கள் வரும். படித்ததும் எவ்வித பாரபட்சமும் இன்றி விமர்சிப்பார்.

அவருக்கு எழுத்தாளர் பெருமைக்குரிய ஜெயகாந்தன் அவர்களது நட்பானது கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் போன்ற நட்பாகும். அந்த நட்பு வார்தைகளுக்கு மிஞ்சியதாகும். திருச்சியில் என்னைப் போன்ற பலருக்கு திரு.ஜெயகாந்தனின் நட்பும் அறிமுகமும் கிடைக்க மோதி அவர்களே காரணமாவார்.

திருச்சி மாநகரில் கவிஞர் திரிலோக சீதாராம் பேராசிரியர் திரு.எம்.எஸ்.நாடார், மோதி ஆகியோரின் கவித்துவமான கூட்டணி பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 1965-களில் திரு.ஜெயகாந்தன் இயக்கிய உன்னைப் போல் ஒருவன் என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்தினை, திரு.ஜெயகாந்தன், வர்த்தக ரீதியாக வெளியிட மறுத்துவிட்டார். ஆனால் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் சில ஊர்களில் அதை ஒரு நண்பர்களுக்காக தனிக்காட்சியாக அனுபவிக்கும் வாய்ப்பினைத் தந்தார். அந்த முயற்சிக்கு மூலகாரணமாக விளங்கியவர்களில் மோதியும் ஒருவர்.

மீண்டும் ஜெயகாந்தன் – மோதியின் நட்பைக் குறித்து சொல்ல வேண்டும். ஜெயகாந்தன் தனது நூலான ஒரு அரசியல்வாதியின் கலை அனுபவங்கள் என்ற நூலில் ஒரு அரிய சம்பவத்தை எழுதியுள்ளார். திரு ஜே.கே. அதைப் படப்படிப்பு செய்து கொண்டிருக்கும் வேளையில் கலையின் பால் உள்ள ஆர்வத்தால் அவரே முன்வந்து ரூ. 10,000 ஜெயகாந்தனிடம் கொடுத்த நிகழ்ச்சியினைப் பற்றியும் எழுதியுள்ளார். நானும் அவரும் நெடுங்கால நண்பர்கள் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினர்கள், நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நானும் அவரும் கொண்ட, இலக்கியப் பரிமாற்றங்கள் என்றும் என் நினைவில் நிற்கும்.

பாரம்பரியமான பொன்நகைத் தொழிலில் ஈடுபட்ட புகழ்மிக்கக் குடும்பத்தில் பிறந்த அவர் வணிகத்தை மட்டும் முக்கியமாகக் கொள்ளாது, கலை உள்ளத்தோடு வாழ்ந்தது சிறப்பான செய்தியாகும். அவரது இல்லமே ஓர் கலைக்கோயிலாக, நூல்கள் வீற்றிருக்கும் காட்சிப் போற்றிப் புகழத்தக்கது. கல்விப்பணியில் அவர்கொண்ட ஆர்வமும் மறக்க முடியாததாகும். அவரது கல்விப் பணியினைப் பற்றி எழுத நேர்ந்தால்அதுவே ஒரு கட்டுரையாகும். அவரது மனிதநேய மாண்புகளைப் பற்றி எழுதினால் அதுவே என் தலைக் கட்டுரையாகும். வாழ்க மோதியின் புகழ்!

32. தாத்தா விதைத்த விதை

J.S. உதயசங்கர்
பட்டர் வர்த் ரோடு,
திருச்சி – 2.

மாலைநேரம் சரியாக கடிகாரத்தின் சிறியமுள் 6-ஐத் தொட்டிருக்கும். எங்கள் வீட்டின் அழைப்பொலி 6 முதல் 6:15க்குள், அந்நேரத்தில் அந்த ஒலிக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது.

எட்டிப்பார்த்தேன். வெளியே கார் நின்று கொண்டிருந்தது. இச்சமயத்தில் என் தந்தையார் ஏதேனும் படித்துக் கொண்டிருப்பார் (அ) எழுதிக் கொண்டிருப்பார். தனக்கே உரிய அந்தக் கம்பீரக்குரலில் “போய் யாரென்று பார்” என ஆணைப் பிறப்பித்து விடுவார் அந்த அழைப்பு மணியோசை நிற்பதற்குள்.

துறுதுறுவென இளைமையின் துள்ளலில் சென்று “வாங்க அங்கிள்… அப்பா உள்ளே இருக்கிறார்… என்றேன். இது அப்பாவைச் சந்திக்க வருபவர்களை நான் பொதுவாக வரவேற்கும் பாணி.

வந்திருந்தவர் அடிக்கடி அப்பாவைச் சந்திக்க வருபவர் இல்லை. அதே சமயம் சந்திப்பை வெகு சீக்கிரம் முடிக்கும் பழக்கமுடையவரும் இல்லை. அவர் கையில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. கண்களுக்கேற்ற கண்ணாடி அணிந்திருந்தார். சந்தன நிறத்தில் சட்டையும், வெண்மை நிற வேட்டியும் அவரை மிகச்சரியாக அடையாளம் காட்டும்.

அவரை நான் இவ்வாறு ஆராய்ந்து கொண்டிருந்த போது, கண்ணா என்னை “தாத்தா என்று கூப்பிடு ரா” என்றார். “சரிங்க தாத்தா, உள்ளே வாங்க…” எனச் சொல்லிவிட்டு அப்பாவிடம் ஓடினேன்… “அப்பா உங்களைத் தேடி ஒருத்தர் வந்திருக்கிறார்… அவரைத் தாத்தா எனக் கூப்பிட வேண்டும் என்றார்” என்றேன். அப்பாவின் முகத்தைச் சுளித்தது என்னுடைய குழப்பமான வரிகள். வெளியே வந்து பார்த்தவர் ஒரு நொடி ஆட்டம் கண்டு விட்டார். பாரதியார் கூறியது போல, “பரிதி முன் பனியாய்”

“வாங்க சார் வாங்க…” என்று கூவிக்கொண்டே வாசல் வரை ஓடினார். இரண்டு விஷயங்களைக் கவனித்தேன்.

என்னிடம் காட்டிய கம்பீரமானக் குரல் தொண்டைக்கு அடியில் அடைக்கலம் கொண்டுவிட்டது.

அப்பா ஓடிய ஓட்டத்தின் வேகம் எனது வேகத்தை விட இரண்டு மடங்கு.

மணியோசையாய் அப்பா வரவேற்று முன்வர யானை போல் பின்னே வந்தார். அந்தப் புதுமனிதர்.

என்னை அங்கிள்ன்னு கூப்பிடுறான் சார்…

அவனுக்கு நான் “தாத்தா” ன்னு சொல்லுங்க சார் என அப்பாவிடம் கூறியபடி என் கன்னத்தைக் கிள்ளினார்.

சிரிப்பொலிக்கு பின் அப்பா என்னிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார்…

இவர்தான் Mr. MOTHI S. RAJAGOPAL…
உருமு தனலெட்சுமி கல்லூரியின் செயலாளர்

முன்பு அப்பா ஓடிய ஓட்டத்தின் வேகத்திற்கு அர்த்தம் புரிந்தது எனக்கு. சிரித்து விட்டு என் அறைக்குள் படிப்பதற்காக ஓடிவிட்டேன் இரவு 9 மணி இருக்கும். வந்து பார்த்தேன். முதலில் இருந்த அதே அமர்வில் இருக்கும் மங்காத உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அம்மா வந்து இருவரையும் உணவருந்த அழைத்தார்கள்… அப்போது தான் இருவருக்கும் மணி 9:30- என்றே புலப்பட்டது. மெல்லிய குரலில் மறுத்துவிட்டு இன்னும் அரை மணி நேரம் பேசிவிட்டுக் கிளம்பினார் தாத்தா. இதுதான் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு-அதன் பிறகு வரும்போதெல்லாம் நானும் அவரும் குறைந்தது மணி நேரம் ½ பேசுவோம். (அப்பா ஆரம்பிப்பதற்கு முன்பாக). தாத்தா என்னிடம் நிறையப்பேரைப் பற்றிக் கூறியிருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் தொடங்கி வில்லியம் வேர்ட்ஸ்வர்த் வரை பேசியிருக்கிறோம்.

இதேபோல் ஒருநாள் என்னிடம் ஒரு கேள்விகேட்டார்.

“பாரதியின் மிகச்சிறப்பான குணாதிசியம் எது? என் சிறிய மண்டைக்குக் கேள்விதான் புரிந்தது… பதில் தெரியவில்லை… நீங்கள் சொல்லுங்க தாத்தா” என்றேன்… சிரித்த வண்ணம், POSITIVE THINKING என்றார்.

என் சிறுவயதில் அந்தச் சொற்றொடரை எனக்குத் தெரிவித்து விளக்கம் கொடுத்தவர் அவர் தான். அவரின் உயிர்பறவையானது உடம்பென்னும் கூட்டைவிட்டுப் பறந்திருக்கலாம்… ஆனால், அவர் கூறிய அந்தச் சொற்றொடர் என் மனக்கூட்டை விட்டு பறக்குமா? இல்லை என்னைப்போல் எத்தனையோ மாணவ மாணவியரை அவர் சந்தித்து POSITIVE THINKING பற்றி கூறியிருக்கலாம்… அவர்கள் அவரை எங்ஙனம் மறக்க இயலும்?

முளைக்கட்டிய விதை

தாத்தாவுடனான இரண்டாம் சந்திப்பு இது. நான் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாய் தாத்தா செய்த காரியம் அது.

அப்பா என்னை அவர் கல்லூரிக்குக் கூட்டிச் செல்வது அரிதினும் அரிது, அந்த அரிதினும் அரிதான செயல் அன்று அரங்கேறியது. அப்பா என்னை அவர்தம் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். ஏதோ ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வருவதாகவும் அவருடன் கல்லூரி மாணவர்கள் உரையாடப் போகிறார்கள் எனவும் கூறி என்னை மனத்தளவில் தயார் படுத்தினார்.

உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது அப்பாவும் நானும் உள்ளே நுழைந்தோம். அந்த வகுப்பறையின் ஓரத்தில் உள்ள இருக்கைகளில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். வகுப்பு மேடையின் முன்னர், ஒருவர் அமர்ந்தவாறே “மைக்” பிடித்து மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரின் தெளிந்த முகத்தைக் கண்டதும் அவர்தான் அந்த “ஏதோ ஒரு ஐ.ஏ.எஸ்” என உறுதிப்படுத்திக் கொண்டேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்தார் நான் முன்பு குறிப்பிட்ட தாத்தா. உரையாடல் முழுவதும் கவனித்தேன். பாதி புரிந்தது பாதி புரிந்தும் புரியாதது போல் புலப்பட்டது. “என்னடா! இந்தச் சின்னப் பையனைத் தெரியாததெல்லாம் சொல்லிக் குழப்புகிறார்களே!” என நொந்து கொண்டேன்.

ஆம். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கொட்டித் தீர்த்த செய்திகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கான அறிவாற்றலை என் வயது அனுபவமாய்த் தந்திருக்கவில்லை…

உரையாடல் முடிந்ததும் தாத்தா எங்களை நோக்கி வந்தார்.

அப்பாவிடம் மெல்லிய குரலில் ” office-க்கு பையனைக் கூட்டி வாங்க. சாருக்கு டீ ஏற்பாடு செய்திருக்கிறோம்” என முன்னே சென்ற அந்த ஐ.ஏ.எஸ் மேதையைச் சுட்டிக்காட்டினார்.

அப்பாவும் தலையாட்டிக் கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்தார் என் கரத்தைப் பற்றிக் கொண்டவராய்……

office-க்குள் நுழைந்தோம். உள்ளே நுழைந்தவுடன் தாத்தா அப்பாவை வரவேற்று அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். அப்பாவும் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கைகுலுக்கி சிரித்த வண்ணம் அமர்ந்தார்.

நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சாட்சியாய் நான் நின்று கொண்டிருந்தேன். என்னை அருகில் அழைத்து தாத்தா அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தினார். சார் பெயர் இறையன்பு IAS Commssioner for Disiplinary proceedings Madurai என்றார். நெளிந்தவாறே” என அந்தப் Hello sir, I am J.S. UDHAYA SHANKAR Si பெரிய மனிதரிடம் கைகுலுக்கினேன்.

என் பெயரை கேட்டவுடனேயே, There is also a Dancer named Udhaya Shankar, Do you know him? எனக் கேள்வியை என்னிடம் தொடுத்தார். இறையன்பு (எ) அந்த பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி உரையாடலில் கேள்விகளுக்குப் பதில் கூறிச் சலித்து விட்டதோ என்னவோ அவரின் கேள்விக்கணைகளை என்னைத் தாக்கியது.

அப்பா சொல்லி கொடுத்த அடக்கமான குரலில், Sorry sir I don’t know என்றேன்.

It’s fine. There is a Manipuri dancer named udhaya Shankar என அவர் கேள்விக்கு அவரே பதில் அளித்து என்னைத் தெளிவுபடுத்தினார்.

தாத்தா நடுவில், நம்ம சுந்தர் பையன். நல்ல ஆர்வம் உள்ள Sir பையன் உங்களைச் சந்திக்கட்டும் என்று நான் அழைத்து வரச் சொன்னேன்” என்றார். சிரித்துக் கொண்டே என் எதிரகாலக் கனவுகள் பற்றியும், நாம் விரும்பும் பட்டப்படிப்புப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். அந்த இந்திய ஆட்சிப் பணியாளர்.

தாத்தா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த இந்த உறவை நான் தொடர முயற்சி, செய்தேன். அப்பா வாயிலாக முகவரி தெரிந்து கொண்டு இறையன்பு சாருக்குக் கடிதம் எழுதுவேன்.

Scientific Facts by Issac Assimor வந்தார்கள் வென்றார்கள் – முதன்முதலாக புத்தகங்களை எனக்குக் கூறி படிக்கச் சொன்னது இறையன்பு சார்தான்.

“நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு” என்ற குறள் வரியை நான் இப்போது தாத்தாவை நினைத்து நன்றியுடன் நினைவு கூர்கிறேன்…

அவர் பார்த்து வாழ்ந்து விட்டுச்சென்ற புனிதர் சமுதாயத்தின் நினைவுக் கோட்டைக்குள் அவரது ஆன்மா குடி கொண்டிருக்கிறது… ஆம்… அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்…

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

நினைவலைகளுக்குள் சிக்கியவனாய்,
உதயசங்கர்.

33. நான் அறிந்த மோதி

— வெள்ளகுட்டை மா.ஆறுமுகம்

J.K.வினால் அறிமுகமானவர்களில் மோதி அவர்கள் ஒரு நல்முத்துப் போன்றவர். 1960-களில் J.K. தமிழ்நாட்டை ஒரு சக்கரம் போல் சுற்றி வந்த காலத்தில் ஒரு நாள் மோதியை எங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்தார். பயணக் களைப்புத் தீர அவர்கள் எங்கள் நிலத்திற்கு எதிரில், மேலே உள்ள ஒரு தொட்டியிலிருந்து தண்ணீர் கொட்டும் பம்பு செட்டிற்கு குளிக்க அழைத்துச் சென்றோம். அதில் குற்றால அருவியில் குளித்து மகிழும் குழந்தைகள் போல அவர்கள் குளித்து பின் எங்கள் கூரை வீட்டில் தங்கி உண்டு சென்றது தான் அவரை நான் முதலில் சந்தித்தது. அப்போதே அவரது குழந்தைமை என் மனதில் அவரைப் பதிய வைத்தது.

முதன் முதலாக நாங்கள் J . K .உடன் திருச்சி வழியாக சபரிமலைக்குச் சென்ற போது ஓரிரு மணி நேரம் நாங்கள் தங்கிச் செல்ல, தமிழ்நாடு இல்லத்தில் ஓர் அறையைப் போட்டு எங்களை உபசரித்து அனுப்பியது எங்களை நெகிழச் செய்தது.

மறுமுறை சபரிமலைக்குச் செல்லும் போது மோதியும் வந்தார். மலையேற்றம் பொதுவாகக் கடினமானது. காடுமலையேறிப் பழக்கப்பட்ட என்போன்றவர்கள் ஒருவாறு சமாளித்து ஏறினோம். ஓரிடத்தில் மோதி தடுமாறியபோது பின்னால் சென்ற நான் அவரைச் சுற்றி தாங்கிப் பிடித்தேன். தன்னைத் தாங்கி பிடிப்பது யார் என்பது போல திரும்பிப் பார்த்த அவரது நன்றியுணர்வான பார்வை என்னை அவருடன் நெருக்கமாக்கியது. நண்பர்களானோம். ராஜகோபால் என்ற அவரது பெயர் எங்களுக்கு அந்நியமானது. அவரைக் குறிப்பிடும் போது நண்பர்கள் மோதி என்று மட்டுமே சொல்லுவோம்.

அவரது இல்லத் திருமணங்கள் அனைத்திற்கும் ஜே.கேவின் சபையினராகிய எங்கள் அனைவருக்கும் அழைப்பு வரும். ஜே.கே.வுடன் சென்று நண்பர்கள் அனைவரும் அவரது அன்பான உபசரிப்பைப் பெற்று மகிழ்ந்து திரும்புவோம்.

1992-ஆம் ஆண்டு என் மகன் பிரபு­ங்கர் B.Sc. முடித்துவிட்டு MCA சேர பல கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து இருந்தான். அதில் திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியும் ஒன்று. மோதி அக்கல்லூரியின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அக்கல்லூரியிலிருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்த போது என் மகன் திருச்சி செல்வது முதல்முறை என்பதால் மோதிக்கு ஓர் அறிமுகக் கடிதம் கொடுத்து அவனை அனுப்பி வைத்தேன். கடிதத்தைப் பார்த்து சிரித்துவிட்டு MCA சுயநிதி வகுப்புக்காக நடத்தப்படுவதால் நன்கொடை வாங்கிக் கொண்டு மாணவர்களைச் சேர்ப்பதாக நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகவும், ஒரு குறிப்பிட்டத் தொகையைச் சொல்லி அதை நன்கொடையாக வைத்திருப்பதாகவும் அவர் சொல்ல, வீடுகட்டும் வேலையில் ஈடுபட்டிருப்பதால் நன்கொடை தரமுடியாத நிலையில் நான் இருப்பதாக என் மகன் கூறியிருக்கிறான். அதற்கு அவர்” அத்தொகையில் அப்பா முடிந்ததைக் கொடுக்கட்டும் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார். என் இயலாமையால் அந்த ஆண்டு அவன் MCAவில் சேர முடியாமல் போனது.

அடுத்த ஆண்டு மோதி நண்பர் தண்டபாணியின் மகள் திருமணத்திற்குத் திருப்பத்தூர் வந்தார். என்னைப் பார்த்ததும் “ஆறுமுகம் இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் பிரபுவுக்கு இடம் உண்டு. நன்றாகப் படிக்கிற, நன்கொடை தர இயலாத மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு இடம் தர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது”என்றார். என் மகனும் அக்கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்தான்.

நண்பர்கள் பலருக்கு பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். அந்த உதவியைப் பெற்றவர்கள் சொல்லி மட்டுமே நாங்கள் அறிந்திருக்கிறோமே தவிர அவர் எதையும் சொன்னதில்லை. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் செய்யும் வள்ளண்மை அவருடையது.

என் மகன் பொருட்டு திருச்சி செல்லும் போதெல்லாம் அவரைச் சென்று பார்ப்பேன். பணி மிகுந்த அவரது நேரத்தில் சில மணி நேரங்களை எனக்காக ஒதுக்கி, வீட்டிற்கு அழைத்துச் சென்றும், வெளியில் உபசரித்தும் மனம்விட்டுப் பேசுவார். “”நாமெல்லாம் ஜே.கே.வின் பள்ளியைச் சேரந்தவர்கள்” (we belong to the school of JK) என்று சொல்லி பெருமைப்படுவார். திருச்சியில் ஒரு நட்பு வேர் பலமாக ஊன்றியது. அதன் பின்னான சந்திப்புகள் அதற்கு மேலும் நீரூற்றி வளர்ந்தன.

மூன்றாண்டுகளுக்கு முன் திடீரென அவர் உடல்நலம் கெட்டது. அப்போது அவரை ஓரிரு முறை பார்க்கச் சென்ற நண்பர் குப்புசாமிக்கும் அவருக்கு என்ன உடல்நலக்குறைவு என்பது தெரியவில்லை. ஒருநாள் நண்பர் கோவை மணி மூலம் அவர் மறைந்த செய்தி அறிந்து அதிர்ந்து போனோம். எப்படியும் அவர் பூத உடலை பார்த்துவிட வேண்டுமென்று குப்புசாமியும் நானும் திருச்சிக்குப் புறப்பட்டோம் 10 மணி நேரத்திற்கு பின் திருச்சி காவேரிக்கரை மயானத்தை அடைந்தோம். அவர் முகத்தைப் பாரத்தோம். அந்தக் குழந்தை முகம் மாறவேயில்லை. கனிவான அவரது
பார்வையை காண முடியாத படி கண்கள் மூடியிருந்தன. அவரைச் சிதையேற்றித் திரும்பும் போது தானும் அழுது தீர்த்தது போல் மேல் வானத்தில் தன் சிவந்த கதிர்களுடன் சூரியன் மறைந்தான். எங்கள் மோதியும் மறைந்து போனார். அதோடு எங்களது நட்பு வேரும் அறுந்தது. திருச்சி மிக அந்நியமாகி தூரமாய் போய்விட்டது. அவரது நினைவுகள் மட்டும் எங்களுள் ஆழ வேரூன்றியது. அது எங்களுள் என்றும் நிலைத்திருக்கும்.

34. நினைவில் நிறைந்த மோதி

— எஸ். ராஜகோபால், கிருங்கை சேதுபதி

“வணக்கம் மோதி பேசுகிறேன்” என்று சொல்லி எழுப்பும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையின் விடியலையும் இப்போதும் நினைவில் கொள்கிறேன். ஏதோ வேலையாக அல்லது ஓய்வாக இருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவர் இன்னமும் கோவையிலோ, அமெரிக்காவிலோ ஓய்வாக திருச்சியிலோ இருப்பதாகவே தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் அமரத்துவம் எய்தியதை அறிவுச் சுட்டிக்காட்டும் போதெல்லாம், தூல உடல் கொண்டு உதவி நம்முடன்
உரையாடி வந்த மோதி அவர் அவர்கள் நினைவுடல் ஏந்தி மௌனமாக நம்முடன் உறைந்திருப்பதாகவே உணர்கிறேன். அதனால்தான் இப்போதும் கூட கோவை. திருமணி அவர்கள் அமரர் மோதி அவர்களின் நினைவு மலருக்கு எழுதித்தர சொல்லிக் கேட்டபோது எழுத முடியாது தவிக்கிறேன். இனியும் தட்டமுடியாத நிலையில் எழுத முனைகிறேன்.

தொடரும் குருத் தோழர் திரு.சந்திரகாந்தன் அவர்களால் சொல்லப் பெற்றும் தோழர் ஜே.கே. அவர்களின் “கலையுலக அனுபவங்கள்” வாயிலாக, வாசிக்கப் பெறும், “ஜெய ஜெய சங்கரா” வெளியீட்டின் வாயிலாக அறியப்பெற்றும் இருந்த அன்புநிறைச் செல்வர் மோதி அவர்களை முதன்முதலாகச் சந்தித்தது தோழர் ஜே.கே. அவர்களின் “”சபை”யில் தான்.

தோழர் ஜெயகாந்தன் அவர்களின் சகஹிருதயர் வட்டத்து முதன்மையர்களுள் ஒருவராகத் திகழ்பவர் திரு.மோதி எஸ்.ராஜகோபால் அவர்கள். ஓசையில்லாது மலரும் தாமரை மொட்டு போல ஒரு புன்னகை. கண்கள் வழிய கசியும் அன்பை மௌனமாகச் சொல்லிக் காட்டும் மெல்லிதழ்கள். அசையாமல் ஜே.கே சபையின் அத்தனை நிகழ்வுகளையும் ஆழ உள்வாங்கி ஒரு களிறு போல் காத்திருந்து பார்த்திருக்கும் அந்த நேர்த்தி இவற்றின் ஒட்டுமொத்தத் தோற்றம் அவர்
தான்.

அதிகம் பேச மாட்டார். எப்போதாவது ஏதேனும் சந்தேகம் கேட்கும் தொனியில், பழைய நிகழ்வுகளுள் ஒன்றனை நினைவுப்படுத்தி, ஓரிருத் தொடர்கள் சொல்லி, “”அது சரிதானா ஜே.கே.” என்பார். அதில் குழைவுதான் அதிகம் இருக்கும். அந்த வினா நிச்சயமாக ஐயவினாவாக இருக்காது. ஜே.கே அவர்கள் சொல்லிக் கேட்க வேண்டும் என்கிற ஆவல்தான் தொனிக்கும். “இன்றைக்கு சபைக்கு பதிலாக புதிய நபர்கள் வந்திருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் அதைக் கேட்க வேண்டும்” என்ற அக்கறையில் தோன்றியதாக இருக்கும் என்பதைப் பின்னர் உணர்ந்து கொள்ள முடியும்.

நாங்கள் பொன்னமராவதியில் நடத்திய “”தொடரும் விழா”விற்குத் தோழர் ஜே.கே அவர்களுடன் வந்திருந்தார். முடிந்த மறுநாள் திருச்சியில், அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சென்று பார்த்த போது புன்னகைத்தார். அன்பைக் கண்களால் தெரியக் காட்டினார். அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவரைச் சந்தித்த போதிலும் அவர் அதிகம் பேசியதில்லை. கோவையில் தொடரும் விழாவினை 2002-இல் நிகழ்த்திய போதிலும் வெளியிடப் பெற்ற “தொடரும் ஒளித்திரளை” தோழர் ஜெயகாந்தன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். அன்றையச் செய்தியை வெளியிடும் நிருபர் கேட்டபிறகு தான் அவர் திருச்சிராப்பள்ளி உருமு தனலெட்சுமி கல்லூரி செயலர் என்று தெரியவந்தது. அவ்வளவு அடக்கம். எளிமை, ஐயந்தீர்க்க வினவிய போது”ஆம்”என்று புன்னகைத்தார். வியப்பாக இருந்தது.

அடுத்த சில மாதங்களில் திருச்சி நகருக்கே பணிநிமித்தம் செல்ல நேர்ந்தது. திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்த்துறையில் பணி. அதுசமயம் சென்னை ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தின் சார்பில் ஜெயகாந்தன் அவர்களின் கட்டுரைகள் இருபெரும் தொகுப்புகளாக வெளிவந்திருந்தன. அதன் வெளியீட்டு விழாவினை 14.09.2003 என்று தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைத்து நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தோம். தவத்திரு குன்றகுடி
பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில், அப்போதைய தஞ்சைத்தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் மாண்பை இ.சுந்தர மூர்த்தி அவர்கள் நூல்களை வெளியிட திரு.மோதி அவர்கள் பெற்றுக் கொண்டார். டாக்டர். கே.எஸ்., கவிஞர் சிற்பி உள்ளிட்ட பலரும் பங்கேற்ற விழா அது. முடிந்த இரவில் வழக்கம் போல் தோழர் ஜே.கே அவர்களின் தலைமையில் “சபை” கூடியது. அதே அமைதியோடு நிறைகுடமாய், மோதி இருந்து அன்புடன் உபசரித்தார்.

பின்னர் ஓரிரு முறை சந்திப்பு “வீட்டுக்கு வாங்க” என்பார் தொடரும் இதழ்களோடு போவேன். மகிழ்ச்சியாக உபசரிப்பார். பேச்சு பெரும்பாலும் தோழர் ஜே.கே பற்றி இருக்கும் அல்லது பாரதி குறித்து அமையும். சிறிது நேரத்தில் விடை பெற்றுக் கொள்வேன்.

குன்றக்குடி திருமடத்தின் வழி வந்த நல்லுறவுகளுள் ஒன்று முனைவர் பா.சுந்தர் அவர்களின் நட்பு, அவர் உருமு தனலெட்சுமி கல்லூரியில் பணியாற்றியவர். அவரது “”குன்றக்குடி அடிகளார் பணிகள்” நூல் வெளியீட்டு விழா, குன்றக்குடித் திருமடத்துக் குழுவின் குருபூசை விழாவில் நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் வெளியிட மோதி ராஜகோபால் அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாவில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள், அப்போதும் அதே நிறைவான புன்னகை தான் மோதியிடம் இருந்தது. எப்போதும் எதையும் ஒரு புன்முறுவலால் எதிர்கொள்ளும் ஆற்றலை இறைவன் இவருக்கு வழங்கியிருப்பார் போலும் என்று நினைத்துக் கொள்வேன்.

தோழர் ஜே.கே அவர்களின் ஞான பீட விருது பெற்ற செய்தியை ஒட்டி திருச்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், “வயல்” எனும் நிகழ்ச்சியில் “ஞானபீடத்தில் ஜெயகாந்தன்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஏற்பாடாகி இருந்தது. பிரான்மலை மங்கைபாகர் திருவிழா நாள் அது. அன்றைய மண்டகப்படி எங்களது. அன்றையதினம் அங்கேயே ஒரு நூல் வெளியீட்டு விழாவும், அவசர அவசரமாக முடித்துவிட்டு, காரிலேயே கிளம்பியும் சற்றே தாமதமாகத் தான் அரங்கிற்குள் நுழைய வேணடும். நல்ல கூட்டம். காத்திருப்பின் எரிச்சலில் அரங்கினர் இருந்திருக்க வேண்டும். கும்பிட்ட வண்ணம் மேடைக்கு வந்து பேசத் தொடங்கினேன். முன்வரிசையில் மோதி அவர்கள் இருந்தார். எப்போதும் போல் அதே புன்முறுவல். தோழர் ஜே.கே அவர்களின் படைப்புகளைச் சுட்டாமல் அவர்தம் பண்புநலன்களை, அறிவின் மேதைமையை, அவர் எப்போதும் எங்களுக்கு ஞானபீடமாயத் திகழும் வெற்றியை, சபையில், சமூகத்தில், நண்பர்கள் வட்டத்தில் அவருள் சுடர்ந்தெழுந்து பரவிய ஞான ஒளியை உணர்வு பொங்க விரித்துக் கொண்டே போனேன். அனைத்துக் குறிப்புகளும் மோதி அவர்களின் அன்பு ததும்பும் கண்களில் இருந்து பெற்றதொரு அனுபவம். முடிந்தபிறகு கைகுலுக்கினார். அவர்தம் அன்பு நண்பர்கள் உடன் உரையாடிய போதும் அவர் அதிகம் பேசவில்லை. ஜே.கே.யின் பரிவோடு பார்த்த அவர்தம் கண்களில் அன்பு மிளிர்ந்தது.

திருச்சியில் இருந்த போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் பெரிதும் நிகழவில்லை. புதுவையில் பணி கிடைத்தது. வந்தபின்னர் சந்திப்புண்டு. திருச்சி சென்றால் நான் எப்போதும் தங்கும் பா.சுந்தர் அவர்களின் இல்லத்திற்கு திடீரென்று முன்னறிவிப்பின்றி அவர் வருகை தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதுசமயம் பா.சுந்தர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டு வந்திருந்தார். நலம் விசாரிக்கவும், நல்லன்பைப் பகிர்ந்து கொள்ளவும்
வேண்டி அவரது வருகை அமைந்திருந்தது. அதற்கான சம்பிரதாயங்கள் எதுவுமின்றி வெகு இயல்பாக அவர் வந்திருந்தார். அன்பு ததும்பத்ததும்ப நிறைய பேசினார். சுந்தர் தம் புதல்வன் அப்பு என்ற ஜீ.சு.உதயசங்கர் மீது அவர்தம் பரிவு மிகவும் கனிந்திருந்தது. நள்ளிரவு தொடும் நேரம் வரைக்கும் மனம்விட்டுப் பேசி விடைபெற்றுக் கொண்டார். நாங்கள் இருந்த அறை முழுக்க அவர்தம் அன்பே நிறைந்திருந்தது.

பின்னர் சிங்கம்புணரியில் தொடரும் விழா மற்றும் ஜீவா
நூற்றாண்டு விழா எடுத்திருந்தோம். அவ்விழாவில் தோழர் ஜே.கே அவர்களின் பேட்டிகளின் தொகுப்பாக “ஜெயகாந்தன் பேட்டிகள்” நூலைத் தவத்திரு அடிகளார் வெளியிட வழக்கம்போல் மோதி அவர்கள் பெற்றுக் கொண்டார். ஜே.கே. அவர்களின் உரைகளைத் தொடரும் இதழில் படித்து முடித்த பின்னர். பேசும் முதல் சகஹிருதயராக அவரே இருப்பார். முடிந்த மட்டிலும் ஜே.கே சபையின் அங்கத்தினராக அவர் இருப்பது பெரும்பாலும் நிகழும். எல்லோரும் விடைபெற்றுக் கொள்ளும் போது வழக்கம் போல் “இன்ஷா அல்லாஹ்” என்று கூறிக் கொள்வோம். நிறைவின் முழுமையாக நிலவென அவர்தம் முகம் ஒளிரும்.

இடைப்பட்ட காலத்தில் அவர் நலக்குறைவாகி மருத்துவச் சிகிச்சைப் பெற்று வந்ததாக அறிந்தேன். திருச்சிக்கு வந்திருந்த போதில் பா.சுந்தர் அவர்களோடு சென்று சந்தித்தேன். மிகவும் மெலிந்திருந்தார். நலம் விசாரிக்கவோ, நோய்ப் பற்றிப் பேசவோ எனக்கு தெரியவில்லை. அதன் தாக்கம் மிகுந்திருந்த அவரிடத்தில் அதுபற்றி பேசாதிருப்பதே சரியெனப்பட்டது. அண்மையில் படித்தவற்றை வாசிப்பு நேர்த்தியோடு அழகுற பகிர்ந்து கொண்டார். நெடுநேரம் ஆகிவிட்டதே என்று சுந்தர் அவர்கள் கவலைப்பட்டதற்காக அவர் விடை தந்தாரே ஒழிய அவருக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. பல எழுத்தாளர்களுக்கு அவர் புரவலராகி உதவியிருக்கிறார் என்று பலரும் பாராட்டுவதுண்டு. அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. அவருக்கு எல்லாமும் தோழர் ஜே.கே. தாம். அந்தவகையில் அவர்தம் அன்பிற்கு இலக்கானவர்களோடு அன்பு பூண்டிருப்பதை விட வேறென்ன பெரிதாக வேண்டும் என்ற எண்ணம் எழும். திருச்சிராப்பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் அவரது கல்லூரியைக் கடந்து தான் தினமும் பணிக்கு வந்திருக்கிறேன் என்றாலும் அவரது கல்லூரிக்கு இன்றுவரை போனதில்லை என்பது எனக்கே வியப்பாக இருக்கிறது.

பின்னர் கோவையில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். அதன் சுவடு ஏதும் தெரியாவண்ணம், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை அவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வரும். எனது நூல்கள் பற்றிப் பேசுவார். எழுதிய கவிதைகளைச் சொல்லிக் கேட்பார். “சொற்பொழிவாளர் பாரதியார்” நூல் பற்றிப் பேசுவார். அன்பும் பாராட்டும் கனிந்த வார்த்தைகளில் பாரதிநேயம் மிளிரும். கூடவே பாரதியின் கவிதை வரிகளில் ஏதேனும் ஒன்றை தன்னுணர்வுக் கலந்து பேசுவார். பாரதியார் கவிதைகளைச் சொல்லடைவுகளோடு பதிப்பிக்க வேண்டும் என்பார். “வார்த்தை இதழ்” பற்றியும் அதில் ஜே.கே. அவர்களின் பதில்கள் பற்றியும், திரு. பி.ச. குப்புசாமி அவர்கள் எழுதிவரும் “”ஓர் ஆரம்பப்பள்ளி” ஆசிரியரின் குறிப்புகள் பற்றியும் விதந்தோதுவார் நண்பர் ரவிசுப்பிரமணியம் இயக்கிய ஜே.கே. அவர்கள் பற்றிய ஆவணப்படத்தின் உரையாடல்களை எழுதி அச்சிட்டு விநியோகிக்கவும் விருப்பம் கொண்டார். நானும் செய்வதாக வாக்களித்தேன். காலம் கடந்து விட்டது. அவர் விடைபெற்று விட்டார். வழக்கம் போலான புன்முறுவலோடு தன்னைத் தேடி வந்த காலனின் தோளில் கைபோட்டுக் கொண்டு அவர் கிளம்பியிருக்க வேண்டும். “”நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடைய மேலோர்களில் ஒருவராக” அவர் நிரந்தரமாகி விட்டார்.

இப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் முதல் அழைப்பின் போதெல்லாம் அமரர் மோதி அவர்களே நினைவில் மலர்வார். செவியின் ஆழத்தில் “”நான் மோதி பேசுகிறேன்” என்ற குரல் எழுந்து தாழும். மனதுள் அவர் முகம் மலரும். கைத்தொலைப்பேசியில் அவர் எண் இன்னமும் இருக்கிறது. அழைக்காவிட்டாலும் பேசாவிட்டாலும் அவர் இருப்பு என்னுள் நிரந்தரமானது தானே.

புன்முறுவல் பூக்கின்ற பொன்மகனே!
அன்பொழுகப் பேர்சொல்லி
அழைத்துவிட்டு குறுஞ்சிரிப்பை
மெல்லிசையாய் செவிநிரப்பி
மோதி எனப்பேர் சொல்லும்
அன்புநதி சுரக்கின்ற
அண்ணல் இனி வருவாயா?
அக்கறையின் வேர் பரப்பி
அரவணைப்பு தருவாயா?
காவிரியின் நதிக்கரையில்
கல்லூரி செயலர் எனப்
பணிவிரித்த பண்பாளா
பார்க்க இனி யாரிருப்பார்?
பூவிரித்த புன்னகையின்
பொலிவிருக்கும் உன்முகத்தைப்
பார்க்கமுடியாத படி
போனதெங்கே புண்ணியனே?
பண்புகளின் மேல் தமது
பாத்திரத்தைக் கட்டமைத்து
நண்பர்களின் மத்தியிலே
நல்லுறவு பேணவந்து
அன்புறவால் எப்போதும்
அனைவரையும் ஒன்றாக்கி
புன்முறுவல் பூக்கின்ற
பொன்மகனே காண்பதெங்கே
மிஞ்சமுடியாத படி
மிக்கதுயர் பட்டிருக்கும்
நெஞ்சுடைய அன்பர்களை
நினைத்தும் கலங்கவில்லை
அஞ்சி மறையவில்லை
ஆணவமும் காட்டவில்லை
கொஞ்சி அழைத்துதான்
கூடினையோ மரணத்தை?

நுரைத்ததும்பும் பொன் அமுதக்
கோப்பையின் முன் அலையில்லா
சமுத்திரத்தைப் போல் ஒடுங்கிச்
சபையிலிருந்து ஜே.கேயின்
அமுதமொழி பிசகாமல்
அத்தனையும் உள்வாங்கி
குமுதமென முகமலரும்
கோமகனே காண்பதெப்போ?
எது வரினும் உவகையுடன்
ஏற்கின்ற உள்ளத்தை
வரிவரியாய் ஜே.கேயின்
வாசகத்தால் பெற்றவரே
வாசகர்கள் அரங்கிலெலாம்
வந்தமர்ந்து ஜே.கேயின்
நேசர்களின் உள்ளமெலாம்
நிறைந்தவரே போனதெங்கே?
புடித்த நூல் அத்தனையும்
புயன்நுகர்ந்த பாங்கினை நம்
மனம்கொள்ள விரிக்கின்ற
மாண்பினை நாம் கேட்பதெங்கே
மனத்திருக்கும் சோர்வகற்றி
மலர்விக்கும் நல்லுரையை
உன்னைத்தவிர யாரளிப்பார்?
உரைப்பாயோ மோதி ஐயா?
எப்போதும் என் கவிதை
முன்படிக்கும் நாயகனே
இப்போது இக்கவிதை
உனக்காகப் பாடுகிறேன்
தப்பாமல் நீ கேட்பாய்
தன்னலமே யில்லாத
அப்பா நீ நிறைந்தாய்
அன்பர்களின் உள்ளமெலாம்

35. அன்பெனும் கடலில் அகப்பட்ட அரிய முத்து

— ஆன்மநேய அன்பு நண்பர்,
சொ.தவசீலன்

அவர்தான் என்றும் எனது அன்பிற்குரிய ஆன்மநேய அன்பு நண்பர். மறைந்த திரு.மோதி ராஜகோபால் அவர்கள் இவரை முதன்முதலில் கலை, இலக்கிய ஞானி ஜே.கே (ஜெயகாந்தன்) அவர்களின் சந்நிதானத்தில் (சபை) சந்திக்க நேர்ந்தது.முதல் சந்திப்பில் அவருடன் நான் எதுவும் பேசவில்லை. பேசுவதற்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை..

முதல் சந்திப்பில் என்னைக் கவர்ந்தது, அவரது குழந்தை போல் பால் வடியும் முகம். அவரது சப்தமில்லா, சலனமில்லா உள்ளத்தில் இருந்து உலா வரும் புன்சிரிப்பு அவரது தூய்மை மலர்போன்ற வெள்ளை எட்டுமுழ வாயில் வேஷ்டி. அதற்கேற்ற அழகான அரைக்கை சட்டை. அவைகளுக்கெல்லாம் அணிகலனாக அவரது நெற்றியில் நிறைந்திருந்த வெண் திருநீறு. அவரது முதல் சந்திப்பின் பிறகு அவரைப் பற்றி சில நண்பர்கள் மூலமாக அவரைப் பற்றி அறிந்து கொண்டேன்.

அடுத்தடுத்த சில சந்திப்புகளில் நாங்கள் பரஸ்பர அறிமுகத்துடன், மிக அன்புடன் பழகினோம். மதுரையில் மேல ஆவணி மூல வீதியில் உள்ள இவரது உறவினர் இல்லத்திற்கு அடிக்கடி வருவார். வரும்போழுது தவறாது டவுன்ஹால் ரோட்டில் உள்ள எனது கடைக்கு வருவார். வந்து என்னை மகிழ்ச்சியுடன் சந்தித்ததையும், அவருடன் இலக்கியம், ஆன்மீகம், சமூகம் பற்றிய பல அரிய வி­யங்கள் குறித்து பேசப்பட்டது எனது நினைவில் பசுமையாக உள்ளது. நான் வருவது தங்களுக்கு ஏதும் இடையூறு இல்லையே…. என்று பீடிகையுடன் தான் உள்ளே வருவார். அப்பொழுது நான் ஜே.கே அல்லது உலகின் உன்னத எழுத்தாளர்களின் புத்தகம் ஏதாவதொன்றை படித்துக்கொண்டிருப்பேன். நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி கேட்டுவிட்டு, பின் ஜே.கே உடன் பல உன்னத எழுத்தாளர்களுடன் அவரை ஒப்பிட்டு, ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை வாசிப்பது போல என்னுடன் கூறுவார். அப்பொழுதுதான் அவரது விசாலமான அறிவும் உலக இலக்கியங்களைப் பற்றிய ஆழமான அறிதலையும், அறிந்து அகமகிழ்ந்தேன். இவர் சொத்துடைமையில் மட்டும் பணக்காரர் அல்ல, அறிவுடைமையிலும் மிகப்பெரிய பணக்காரர் என்று நினைத்து நெஞ்சமெல்லாம் பரவசம் அடைந்தேன்.

ஒருமுறை என்னைக் கடையில் சந்திக்கும்பொழுது உயர்ஞானி ஓஷோ அவர்களின் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஓஷோவைப் பற்றி என்னிடம் கேட்டார். எனக்குத் தெரிந்தவைகளைக் கூறினேன். அவர் ஒன்றும் தெரியாதது போல் அமைதியாக் கேட்ட பின்பு ஓஷோவை நான் பத்து வருடங்களுக்கு முன்பே நேரில் சந்தித்து, அவரிடம் தீட்சையும் வாங்கியுள்ளேன் என்று கூறினார். அவர் அமைதியாகக் கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஓஷோவைப் பற்றிய அவரது கருத்துகளுக்கும் எனக்கும் பல முரண்பட்ட கருத்துகள் இருந்தன. இருப்பினும் என் மனம் புண்படாது, அவரைப்பற்றிக் கூறியதும், அவரது நயத்தக்க நாகரிகமும் எனது நினைவில் என்றும் இனிதே உலா வருகிறது.

தற்பொழுது அவருடன் சந்தித்து அகமகிழ அவர் உயிருடன் இல்லை. இருந்தாலும் அவருடன் அன்புடன் கூடிய இனிய நிகழ்வுகளும், நினைவுகளும் என்றும் மறையாது. அவரது ஆன்மநேய அன்புள்ளம், அன்பர்களது நெஞ்சங்களில் என்றும் இறவாது நிறைந்திருக்கும்.

36. MOTHI – A MAN OF MANY FACETS

P. Mohamed Shafi

They say a good book has no ending. It equally applies to good human beings also. Even after their death, they continue to live, for they are revered and remembered by their family and friends.

Friendship is caring and sharing and we shared our inner most dreams and desires without any barriers and inhibition. There were days when our sublimated thoughts surfed about inscrutable ways of God which elevated us to a higher plane and there were days when we discussed the banal pleasures of this temporal world. Whether we are in a higher plane or grounded to the earth, contribution of Mothi was immense and the time spent in his company were nothing but an enticing experience.

As founder members of Trichy Junior Chamber we have organized projects for the bene it of the community and programs for Leadership development. I had the opportunity to have the ring side view of Mothi blooming into a perfect leader. As a leader he was a source of inspiration to many and commanded respect and love. He was a leader who never sought the spot light and motivated people to develop the right attitude, for he believed that the attitude decides the altitude.

In pursuit of knowledge, books reinforced our bond of friendship. I was an ardent admirer of Mothi who can review the books written by Ayn Rand and conduct a discourse on Nihilism and Nirvana. Reading was not just a hobby but the purpose of his life. He read not only to acquire knowledge from outside but also to evolve wisdom from inside. He was like a Stained glass window who could sparkle and shine with the light of knowledge from outside and reveal his true beauty with the light of wisdom from within.

As a fellow citizen of Tiruchirappalli I saw a growth and development of Urumu Dhanalakshmi College with admiration. Institutions are not founded with bricks and mortars but with concepts and convictions. They are not built by masons but by the leader who has a clear vision coupled with missionary zeal. Mothi Rajagopal was not an idealist but a practical and realist who can transform his dreams and hopes into concrete reality. He was the driving force that accelerated Phenomenal growth of Urumu Dhanalakshmi College and he would have done much more but for his untimely death.

I record these words not just to remember Mothi Rajagopal, but to re-live the happiest moments of my life, to re-animate the ring side view of blooming leadership scaling new heights, to re-discover the sparkle and shine of knowledge and wisdom and to re-engrave and pay respects to a man who had nothing but love and affection for everyone of us.

They say a good book has no ending and it equally applies to our friend Mothi Rajagopal also. He may not be physically present in our midst but he lives in our thoughts and his value based life continues to guide our deeds.

37. AN HUMBLE TRIBUTE TO MOTHI S. RAJAGOPAL

Prof. David Sydney Basil
Head, Dept. of English (Rtd)
U.D. College, Trichy.

The ancient town of Tiruchy, in the center of Tamil Nadu has a very interesting past with the cultural lourish on the banks of the placid river Cauvery. The town has witnessed a series of occupations for the last twenty centuries, by a variety of rulers who left a legacy to mark their stamp in some form or the other which is the cultural identity of the people who live here today. The incredible mark of it’s religiosity is virtual in the landmarks of the town from temples, churches and mosques, which speak volumes of it’s tolerant attitude that encouraged every visitor to acknowledge this great inbuilt quality that has been handed down through the ages to this day.

The ancient Tamil cultural in luence that was a foundation of this tolerance emanates from the times of sangam literature which preached and practiced the brotherhood of man in the most poignant lines recalled even today “Yaathum Voorea Yavarum Kealeer”. The true democratic sprit of a race is re lected in it’s fearlessness and con idence that no alien invasion, physical or cultural could jeopardize the native language, culture or religion that is so strongly entrenched in the collective consciousness of the people of the soil. The British raj, introduced a system of education with the implementation of Lord Macaulay’s treatise on education in India, in the 19th Century, with a caution not to interfere in the teaching on the native predominant languages like Tamil, Sanskrit and Urudu. His rather methodical approach to recognize the excellent human resources with the advantage of the local language is a clear indicator that he acknowledged and accepted the cultural heritage of this land. The growth in higher education in Tiruchirappalli began with the shifting of the St. Jospeh’s College from Nagapattinam to Tiruchirappalli followed by the Railway work shop, which added luster to the exciting business in the town. Tiruchirappalli became the destination for education and offered a whole gamut of a facilities from schools to colleges for the people all over the state and even the neighboring states (then the inclusive province of Madras).

Urumu Seshachalam Chettiar a modest man, who hailed from the village called Urumu situated in Nellore District in Andhra Pradesh, shifted his business to Trichy to share the commercial advantage that any keen entrepreneur would choose, given the potential for growth on one side and neglect of the downtrodden on the other side, gnawed him succeed in his business and ponder on the social role destined for him. The human squalor disease and natural calamities orphaned many children who would have died of starvation unnoticed or ignored by the then British authorities who had no apathy for the inherent poverty of the masses. It was at this juncture that Sri. Seshachalam Chettiar launched his orphanage in 1942, which became a primary school to house and feed the most underprivileged children who had no parents and no other means of livelihood.

Mothi S. Rajagopal was one of the founding members who joined Urumu Seshschalam Chettiar in the noble venture with a burning ire to further the cause of education in the city of Tiruchirappalli by expanding the school into a Higher secondary
School and later in 1970 to launch the irst co-education Arts & Science College in Trichy in Kattur a semi urban area in the periphery of the town. He left school due to the sudden demise of his father who had great plans for his higher education. His desire for knowledge was so
persistent that he exploited all possible avenues to keep himself informed. He was a self learnt scholar, he read all popular, ancient, current literature and his understanding always manifested itself when he interacted with the celebrated Literary minds of the day in the Tamil language like the novelist Dr. Jayakanthan, Dr. Irai Anbu IAS and Nanjil Nadan to mention those close to him.

I met him on many occasions, as an educationist and as secretary of the college (UDC), in various capacities and was very impressed with his grasp of higher education and the ground reality, where the people lacked basic economic security for a living but still needed to liberate them from their poverty through higher education. It was his approach that was admirable to the whole idea of higher education that projected UDC as one of the premier institutions for the most marginalized sections of society. I had the honour of working in UDC for a decade and I retired from Collegiate Education, when Mothi S. Rajagopal was the Secretary of the college.

He was a voracious reader of all type of books, though he always enjoyed iction and poetry. He participated in every meeting of the Book Club of Tiruchy, where he acted many a time as a moderator in initiating discussions and giving a sense of direction to the whole review without a prejudice or partisan opinion which was very scholarly and mature. Every member of the book club had very high regards for Mothi S. Rajagopal and his suave approach that endeared him as a scholar impartial in his utterances however controversial the book or the review may be. In one of his meetings he acknowledged that much of what he speaks is the knowledge he gathered from the Book club and from books. His knowledge of History Education and Current Affairs was greatly admired by teachers like me and even the dominant powers of higher education like Vice Chancellors, Registrars, Directors of Education and Men of Caliber. He was very modest in the midst of educationalist; but always scored a valid point to prove himself-learnt scholarship that was more practically acceptable than book acquired knowledge of the trainer scholar.

He was a Charismatic person on the Campus, he was endeared by the members of the faculty very affectionately, he knew the happening of every department and role that each one played in the college. His bondage with the staff was so, that he would take time of from business activities and call on the teachers at their homes to assure them of his good will and support. This gesture built a very strong bond, and motivated every teacher to put in his best for the college.

Mothi S. Rajagopal was instrumental in improving the infrastructure of the college especially in the last ten years of his life to keep the college abreast with the developments in higher education in Tiruchy. He would often remark that the man power was the resource that needed immediate attention, followed by physical developments like infrastructure. He would casually drop into the college and informally elicit information on the events that are taking place on the campus. It was his earnest desire to see that everyone who entered the portals of this college, succeed in a be itting manner. As the mission of the College and the founder was to the most marginalized, he was very particular that whatever possible within the parameters of academics should be done to ensure success and libration of poverty through education. His empathy for the needy was so deep that as long as he was secretary, of the College, he deliberately kept the fee structure within the reach of the downtrodden. When he was questioned by detractors from other neighboring colleges, on this ‘unviable’ fee structure as they called it, he would simply quote the founder’s mission and staunchly defend the cause for which this college was instituted. His love for the growth of education among the poor was so close to his heart that he would permit un-mandated educational concessions from his own pocket without announcing it or making it public. He practiced the charity advocated by Christ in the holy Bible. His convictions were strong that he never, minced words on playing his role as the pivot of the institution, when he would declare his belief in the philosophy of the Bhagavat Gita-do his duty irrespective of the outcome. He was always happy with the results of the college, and urged the teachers and students to strive for better results. His capacity as business personnel was proven, but his business instinct never in luenced his role as an educationalist and administrator. I had many a personal experience while interacting with him, in my capacity as teacher of the department of English, where he would endorse every positive initiative to make our student community competitive. When pointed out by the Dept of English, that the language skills of students could be maintained only through effective composition writing, which was not a part of the of icial work. The welfare and progress of the students were close to his heart that he would walk the extra mile to ensure their success. TheDepartment of English took stock of the situation in the year 2000 and organized remedial coaching classes to enhance the results, which was noticed by the secretary who rewarded those who volunteered with a remuneration which was totally unexpected, as the whole program was voluntary. He was so grateful and modest to us that he said that his compensation was nothing in comparison to our dedicated service which he constantly repeated in all meetings to boost the morale of the teachers and bring out the best in them for the most-needy students. His intentions were genuine and he was thrilled when the college and the student succeeded. He honoured the department by the treating us a party and he con idently declared that his connection of these irst generation students were potentially endowed if they were given the right guidance. He attended the GCP book club meetings regularly in the college, and interacted with the club members at every meeting, where the rarest books were reviewed by the students. He took a keen interest in the Newspaper (English) readings session, when he actively negotiated with the New Indian express championed the cause of the students and obtained a 67 percent concession in the cost for students to involve them in the program. His dedication to all the genuine causes of promoting real education among the under privileged students, to make them employable and productive to the nation was what he held, closest to his heart. He requested the alumini who were members, to share their personal experience of success to inspire the present generation of students. Perhaps I consider myself lucky to have been a close friend and employee who enjoyed the maximum rapport with Mothi during my dedicated long tenure in Urumu Dhanalakshmi College. The little I have known of him I have rendered here in the most humble fashion. He was a true achiever in his one way. He achieved many titles from different sources. He empathized with the needy, practiced austerity in his personal life, broke away from the past, challenged the illogical echelons of power in the corridors of education to build a niche for himself. He was a great admirer Rabindranath Tagore the lives that inspired him most he used to quote often on many occasion, “my mind has the wings of freedom and I know that I shall cross in the dark”. He always considered his thirst for knowledge as ‘wings of freedom’ and illiteracy as the dark which he crossed with such a self-styled craftsmanship with absolute accuracy that won the college a B++ grade by the NAAC in 2007. He was never hostile to anyone, his suave behavior, his pleasing demeanor and his approach to higher education made him the beacon light to those most in need of higher education to liberate then from the bondage of poverty which impressed me the most. Though I had the privilege of lending my services to about ive colleges, innings at UDC was the most satisfying and my acquaintances with Mothi is remembered everyday when I often recall the most suitable lines of Tagore the national bird of India, that keeps ringing in my ears when I think of the inimitable Mothi S. Rajagopal, 

“When my days are done, my leave taking hushed
In a final silence,
My voice will linger in the autumn light
And rain-laden clouds
With the message that we had met”.

This is a tribute to Mothi S.Rajagopal’s contribution to higher education. He will go down in the annals of the history of Trichirappalli, as an outstanding doyen and he is in the club of the illustrious sons of this great historic city which produced so many leaders like the late R.Venktraman, and Dr.A.P.J. Abdul Kalam who owe their education to Tiruchy.

38. A GENTLE MYSTERY: SRI MOTHI RAJAGOPAL

Prema Nandakumar

Sri Mothi Rajagopal remained a mystery to me till the time he decided to withdraw from the world. I met him irst in the book club which was being held in Dr. Menon’s house a quarter century ago. Sri.G.C.Pattabiram had come home and made sure that I agreed to speak in the club. Another revered friend whom I knew already was Sri Vanmikanathan. These were great book lovers and knew my father, Prof. Srinivasan Iyengar. When they learnt that Nandakumar and myself had settled in Srirangam for good, they said I should come and address the book club.

Dr. Menon was a family friend, my husband told me. Indeed the warm welcome given by the Menons and their son Balaji and daughter-in-law when I stepped into their well-appointed house in Cantonment almost overwhelmed me. Soon there was a small, choice group of person, around twenty in number. Dr. Menon introuduced me as the daughter-in-law of the Thatachariar house and I proceeded to review the chosen book.

After the speech it was time for interaction. It was then I noticed the gentle voice of Sri Rajagopal. I vaguely remember it was an incisive question (I took it for granted that this was a Professor in a local college and continued to think so as he always carried a couple of books in his hands and was a little withdrawn). I felt though he was a Professor he was a person who preferred to remain closed with this thoughts. His disarming smile continued to be a face for me in the Book Club for the next meetings.

For me it was pleasant surprise to know that he was a businessman. I was doubly happy when I found a mutual friend Sri T. N. Ramachandran. It is sad that I came to know that Sri Rajagopal’s mother-tongue was Telugu only after his passing. Having been brought up in Andra Pradesh one who feels more at home on the Telugu language, I could have exchanged so much of information on Telugu language, I could have exchanged so much of information on Telugu books with him.

It was so like not to speak himself, or project himself in any manner. But his generosity of understanding was such that he would never fail to ring me up if he came across a book by me or an article or review by me that hand interested him. One day he rang me up and said: “I am calling you to convey my mother’s happiness in reading your article on Subramania Bharathi” I just had no idea of what he was saying till he clari ied that he had been to Thanjavur a day earlier and had bought a few copies of a collection of essays on Bharathi which I had written. He said his mother was deeply touched by what I had written about Bharathi’s song “Enthayum thayum”. Needless to say, I felt blessed. He also said his mother loved reading books.

For a couple of years we did not meet because the Book Club had gone into hibernation. This was because Dr. Balaji passed away. When the book club was reviewed and it was decided to hold the meeting in our house at Srirangam, he was very happy. His immediate reaction: “Good! You have a broad road for the cars to be parked”. The meetings were held in an upstairs room. He patiently climbed the stairs and took part in a few meetings. When I gave him a copy of my father’s biography of The Mother Pondicherry Ashram he was delighted.

Unfortunately I had no idea that he was suffering from a terminal illness. When he told me he had known my mother-in-law, Kumudini, I gave him my biography of this great writer which had been recently published. He agreed to my request to review the book in the club. “I knew her very well and have read her work So my talk will be based on irst-hand knowledge”. It is unfortunate that this could not be, for soon after he became very ill. Not long after the Club had to pass a condolence resolution on the loss of this eminent and invaluable friend.

When I remember the very few telephonic conversation and personal encounters with Sri Rajagopal, I can only term them by one word: ‘noble’, Noble in speech deeds and thought. I had been to the Urumu Dhanalakshmi College the other day and was touched to see his portrait and learnt from the Chairman of the institution of his many benefactions including his passion for making the library into a top-class unit of the College. Then I realized noble persons like him are never lost to posterity, as James Mastineau had said”: All that in the world’s past history, and especially the great and the good, are never lost”. That way our Sri Mothi Rajagopal is indeed immortal.

Afterword

– Mothi R. Srinivasan

When Swami Vivekananda returned to India after his irst visit abroad, he said, “India I loved before I came away. Now the very dust of India has become holy to me, the very air is now to me holy; it is now the holy land, the place of pilgrimage, the tirtha.“ The father I loved before he passed away. Now his very name that I carry has become holy to me, the very path he tread a pilgrimage, the tirtha.

The friendship that existed between my Father Sri Mothi S Rajagopal and Dr. D. Jayakanthan was legendary. We are planning a lecture in memory of the friendship of these between 2 literary giants. The Jaykanthan and Mothi S. Rajagopal Memorial Lecture itself was conceptualized by Professor Dr. Sydney Basil, Retd. HOD, Dept. of English, UDC, Trichy. The write up to the memorial as presented by Prof. Sydney ensues this article. Writer “Nanjil Nadan” (Nanjil uncle) suggested that it be an ‘Endowment Lecture’.

We are in the process of constituting a body which will carry out this activity.

The Jayakanthan and Mothi S Rajagopal Memorial Lecture

Dr. D. Jayakanthan the most acclaimed Tamil novelist and doyen of the most influential writers of the times was a close friend of Mothi S. Rajagopal of Tiruchy. Jayakanthan’s writings stirred the Collective Consciousness of the readers who were his fans. Mothi S. Rajagopal was a fan who was able to gauge the force behind the writings of Jayakanthan. He read his writings and endeared himself to the persona of Jayakanthan and their mutual influence was felt by the society, which they served in their divergent ways.

Tamil Nadu in the early 1970’s was undergoing a change due to the social advancement created by writers, and planners which matched with the dividend that liberated the illiterates and gradually raised the levels of literacy that made these two rare friends Jayakanthan and Mothi Rajagopal relevant to Tamil Society. Jayakanthan wrote for the masses about the masses and raised their awareness, which urged the common man to shake of his slumber of superstition and backwardness to move ahead to be abreast with rest of the advanced countries of the world. His writings spurred progressive thought. While Mothi S Rajagopal, was a practical businessman who knew the value of modern education and spent his time and money on liberating the less fortunate from illiteracy through the institutions he stewarded. These two friends had a common goal of transforming the society they lived in, and each one worked for it together in divergent ways.

Books, Book club, Book exhibition was a fervor with Mothi S Rajagopal, who spent valuable portion of his time other than his businesses in nurturing these activities with the celebrity Dr. Jayakanthan. The long elaborate discussions and deliberations by these friends have left an indelible mark on the society they lived for and worked for.

It is the duty of the next generation that we are to remember these two great souls who strode the stage, dictated their views exuberantly, served the people relentlessly in their own ways and influenced us through the legacies they have left in the form of knowledge. “The Jayakanthan and Mothi S Rajagopal Memorial Lecture” is initiated to keep the fervor of the flame they lit over the past few decades, and remember their contribution by friends and well wishers and their associates.

As a precursor to “The Jayakanthan and Mothi S Rajagopal Memorial Lecture” this book on Mothi S Rajagopal with articles and memories of the man and his achievement, by his contemporaries and friends who worked with him and shared all his ideas for the welfare of the Tamil society is released.

முனைவர் திரு. Dr. D. ஜெயகாந்தன் மற்றும் திரு. மோதி S. ராஜகோபால் நினைவு சொற்பொழிவு

அக்காலத்தின் புகழ் பெற்ற சிறப்பு மிக்க நாவலாசிரியர் டாக்டர். ஜெயகாந்தன் அவர்கள் திருச்சியை சேர்ந்த மோதி எஸ். ராஜகோபாலின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஜெயகாந்தனின் கருத்து எழுத்துக்கள் அவருடைய ரசிகர்களின் எண்ண உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்தவை. ஒரு ரசிகராக திரு. ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு பின்னால் இருக்கும் ராப்புச் சக்தியை திரு. மோதி எஸ். ராஜகோபாலால் அறிய முடிந்தது. அவர் திரு. ஜெயகாந்தனின் எழுத்துக்களைப் படித்து அதன் ஆழமையில் தன்னை உணர்ந்தார். அவர்களின் பரஸ்பர ராப்பு அவர்களால் பயனடைந்த வெவ்வேறு சமூகத்தால் உணரப்பட்டது.

1970-ல் முற்பகுதியில் பல்வேறு எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட சமூகமாற்றங்கள், தமிழகத்தில் உணரப்பட்டன.

அச்சமூகமாற்றங்கள் எழுத்தறிவு இல்லாத மக்களை விடுவித்து, படிப்பறிவு நிலைகளை படிப்படியாக உயர்த்தியது. திரு. ஜெயகாந்தன் மற்றும் மோதி எஸ். ராஜகோபால் ஆகிய இரு அரிய நண்பர்களையும் தமிழ்ச் சமூகத்திற்கு பொருத்தமானதாக மாற்றியது.

திரு. ஜெயகாந்தன் அவர்கள் மக்களுக்காக எழுதியார். தனது எழுத்துக்கள் மூலம் சாதாரண மனிதர்கள் அவர்களது மூடநம்பிக்கை மற்றும் பிற்போக்குத்தனத்தின் மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உலகின் பிறமுன்னேறிய நாடுகளுடன் இணையாக முன்னேறி, செல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது எழுத்துக்கள் முற்போக்கு சிந்தனைகளை தூண்டின.

திரு. மோதி எஸ். ராஜகோபால் ஒரு சிறந்த தொழிலதிபராக இருந்த போதும், அன்றைய நவீன கல்வி முறையின் மதிப்பை அறிந்தவர், மேலும் பல ஏழை மாணவர்களை அவர் வழிநடத்திய கல்வி நிறுவனத்தின் மூலம் படிப்பறிவு பெற்று அறிவாளி பெற தனது நேரத்தையும் பணத்தையும் செலவழித்தார்.

இந்த இரு நண்பர்களும், தாங்கள் வாழ்ந்த சமூகத்தை மாற்றுவதற்காக வந்துக் கொண்ட பொதுவான இலக்கை அடைய வெவ்வேறு வழிகளில் இணைந்து செயல்பட்டனர். நம் கருத்துக்களை ஆணித்தரமாக, சமூகஅரங்கில் வந்த மக்களுக்கு தங்களுடைய வழிகளில் இடைவிடாது சேவை செய்து, தனியாத தாக்கத்தின் தங்கள் கருத்துக்களை அறிவித்து, அறிவு வடிவில் அவர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை நினைவு கூர்வு அடுத்த தலைமுறையின் கடமை.

திரு. ஜெயகாந்தன் மற்றும் திரு. மோதி எஸ். ராஜகோபால் நினைவு சொற்பொழிவு 2022 இவ்விருவரின் நினைவாக, அவர்கள் கடந்த சில சந்தர்ப்பங்களாக ஏற்றிய அறிவு சுடரின் அனலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்குடனும், மேலும் அவர்களது நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களின் நினைவுகளை பகிர்வும் நோக்குடன் துவக்கப்பட்டது.

இந்தநூல் அவரது சமகாலத்தவர்களின் பதிவுகள், அவருடன் பணியாற்றிய நண்பர்களின் நினைவு கட்டுரைகள் மற்றும் திரு. மோதி எஸ். ராஜகோபால் அவரது நினைவுகள் மற்றும் சாதனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறது. புத்தகங்கள் நூல்கள், புத்தகக் கழகம், புத்தகக் கண்காட்சி என்று தீராத தாகம் கொண்ட மோதி எஸ். ராஜகோபால் தனது வியாபார நேரங்களை தவிர மற்ற நேரங்களை இலக்கிய சேவைகளில் செலவிட்டார்.

இவ்விரு நண்பர்களின் நீண்ட விவாத கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் அவர்கள் வாழ்ந்த பணிபுரிந்த சமூகத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளன.